Sunday, 20 September 2015

தினம் ஒரு சட்டம் - சொத்து குறியீடும் அது தொடப்பான குற்றங்களும்


இ.த.ச 479



ஒரு குறியீடானது ஒரு அசையும் பொருள் மீது இடப்பட்டு, இது ஒரு குறிப்பிட்ட நபருடைய சொத்து என்பதை குறிக்கும் குறியீட்டை சொத்து குறியீடு என்கிறோம்.




Section 479- Property mark
A mark used for denoting that moveable property belongs to a particular person is called a property mark. 


 இ.த.ச 481

யாராவது, ஒருவருடைய அசையும் பொருளிளோ அல்லது சரக்குகளிலோ அல்லது  சரக்குள்ள பெட்டியிலோ அல்லது சரக்குள்ள பெட்டகத்திலோ அல்லது  சரக்கு கொள்ளுமிடத்திலோ ஒரு குறியீட்டு இன்னாருடையது என குறிப்பிடப்பட்டிருக்கும் ஆனால் அதை அழித்துவிட்டு வேறு ஒரு குறியீட்டு அந்த சொத்துக்கு சம்பந்தமில்லாத வேறு ஒருவருடையது என காட்டுவதும் அல்லது நம்ப வைப்பதும் பொய் சொத்துக் குறியீடு என்கிறோம்.



Section 481- Using a false property mark
Whoever marks any moveable property or goods or any case, package or other receptacle containing moveable property or goods, or uses any case, package or other receptacle having any mark thereon, in a manner reasonably calculated to cause it to be believed that the property or goods so marked, or any property or goods contained in any such receptacle so marked, belong to a person to whom they do not belong, is said to use a false property mark.

 
 இ.த.ச 482

யாராவது, இத்தகைய பொய்க் குறியீட்டை இடுபவர். தான் பிறரை ஏமாற்ற வேண்டும் என்ற கருத்துடன் செய்யவில்லை என்பதை நிரூப்பிக்கத் தவறினால், அவருக்கு ஒரு வருடம் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்


Section 482- Punishment for using a false property mark
Whoever uses *[* * *] any false property mark shall, unless he proves that he acted without intent to defraud, be punished with imprisonment of either description for a term which may extend to one year, or with fine, or with both.

* The words "any false trademark or" omitted by Act 43 of 1958, sec.135 and sch. (w. e. f. 25-11-1959). 


 இ.த.ச 483

யாரவது, ஒருவர் உபயோகப்படுத்தும் சொத்துக் குறியீடுப் போல ஒன்றை செய்ந்து, அதனை பிறர் பயன் படுத்தினால்,  அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

 

Section 483- Counterfeiting a property mark used by another
Whoever counterfeits any *[* * *] property mark used by any other person shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.

* The words "trade mark or" omitted by Act 43 of 1958, sec. 135 and Sch. (w.e.f. 25-11- 1959).



 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

1 comment:

  1. தகவலுக்கு நன்றி நண்பரே..

    ReplyDelete