Sunday, 13 September 2015

தினம் ஒரு சட்டம் - இ.த.ச 406 - நம்பிக்கை மோசடி தண்டனைகள்


நம்பிக்கை மோசடி என்ன வென்றால்......@?



     ஒருவரிடம் நாம் ஒரு பொருளை ஒரு இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு கொண்டு செல்லும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. அந்த நபர் நேர்மையின்றி அந்தப் பொருளை கையாடல் செய்ந்து விடுகிறார். அவர் மீது நம்பிக்கை மோசடி செய்ந்த குற்றம் சாரும்.







இந்தக் குற்றத்தை யார் செய்தாலும்

  இ.த.ச  406  -  அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

Section 406- Punishment for criminal breach of trust

Whoever commits criminal breach of trust shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, or with fine, or with both.



  இ.த.ச  407 ஒரு இடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு தரை அல்லது தண்ணிர் மார்க்கமாக கொண்டு செல்பவர் கையாடல் செய்ந்தால் அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் சேர்த்து அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.




Section 407- Criminal breach of trust by carrier, etc.

Whoever, being entrusted with property as a carrier, wharfinger or warehouse-keeper, commits criminal breach of trust in respect of such property, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine. 


இ.த.ச  408  - அவர் உரிமையாளரின் எழுத்தர் அல்லது பணியாளராக இருக்கும் போது , அந்தப் பணியில் இருக்கும் போது தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட சொத்தை நம்பிக்கை மோசம் செய்ந்து விட்டால் அந்த நபருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் சேர்த்து அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.


 

Section 408- Criminal breach of trust by clerk or servant
Whoever, being a clerk or servant or employed as a clerk or servant, and being in any manner entrusted in such capacity with property, or with any dominion over property, commits criminal breach of trust in respect of that property, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.


இ.த.ச  409  - அவர் ஒரு பொது ஊழியராக இருந்து அவரிடம் ஒரு சொத்து ஒப்படைக்கப்பட்டு அந்த சொத்தை அவர் நம்பிக்கை மோசடி செய்ந்தால் அவருக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும்.



Section 409- Criminal breach of trust by
public servant, or by banker, merchant or agent 
Whoever, being in any manner entrusted with property, or with any dominion over property in his capacity of a public servant or in the way of his business as a banker, merchant, factor, broker, attorney or agent, commits breach of trust in respect of that property, shall be punished with *[imprisonment for life], or with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.
 


குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    

3 comments:

  1. இன்றையத் தேவையைப் பூர்த்தி செய்யும் வலைப்பதிவு. தினம் ஒரு சட்டம் இன்றுதான் பார்க்கின்றேன். பாராட்டுக்கள் அன்பரே.

    ReplyDelete
  2. தங்கள் வருகை க்கு நன்றி - சட்டம் தெரிந்தால் தவறுகள் நடக்காது , தவறுகள் செய்ய மாட்டோம்.

    ReplyDelete
  3. 406சட்டம் குறித்த சில விளக்கங்கள் தேவைப்படுகின்றன இலவச சட்ட ஆலோசனை வேண்டும்

    ReplyDelete