Wednesday, 16 September 2015

தினம் ஒரு சட்டம் - இ.த.ச 425 - சொத்து அழித்தல்





 இ.த.ச 425 - யாரவது, தம்முடைய நடத்தை அல்லது செயலால் பொது மக்களுக்கு அல்லது தனி மனிதருக்கு ஒரு முறையற்ற நட்டம் அல்லது தீங்கு உண்டாகும் என்று தெரிந்திருந்தும் அல்லது தீங்கு உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடன் ஒருவருடைய அல்லது பொது மக்களுடை சொத்தை அழிப்பதும் அல்லது அந்த சொத்தின் மதிப்பு அல்லது அதன் உபயோகத்தை அழிக்க கூடிய அல்லது குறைக்க கூடிய செயலைப் புரிந்தாலும், அந்த சொத்திற்கு ஒரு பாதகமான ஒரு கெடு உண்டாக்கினாலும் , சொத்து அழித்தல் செய்யப்பட்டதாக கொள்ளப்படும். 


விளக்கம் 1 - 

                            அந்த சொத்து அழிப்பு  அத்தகைய எண்ணத்தில் அதை செய்யப்பட வில்லையென்றாலும் அந்த சொத்து அழிப்பு யாருக்காவது ஒரு நட்டத்தையாவது அல்லது தீங்கை எற்படுத்தும் என்று அறிந்திருந்தால் போதும். (Actus non facit reum nisi mens sit rea)

 Explanation 1. -It is not essential to the offence of mischief that the offender should intend to cause loss or damage to the owner of the property injured or destroyed. It is sufficient if he intends to cause, or knows that he is likely to cause, wrongful loss or damage to any person by injuring any property, whether it belongs to that person or not.



விளக்கம் 2 -
                               அந்த சொத்து அழிப்பு என்னும் தீங்கு குற்றத்தில் பிறருடைய சொத்துக்கு மட்டுமன்றி, அத்தகைய குற்றம் புரியும் நபருடைய சொந்த சொத்துக்கும் பிறருடைய சொத்துக்கும் சேர்த்து அத்தகைய பாதகம் நேரிடலாம். (animus nocendi)

Explanation 2. -Mischief may be committed by an act affecting property belonging to the person who commits the act, or to that person and others jointly.


சில உதாரணங்கள்.

உதாரணம் 1- செந்திலுக்கு ஒரு நட்டம் உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடன், சந்தோஷ், செந்திலுக்கு சொந்தமான ஒரு காப்பிட்டை தீயிட்டு கொளுத்துகிறார், இதனால் செந்திலுக்கு நட்டம் உண்டாகிறது . சந்தோஷ் இந்த பிரிவின் படி குற்றவாளியாகிறார்.


 உதாரணம் 2- ஒருவருக்கு சொந்தமான பனிக்கட்டி அறையில் தண்ணீர் கொட்டி பனிக்கட்டி கரைந்து ஒட ஒருவர் செய்கிறார். இதனால் அவருக்கு நட்டம் ஏற்படுகிறது. இந்த பிரிவின் கீழ் இது குற்றமாகும்.

உதாரணம் 3-ஒருவருக்கு சொந்தமான தங்க மோதிரத்தை சந்தோஷ், அவருக்கு முறையற்ற நட்டம் உண்டாக்க வேண்டும் என ஆற்றில் வீசி எறிகிறார். இந்த பிரிவின் கீழ் இது குற்றமாகும்.

உதாரணம் 4- தன்னுடைய சொத்துக்களை கடன் காரர்கள் எடுத்துக் கொள்வார்கள் என செந்தில், தன் சொத்துக்களை அழிக்கின்றார் அவர்களுக்கு கிடைக்க கூடாது என. கடன்காரர்களுக்கு பாதகம் செய்ய வேண்டும் என்ற கருத்துடன் அந்த சொத்தை அழிப்பது, இந்தப் பிரிவின் கீழ் குற்றமாகும்.

உதாரணம் 5-பிறருக்கு சொந்தமான தோட்டத்தில், அவருக்கு முறையற்ற நட்டம் உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடன் நம்முடைய கால்நடைகளை அங்கு மேய விடுவது, இந்தப் பிரிவின் கீழ் குற்றமாகும்.






Section 425- Mischief
         Whoever with intent to cause, or knowing that he is likely to cause, wrongful loss or damage to the public or to any person, cause the destruction of any property, or any such change in any property or in the situation thereof as destroys or diminishes its value or utility, or affects it injuriously, commits "mischief".

Explanation 1. -It is not essential to the offence of mischief that the offender should intend to cause loss or damage to the owner of the property injured or destroyed. It is sufficient if he intends to cause, or knows that he is likely to cause, wrongful loss or damage to any person by injuring any property, whether it belongs to that person or not.

Explanation 2. -Mischief may be committed by an act affecting property belonging to the person who commits the act, or to that person and others jointly.

Illustrations

(a) A voluntarily burns a valuable security belonging to Z intending to cause wrongful loss to Z. A has committed mischief.

(b) A introduces water into an ice-house belonging to Z and thus causes the ice to melt, intending wrongful loss to Z. A has committed mischief.

(c) A voluntarily throws into a river a ring belonging to Z, with the intention of thereby causing wrongful loss to Z. A has committed mischief.

(d) A, knowing that his effects are about to be taken in execution in order to satisfy a debt due from him to Z, destroys those effects, with the intention of thereby preventing Z from obtaining satisfaction of the debt, and of thus causing damage to Z. A has committed mischief.

(e) A, having insured a ship, voluntarily causes the same to be cast away, with the intention of causing damage to the under-writers. A has committed mischief

(f) A causes a ship to be cast away, intending thereby to cause damage to Z who has lent money on bottomry on the ship. A has committed mischief.

(g) A, having joint property with Z in a horse, shoots the horse, intending thereby to cause wrongful loss to Z. A has committed mischief.

(h) A causes cattle to enter upon a field belonging to Z, intending to cause and knowing that he is likely to cause damage to Z's crop. A has committed mischief. 


குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.      

2 comments:

  1. வணக்கம் நண்பரே!!!!விநாயக சதுர்த்தி! சமுக சீர்திருத்த தந்தை பெரியார் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. பதிவு அருமை. விநாயகர் தின நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete