Saturday, 12 September 2015

தினம் ஒரு சட்டம் - இ.த.ச 405 - நம்பிக்கை மோசடி


       யாராவது, ஒருவரிடம் ஒரு சொத்து ஒப்படைக்கப்பட்டிருக்கிறது அல்லது அவருடைய நேரடி நிர்வாகத்தின் கீழ் இருக்கிறது. 


      
      அந்தச் சொத்தை, அந்த நபர் நேர்மையின்றி கையாடல் செய்வதும், தன்னுடைய சொந்த உபயோகத்துக்கென அந்தச் சொத்தை பயன்படுத்துவதும் அல்லது அந்த சொத்தை எப்படி சட்டப்படி நிர்வாகிக்க வேண்டுமோ அப்படி நிர்வாகிக்காமல் அல்லது விற்று விடுவதும் குற்றமாகும்.


      சட்டப்படி அப்படி ஒப்படைக்கப்பட்ட சொத்தைப்பற்றி எப்படி நடத்தவேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டதோ அப்படி நடத்தாமல் அதனை மீறி நடப்பதும். அப்படி மீறும் படி மற்றவர்களை அனுமதிப்பதும் குற்றமாகும்.

  இந்தக் குற்றத்தை நம்பிக்கை மோசடி செய்தல் என்று கூறப்படுகிறது.




உதாரணம் 1-


ஒர் உயிலின்படி , இறந்தவருடைய சொத்தை அவரு
டைய வாரிசுகளுக்குப் பிரித்துக் கொடுக்கும் பொறுப்பு ஒருவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஆனால் அவர் அந்தச் சொத்துக்களை அப்படி பிரிக்காமல் அவர் தமது சொந்த உபயோகத்துக்காக வைத்துக் கொள்ளுகிறார். இந்தப் பிரிவின் பிடி அவர்
நம்பிக்கை மோசடி செய்ந்தவராகிறார்.



உதாரணம் 2-

    செந்தில் வேலையின் நிமித்தம் ஊருக்கு போகும் போது தன்னுடைய வீட்டுப் பொருட்களை பாதுக்காக்க ராஜேஸ்வரி என்பவரிடம் ஒப்படைத்து விட்டு செல்லுகிறார். ஊரிலிருந்து செந்தில் திரும்பி வந்தவுடன்  ராஜேஸ்வரி  பொருட்களைத் திருப்பித் தர வேண்டும் அதனை வைத்திருந்து காவல் காத்ததருக்கு ஒரு தொகையை பெற்றுக் கொண்டு. ஆனால் அப்படிச் சாமான்களை திருப்பித் தராமல் அதனை எடுத்துக் கொள்வதும் அல்லது அதனை விற்று அல்லது வாடகை விட்டு பணத்தை எடுத்துக் கொண்டால், அந்த நபர் நம்பிக்கை மோசடி செய்ந்தவராகிறார்.




Section 405- Criminal breach of trust



   Whoever, being in any manner entrusted with property, or with any dominion over property, dishonestly misappropriates or converts to his own use that property, or dishonestly uses or disposes of that property in violation of any direction of law prescribing the mode in which such trust is to be discharged, or of any legal contract, express or implied, which he has made touching the discharge of such trust, or willfully suffers any other person so to do, commits "criminal breach of trust".

1[Explanation 2[1]. -A person, being an employer 3[of an establishment whether exempted under section 17 of the Employees' Provident funds and Miscellaneous Provisions Act, 1952 (19 of 1952), or not] who deducts the employee's contribution from the wages payable to the employee for credit to a Provident Fund or Family Pension Fund established by any law for the time being in force, shall be deemed to have been entrusted with the amount of the contribution so deducted by him and if he makes default in the payment of such contribution to said Fund in violation of the said law, shall be deemed to have dishonestly used the amount of the said contribution in violation of a direction of law as aforesaid.]

4[Explanation 2. -A person, being an employer, who deducts the employees' contribution from the wages payable to the employee for credit to the Employees' State Insurance Fund held and administered by the Employees' State Insurance Corporation established under the Employees' State Insurance Act, 1948 (34 of 1948), shall be deemed to have been entrusted with the amount of the contribution so deducted by him and if he makes default in the payment of such contribution to the said Fund in violation of the said Act, shall be deemed to have dishonestly used the amount of the said contribution in violation of a direction of law as aforesaid.]



Illustrations

(a) A, being executor to the will of a deceased person, dishonestly disobeys the law which directs him to divide the effects according to the will, and appropriate them to his own use. A has committed criminal breach of trust.

(b) A is a warehouse-keeper. Z gong on a Journey, entrusts his furniture to A, under a contract that it shall be returned on payment of a stipulated sum for warehouse room. A dishonestly sells the goods. A has committed criminal breach of trust.

(c) A, residing in Calcutta, is agent for Z, residing at Delhi. There is an express or implied contract between A and Z, that all sums remitted by Z to A shall be invested by A, according to Z's direction. Z remits a lakh of rupees to A, with directions to A to invest the same in Company's paper. A dishonestly disobeys the direction and employs the money in his own business. A has committed criminal breach of trust.

(d) But if A, in the last illustration, not dishonestly but in good faith, believing that it will be more for Z's advantage to hold shares in the Bank of Bengal, disobeys Z's directions, and buys shares in the Bank of Bengal, for Z, instead of buying Company's paper, here, though Z should suffer loss, and should be entitled to bring a civil action against A, on account of that loss, yet A, not having acted dishonestly, has not committed criminal breach of trust.


தகவல்
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1865



குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.   

No comments:

Post a Comment