Friday, 18 September 2015

தினம் ஒரு சட்டம் - Criminal trespass - குற்றங்கருதி அத்து மீறலும் அதன் தண்டனைகளும்


இ.த.ச 441

       யாராவது குற்றம் புரிய வேண்டும், அல்லது மிரட்ட வேண்டும் அல்லது அவமதிக்க வேண்டும் அல்லது தொல்லை தரவேண்டும் என்ற கருத்துடன் ஒருவருக்குச் சொந்தமான அல்லது அவருடைய வசம் உள்ள ஒர் இடத்தில் மேற்க்கண்ட குற்றம் புரிய வேண்டும் என்ற எண்ணத்தில் நுழைவதும் 


அல்லது 

      சட்டபூர்வமான ஒரிடத்தில் நுழைந்துவிட்டு அந்த இடத்துக்குள் நுழைந்தப் பின்னர் குற்றம் புரிய வேண்டும் , மிரட்ட வேண்டும், அவமதிக்க வேண்டும் அல்லது தொல்லைத் தரவேண்டும் என்ற கருத்துடன் சட்ட விரோதமாக அந்த இடத்தில் இருப்பதும் குற்றங்கருதி அத்து மீறல் (Criminal Trespass) என்று சொல்லப்படும்.



Section 441- Criminal trespass


     Whoever enters into or upon property in the possession of another with intent to commit an offence or to intimidate, insult or annoy any person in possession of such property,

     Or having lawfully entered into or upon such property, unlawfully remains there with intent thereby to intimidate, insult or annoy any such person, or with intent to commit an offence,

is said to commit "criminal trespass".

STATE AMENDMENT

State of Uttar Pradesh:

For section 441, substitute the following: --

"441. Criminal Trespass:-- Whoever enters into or upon property in possession of another with intern to commit an offence or to intimidate, insult or annoy and person in possession of such property, or having lawfully entered into or upon such property, unlawfully remains therewith intent thereby intimidate, insult or annoy any such person, or with intent to commit an offence.

Or, having entered into or upon such property, whether before or after the coming into force of the Criminal Law (U.P. Amendment) Act, 1961, with the intention of taking unauthorized possession or making unauthorized use of such property fails to withdraw from such property or its possession or use, when calls upon to do so by that another person by notice in writing, duly served upon him, by the date specified in the notice,

is said to commit "criminal trespass".

[Vide U.P. Act No. 31 of 1961, section 2 (w.e.f 13-11-1961)]. 



அதன் தண்டனைகள்.............



இ.த.ச 447

          அத்து மீறி நுழையும் குற்றத்தை யார் செய்ந்தாலும் அந்த நபருக்கு மூன்று மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது  ஐநூறு ருபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

Section 447- Punishment for criminal trespass


         Whoever commits criminal trespass shall be punished with imprisonment of either description for a term which may extend to three months, with fine or which may extend to five hundred rupees, or with both.

  
 இ.த.ச 448

       யாராவது குற்றங்கருதி வீடு புகும் குற்றத்தை யார் புரிந்தாலும் ஒர் ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது ஆயிரம் ருபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

Section 448- Punishment for house-trespass


       Whoever commits house-trespass shall be punished with imprisonment of either description for a term which may extend to one year, or with fine or which may extend to one thousand rupees, or with both.


 இ.த.ச 449

         மரணத்தண்டனை பெறக்கூடிய குற்றத்தை புரிவதற்காக, ஒரு வீட்டுக்குள் குற்ற புரிய கருதி நுழைந்தாலும், அந்த நபருக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையில் கடுங்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


Section 449- House-trespass in order to commit offence punishable with death

Whoever commits house-trespass in order to the committing of any offence punishable with death, shall be punishable with *[imprisonment for life], or with rigorous imprisonment for a term not exceeding ten years, and shall also be liable to fine.

* Subs. by Act 26 of 1955, sec.117 and sch., for "transportation for life" (w.e.f. 1-1-1956). 



  இ.த.ச 450

  ஆயுள் தண்டனை பெறக்கூடிய குற்றத்தை புரிவதற்காக, ஒரு வீட்டுக்குள் குற்ற புரிய கருதி நுழைந்தால், அந்த நபருக்கு பத்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

Section 450- House-trespass in order to commit offence punishable with imprisonment for life 
Whoever commits house-trespass in order to the committing of any offence punishable with *[imprisonment for life], shall be punished with imprisonment of either description for a term not exceeding ten years, and shall also be liable to fine.

* Subs. by Act 26 of 1955, sec. 117 and Sch., for " transportation for life" (w.e.f. 1-1-1956).
 
 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.      

1 comment: