Sunday, 13 September 2015

தினம் ஒரு சட்டம் - இ.த.ச 408 & 409 - நம்பிக்கை மோசடிக்கான தண்டனைகள்


நம்பிக்கை மோசடி என்ன வென்றால்......@?



       ஒரு அரசாங்க அதிகாரி அரசாங்கத்தின் சார்பாக அவர் வசூல் செய்யும் தொகையை, அவ்வவ்போது அரசாங்க கஜானாவில் செலுத்த வேண்டும் என்று உத்தரவு அளிக்கப்படுகிறது. அந்த அதிகாரி அப்படி செய்யாமல், அந்தப்பணத்தை கையாடல் செய்வது, நம்பிக்கை மோசம் செய்த குற்றமாக கருதப்படும்.




இந்தக் குற்றத்தை யார் செய்தாலும்
 
இ.த.ச  408  - அவர் உரிமையாளரின் எழுத்தர் அல்லது பணியாளராக இருக்கும் போது , அந்தப் பணியில் இருக்கும் போது தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட சொத்தை நம்பிக்கை மோசம் செய்ந்து விட்டால் அந்த நபருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் சேர்த்து அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.


 


Section 408- Criminal breach of trust by clerk or servant
Whoever, being a clerk or servant or employed as a clerk or servant, and being in any manner entrusted in such capacity with property, or with any dominion over property, commits criminal breach of trust in respect of that property, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.
 

இ.த.ச  409  - அவர் ஒரு பொது ஊழியராக இருந்து அவரிடம் ஒரு சொத்து ஒப்படைக்கப்பட்டு அந்த சொத்தை அவர் நம்பிக்கை மோசடி செய்ந்தால் அவருக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும்.





Section 409- Criminal breach of trust by
public servant, or by banker, merchant or agent
Whoever, being in any manner entrusted with property, or with any dominion over property in his capacity of a public servant or in the way of his business as a banker, merchant, factor, broker, attorney or agent, commits breach of trust in respect of that property, shall be punished with *[imprisonment for life], or with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.
 
 

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    

No comments:

Post a Comment