Tuesday, 8 September 2015

தினம் ஒரு சட்டம் - பொய் குற்றம் சுமத்தி பொருள் பறித்தல் தண்டனைகள் - 3


இ.த.ச 388


       யாரவது  ஒருவர் மற்றவர் மீது அல்லது அவருக்கு வேண்டிய ஒருவர் மீது பொய்யாக ஒரு குற்றம் புரிந்தார் அல்லது  ஒரு குற்றம் புரிய முயற்சித்தார் பொய்யாக ஒரு வழக்கு தொடுத்து.  

    அந்த வழக்கின் படி அந்த நபருக்கு அல்லது அந்த நபருக்கு வேண்டிய மற்றவருக்கு மரணத் தண்டனைக்குரிய அல்லது ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை தண்டனையாக விதிக்கப்படும் என்று அச்சுறுத்திப பொருள் பறித்தல் குற்றமாகும்.  


     அல்லது அந்த நபர் அவ்வாறு தூண்டியாதாக அவர் மீது குற்றம் சாட்டப்படும் என்று அச்சுறுத்திப் பொருள் பறித்தல் குற்றமாகும். 

    இந்தக் குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் வரைத் சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும். 
  

   அவ்வாறு சுமத்தப்படும் குற்றம் இ.த.ச 377 வது பிரிவின் கீழ் இயற்க்கைக்கு மாறான பாலியல் குற்றமானால் (அதாவது குற்றம் சாட்டப்பட்ட நபர் தன்னை இயற்கைக்கு மாறாக கெடுத்து விட்டார் அவ்வாறு கூறுபவர் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கலாம்) - அந்தப் பிரிவின் கீழ் தண்டனைக்குரியதாக இருப்பின் அச்சுறுத்திப் பொருள் பறிப்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.


  IPC Section 388- Extortion by threat of accusation of an offence punishable with death or imprisonment for life, etc. 



   Whoever commits extortion by putting any person in fear of an accusation against that person or any other, of having committed or attempted to commit any offence punished with death, or with *[imprisonment for life], or with imprisonment for a term which may extend to ten years or of having attempted to induce any other person to commit such offence, 



   shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine; and, if the offence be one punished under section 377 of this Code, may be punished with *[imprisonment for life].

* Subs. by Act 26 of 1955, sec.117 and sch., for "transportation for life" (w.e.f. 1-1-1956). 


தகவல் http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1848


 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

 

No comments:

Post a Comment