Wednesday, 30 September 2015

தினம் ஒரு சட்டம் - அடிமையாக்க கடத்தினால் என்ன தண்டனை - 3


இ.த.ச 370

   யாராவது , ஒருவரை அடிமையாக இறக்குமதி செய்வதும் , ஏற்றுமதி செய்வதும், அடிமையாக விற்றலும், அடிமையாக இருக்கும் படி ஒருவரை வாங்குவதும், பிறருக்குக் கொடுத்தாலும் அல்லது தம் வசத்தில் வைத்திருப்பதும் அல்லது அடிமையாகுபவரின் சம்பந்தம் இல்லாமல் சட்டவிரோதமாக ஏற்றுக் கொள்வதும்  குற்றமாகும்.


  இந்தக் குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரைச் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.





Section 370- Buying or disposing of any person as slave
Whoever imports, export, removes, buys, sells or disposes of any person as a slave, or accepts, receives or detains against his will any person as slave, 

shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years and shall also be liable to fine.

http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1826
                       

இ.த.ச 371
  யாராவது , ஒருவரை அடிமையாக இறக்குமதி செய்வதும் , ஏற்றுமதி செய்வதும், அடிமையாக விற்றலும், அடிமையாக இருக்கும் படி ஒருவரை வாங்குவதும், பிறருக்குக் கொடுத்தாலும் அல்லது தம் வசத்தில் வைத்திருப்பதும் அல்லது அடிமையாக ஏற்றுக் கொள்வதும்  குற்றமாகும். 

      இந்தக் குற்றத்தை வழக்கமாக செய்பவருக்கு இ.த.ச 370 ல் கூறியதைவிட அதிகமாக விதிக்கப்பட வேண்டும். அதாவது


  இந்தக் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரைச் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

Section 371- Habitual dealing in slave
Whoever habitually imports, exports, removes, buys, sells, traffics or deals, 

    shall be punished with *[imprisonment for life] or with imprisonment of either description for a term not exceeding ten years, and shall also be liable to fine.

* Subs. by Act 26 of 1955, sec. 117 and Sch., for "transportation for life" (w.e.f. 1-1-1956).


http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1827


 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 
                       

1 comment: