இ.த.ச 499
யாராவது, ஒருவருடைய நன்மதிப்பை கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அல்லது அவருடைய நன்மதிப்பை கேடு உண்டாக்கும் என தெரிந்தும். ஒருவரைப்பற்றி மற்றவர்கள்
அறியும் படி பேச்சால் அல்லது எழுத்தால் அல்லது அறிகுறிகளால் அல்லது காணும் காட்சிப் பொருட்களால் வசைப் பாடுவதையும் அல்லது வசைப் பாடி வெளியிடுதலையும் அவதூறு செய்தல் என்கிறோம்.
கீழ் கண்டநிலைகள் அன்றி மற்ற நிலைகளில் அத்தகைய செயல்பாடு தண்டனைக்குரியது.
விளக்கம் 1 -
ஒருவர் உயிருடன் இருக்கும் போது அவருடைய நன் மதிப்புக்கும் செல்வாக்குக்கும் கேடு உண்டாக்க கூடிய வசைச் சாட்டினை அவர் இறந்தப்பிறகு அவருடைய உறவினர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் மனதைப் புண்படுத்த வேண்டும் என்ற கருத்துடன் அத்தகைய வசைச் சாட்டு வருவதால் அது குற்றமாகிறது.
விளக்கம் 2 -
நபர்கள் கூட்டாக இயங்கும் நிர்வாகம் அல்லது அத்தகைய பங்குதாரரை கொண்டு இயங்கும் ஒரு நிர்வாகத்தை அல்லது சங்கத்தை பற்றி வசைப்பாடுவதும் அவதூறாகும்.
விளக்கம் 3 -
பிறரைக் கேலி செய்வதும் அல்லது இரட்டை அர்த்ததில் வசைப்பாடு சொற்களை உபயோகப்படுத்துவது அவதூறாகிறது.
விளக்கம் 4-
எல்லா வசைசாடுதலும் ஒருவருடைய எண்ணத்தை தவறாக மாற்றாது.
ஆனால் பிறருடைய கணிப்பில் ஒருவருடைய ஒழுக்கம் அல்லது எண்ணத்தை அல்லது அறிவு அல்லது அல்லது ஜாதி அல்லது தொழிலை இழிவுப்படுத்தக்கூடிய அல்லது ஒருவருடைய நாணயத்தை குறைக்க கூடிய அல்லது அவருடைய உடல் அருவருக்கத்தக்கது அல்லது அந்த நிலையில் உள்ளது என்ற எண்ணத்தை உண்டாக்க கூடிய வசைப் பாடுதல்.
அவருடைய நன் மதிப்புக்கு கேடு விளைவிக்க கூடியது என்றுக் கொள்ளப்படும்.
Section
499-
Defamation
Explanation 1-It may amount to defamation to impute anything to a deceased person, if the imputation would harm the reputation of that person if living, and is intended to be hurtful to the feelings of his family or other near relatives.
Explanation 2-It may amount to defamation to make an imputation concerning a company or an association or collection of persons as such.
Explanation 3-An imputation in the form of an alternative or expressed ironically, may amount to defamation.
Explanation 4-No imputation is said to harm a person's reputation, unless that imputation directly or indirectly, in the estimation of others, lowers the moral or intellectual character of that person, or lowers the character of that person in respect of his caste or of his calling, or lowers the credit of that person, or causes it to be believed that the body of that person is in a loathsome state, or in a state generally considered as disgraceful.
Illustrations - உதாரணங்கள்
(a) A says-"Z is an honest man; he never stole B's watch" ; intending to cause it to be believed that Z did steal B's watch. This is defamation, unless it fall within one of the exceptions.
அ - எ என்பவர் சொல்கிறார் சி என்பவர் நல்ல மனிதர் அவர் பி என்பவருடைய வாட்ச்சியை திருடவில்லை என்று, இது மறைமுகமாக சி என்பவர் திருடிவிட்டார் என வசை பாடுகிறார் நிச்சயம் இங்கு எ என்பவர் சி யைப் பற்றி அவதூறு கூறுகிறார். இது குற்றமாகும்.
(b) A is asked who stole B's watch. A points to Z, intending to cause it to be believed that Z stole B's Watch. This is defamation unless it fall within one of the exceptions.
ஆ - எ என்பவர் யார் பி யுடைய வாட்சியை திருடிவிட்டார் என கேட்கிறார் சி யிடம். சி அவர்கள் டி என்பவர் திருடிவிட்டார் என பொய்யாக கூறுகிறார். இங்கு சி என்பவர் அவதூறு சொல்கிறார். இது சட்டப்படி குற்றமாகும்.
(c) A draws a picture of Z running away with B's watch, intending it to be believed that Z stole B's watch. This is defamation, unless it fall within one of the exceptions.
இ - எ என்பவர் ஒரு படத்தை வரைந்து சி என்பவர் பி யின் வாட்சை திருடிக் கொண்டு ஒடுவது போல ஒரு படத்தை வரைந்து நம்பவைக்கிறார். இது அவதூறு குற்றமாகும்.
ஆனால் எல்லா வசைப்பாடலும் அவதூறாகாது... அவற்றிற்கு சில விதி விளக்கு உண்டு இனி வரும் நாட்களில் அவைகளைப் பார்ப்போம்.
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1966
குறிப்பு -
இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது
சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்
திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.
நம் அரசியல் வியாதிகள் அடிக்கடி கையில் எடுப்பது இதுதான்!
ReplyDeleteநன்ரி
உண்மை தான் அய்யா
Delete