Tuesday, 22 September 2015

தினம் ஒரு சட்டம் - கள்ள நோட்டுக்கள் மற்றும் அதன் தண்டனைகளும்

இ.த.ச 498 A

யாராவது, நமது இந்திய ரூபாய் நோட்டுகளையோ அல்லது வங்கி தாள் சம்பந்தப்பட்ட வரைவுவோலைகளை யோ போலியாகவோ அல்லது அவற்றை போலியாக்குவதற்கு எந்த ஒரு வேலையை செய்ந்தாலும் குற்றமாகும்.



அந்த நபருக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனையுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

விளக்கம் - இந்தப் பிரிவிலும் மேலும் வரும் பிரிவு 498B, 498C, 498D, 498E ஆகிய பிரிவுகளிலும் வங்கி தாள் எனப்படுவது யாதெனில் ஒரு பிரமிஷனரி நோட் அல்லது ஒரு நோட் அதை எப்போது வேணுமானாலும் பணமாக மாற்றிக்கொள்ள உதவும் என தொழில் நடத்தும் ஒருவரால் வழங்கப்படும் வங்கி காசோலை, அல்லது ஒரு வங்கி வரைவோலை. அதை உலகத்தில் உள்ள வங்கிகளினால் பணமாக பயன்படுத்த வெளியிடப்பட்டதும் அல்லது அத்தகைய அதிகாரம் பெற்ற ஒரு மாநிலத்தாலும் அல்லது நாட்டாலும் அளிக்கப்படலாம். வங்கிகளால் அளிக்கப்படும் கடன் பத்திரங்களும் இந்த சொல் குறிக்கும்.

Section 489-A- Counterfeiting currency-notes or bank-notes
1 Whoever counterfeits, or knowingly performs any part of the process of counterfeiting, any currency-note or bank-note, shall be punished with 2[imprisonment for life], or with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.

Explanation
-For the purposes of this section and of sections 489B, 3[489C, 489D and 489E], the expression "bank-note" means a promissory note or engagement for the payment of money to bearer on demand issued by any person carrying on the business of banking in any part of the world, or issued by or under the authority of any State or Sovereign Power, and intended to be used as equivalent to, or as a substitute for money.

1. Added by Act 12 of 1889, sec. 2.

2. Subs. by Act 26 of 1955, s. 117 and Sch., for "transportation for life" (w.e.f. 1-1-1956).

3. Subs. by Act 35 of 1950, s. 3 and Sch. II, for "489C and 489D".
 இ.த.ச 498 B



யாராவது, போலியான அல்லது போலியாக்கப்பட்ட ரூபாய் நோட்டை அல்லது வங்கி தாளையோ, அது போலியானது என தெரிந்திருந்தும் . அதனை யாராவது விற்பதும் , வாங்குவதும் , பெறுவதும் அல்லது அவற்றை செலவாணி செய்வதும் குற்றமாகும். மேலும் அவற்றை நல்ல நோட்டுப் போல் பயன் படுத்துவதும் குற்றமாகும்.

அந்த நபருக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையில் சிறைக் காவல் தண்டனையுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.



Section 489-B- Using as genuine, forged or counterfeit currency-notes or bank-notes
*Whoever sells to, or buys or receives from, any other person, or otherwise traffics in or uses as genuine, any forged or counterfeit currency-note or bank-note, knowing or having reason to believe the same to be forged or counterfeit, shall be punished with **[imprisonment for life], or with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.

* Added by Act 12 of 1899 sec. 2

** Subs. by Act 26 of 1955, sec. 117 and sch., for "transportation for life" (w.e.f.1-1-1956) 

 இ.த.ச 498 C

யாராவது,  போலியான அல்லது போலியாக்கப்பட்ட ரூபாய் நோட்டை அல்லது வங்கி தாளை, அது போலியானது என தெரிந்திருந்தும் அல்லது நம்புவதற்கான வாய்ப்பிருந்தும். அதனை தம்வசம் வைத்திருப்பது குற்றமாகும். அவ்வாறு வைத்திருந்தால்.

அந்த நபருக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையில் சிறைக் காவல் தண்டனையுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.




Section 489-C- Possession of forged or counterfeit currency-notes or bank-notes
*Whoever has in his possession any forged or counterfeit currency-note or bank-note, knowing or having reason to believe the same to be forged or counterfeit and intending to use the same as genuine or that it may be used as genuine, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, or with fine, or with both.

* Added by Act 12 of 1899, sec. 2.

இ.த.ச 498 D

யாராவது, ரூபாய் நோட்டுகளையோ அல்லது வங்கி தாள்களையோ போலியாக தயாரிப்பதற்கு அல்லது போலியாக்குவதற்குரிய எந்த வேலையைை செய்ந்தாலும் அத்தகைய வேலைகளை செய்வதற்கும் அல்லது அத்தகைய வேலைக்கு உதவியாக பயன்படும் என்று தாம் அறிந்துள்ள இயந்திரம் , கருவி அல்லது எந்தப் பொருளை வாங்கினாலும் , விற்றாலும் அல்லது செலாவணியாக்கினாலும் அல்லது தம் வசம் வைத்திருந்தாலும் குற்றமாகும்.


அந்த நபருக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையில் சிறைக் காவல் தண்டனையுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


Section 489-D- Making or possessing instruments or materials for forgoing or counterfeiting currency-notes or bank-notes
*Whoever makes, or performs, any part or the process of making, or buys or sells or disposes of, or has in his possession, any machinery, instrument or material for the purpose of being used, or knowing or having reason to believe that it is intended to be used, for forging or counterfeiting any currency-note or bank-note, shall be punished with **[imprisonment for life], or with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.]

* Added by Act 12 of 1899, sec. 2.

** Subs. by Act 26 of 1955, s. 117 and Sch., for "transportation for life" (w.e.f. 1-1-1956).

 இ.த.ச 498 E

துனை பிரிவு 1 - 

யாராவது,   ரூபாய் நோட்டு அல்லது வங்கி தாளைப் போல தோற்றமா அளிக்கும் ஒரு நோட்டை உருவாக்கினாலும் அல்லது அத்தகைய தோற்றத்தை தரக்கூடிய ஒரு நோட்டை தயாரித்தாலும் அல்லது பயன் படுத்தினாலும் அல்லது பிறருக்கு கொடுத்தாலும் குற்றமாகும்.  அவருக்கு தண்டனையாக நூறு ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

துனை பிரிவு 2 -

யாராவது, மேலே கூறப்பட்ட துனை பிரிவு 1 - ன் கீழ் ஒரு குற்றத்தைப்புரிந்த நபரைப் (வெளியிட்ட அல்லது அச்சிட்டவரை) பற்றிய  விவரத்தை ஒரு காவல் அதிகாரி கேட்டும் போது கூற மறுத்தால் அது குற்றமாகும்.   அவருக்கு தண்டனையாக இருநூறு ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.




துனை பிரிவு  3 -

யாராவது, மேலே கூறப்பட்ட துனை பிரிவு 1 - ன் கீழ் விளக்கப்பட்ட ஒரு ரூபாய் நோட்டு அல்லது வங்கி தாளில் , ஒருவருடைய பெயர் காணப்பட்டாலும் அல்லது அது சம்பந்தப்பட்ட வேறு ஆவணத்தில் காணப்பட்டாலும், அவரே அத்தகைய ஆவணத்தை உருவாக்கியதாக கருதப்படும். அவ்வாறு அவர் செய்யவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அவரையே சாரும்.

Section 489-E- Making or using documents resembling currency-notes or bank-notes
Whoever makes, or causes to be made, or uses for any purpose whatsoever, or delivers to any person, any document purporting to be, or in any way resembling, or so nearly resembling as to be calculated to deceive any currency-note or bank shall be punished with fine which may extend to one hundred rupees.
If any person, whose name appears on a document the making of which is an offence under sub-section (1), refuses, without lawful excuse, to disclose to a police-officer on being so required the name and address of the person by whom it was printed or otherwise made, he shall be punished with fine which may extend to two hundred rupees.
Where the name of any person appears on any document in respect of which any person is charged with an offence under sub-section (1) or on any other document used or distributed in connection with that document it may, until the contrary is proved, be presumed that person caused the document to be made.

நன்றி - http://www.indianlawcases.com



 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    

No comments:

Post a Comment