Thursday, 3 September 2015

தினம் ஓரு உரிமை - நிர்வாகத்துறை நடுவர்கள் - Executive Magistrates


மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஒரு சில நேரங்களில் நீதித்துறை மாஜிஸ்திரேட் சில நேரங்களில்
நிர்வாகத்துறை மாஜிஸ்திரேட்.






       
The main functions under Criminal Procedure Code are noted below, 
குற்றமுறை விசாரனை முறைச்சட்டத்தில் நிர்வாகத்துறை நடுவர்க்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள்



Section 20 Cr.P.C. (Executive Magistrates) :
In   every   District,   the   following   Officers   are   appointed   as   Executive. ஒவ்வொரு மாவட்டத்திலும் கீழ் கண்ட அதிகாரிகள்
நிர்வாகத்துறை நடுவர்களாக நியமிக்கப்படுவார்கள். குற்றமுறை விசாரனை முறைச்சட்டத்தில் 20 தாவது பிரிவின் கீழ்

Magistrates by the Government U/S 20 Cr.P.C.

 
1. Collector - மாவட்ட ஆட்சியர்


2. Joint Collector - துனை மாவட்ட ஆட்சியர்

3. District Revenue Officer - மாவட்ட வருவாய் அலுவலர்


4. Revenue  Divisional officer - கோட்டாச்சியர்


5. Tahsildar - வட்டாச்சியர்


                The above  Officers are appointed as Magistrates by virtue of the Offices held by them as noted against each.
An executive magistrate exercises function, which are administrative or executive in nature such a granting of a license, sanctioning of prosecution, issuing of prohibitory orders etc. Apart from the Criminal Procedure Code, Executive Magistrate exercises so many functions under various acts like, The Kerala Police Act ,1960, The Indian Telegraph Act, the Press Registration and Books Act, 1867, The Kerala Stamp Act ,1959, The Registration of Births and Deaths Act1969, The Arms Act, The Petroleum Act, The Explosives Act ,1884, The Official Secrets Act 1923, The bonded Labour System(Abolition)Act, The prevention of atrocities Act, 1989, The Abkari Act etc.




1. Magistrate can demand the assistance of the public (section .37 cr.pc) 
பொதுமக்களிடம் உதவிக்கேட்டல் மக்களும் மறுக்காமல் உதவி செய்தல்

2. Arrest by magistrate (section 44 cr.pc) 
குற்றம் புரிந்தவரை கைது செய்ய உத்திரவுவிடுதல்

3. Police to report apprehensions (section 58 cr.pc) 
காவலர் கைது  செய்யப்பட்டவர்களின் விவரங்களை அறிவித்தல்

4. Arrest is executed outside the district (section 80 & 81 cr.pc) 
வெளிமாவட்டத்தில்  கைது செய்ய உத்திரவுவிடுதல் அப்படி கைது செய்யப்பட்டவர்களை காவலில் வைக்க பணித்தல்

5. Procedure as to letters and telegrams (section .92 cr.pc) 
கடிதங்களையும், தந்திகளை பரிசோதித்தல் மற்றும் தம் பொருப்பில் வைத்திருத்தல்

6. Search of place suspected to contain stolen property, forged ducmets etc,. (section 94 cr.pc) 
போலியாக உருவாக்கப்பட்ட அல்லது காணமல் போன பொருட்களை தேட உத்திரவுவிடுதல்

7. Power to declare certain publications forfieted and to issue search warrant for the same (section 95 cr.pc) 
 வெளியிடுகளை பறிமுதல் செய்வது தொடர்பானது மற்றும் தேடு உத்திரவு வழங்குதல் தொடர்பாக

8. Search for persons wrongfully confined (section .97 cr.pc) 
முறையின்றி கட்டுக்காவலில் வைக்கப்பட்டவர்களை தேட உத்திரவிடுதல்

9. Power to compel restoration of adbucted females (section .98 cr.pc) கடத்தி செல்லப்பட்ட பெண்களை 
மீட்டல் தொடர்பாக
உத்திரவிடுதல்

10. Security for keeping peace (section .107 cr.pc) 
பொது அமைதியை நிலை நாட்டுதல் தொடர்பாக

11. Security for keeping good behaviour from persons disseminating seditious matters (section .108 cr.pc) 
தேச விரோத சக்திகளுக்காக பிரச்சாரம் செய்பவர்களிடம் நன்னடத்தைக்கான பினை பெறுதல்

12. Security for good behaviour from suspected persons (section.109 cr.pc) 
சந்தேகப்பட தக்க நபர்களிடமிருந்து  நன்னடத்தைக்கான பினை பெறுதல்

13. Security for good behaviours for habitual offenders (section.110 cr.pc) 

வழக்கமாக குற்றம் புரியும் நபர்களிடமிருந்து  நன்னடத்தைக்கான பினை பெறுதல்


14. Maintanence of Dependents (section.125 cr.pc-128) 
 மனைவி, குழந்தை, பெற்றோர் ஆகியோரை பேணிக்காக்க குறிப்பிட்ட தொகை  வழங்க உத்திரவிடுதல்.

15. Disposal of assembly by use of civil force (section.129 cr.pc) 
 சட்ட விரோதமான கூட்டங்களை கலைந்து செல்ல உத்திரவிடுதல்.

16. Use of armed forces to disperse assembly (section.130 cr.pc) 

 சட்ட விரோதமான கூட்டங்களை படைவீரர்களைக் கொன்டு  கலைந்து செல்ல உத்திரவிடுதல்.

17. Public nuisances (section.133 to 141 cr.pc) 
 பொது மக்களுக்கும் மற்றும் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்துபவகளை அகற்றுதல்.

18. Iinjunction order (section 142 cr.pc) 

  பரிசீலனை முடியும் வரை இடைக்காலத் தடை உத்தரவு.

19. Power to issue order in urgent cases of nuisance or apprehended danger (section.144 cr.pc)
அவசர நிலைகளில் தடை உத்தரவு.


20. Power to prohibit carrying arms in procession or mass drill or mass training with arms.(section 144-a cr.pc) அவசர நிலைகளில் தடை உத்தரவு.

21. Procedure where dispute concerning land or water is likely to cause breach of peace (section.145 cr.pc)
நிலம் மற்றும் நீர்நிலை தொடர்பாக பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் போது.

22. Power to attach subject of dispute and to appoint receiver. (section.146 cr.pc) பிரச்சனையில் உள்ள சொத்தைக் கைப்பற்றுதலும் அதற்கேன ஏற்புநர் அமைத்தலும்.

23. Dispute concerning right of use of land or water (section 147 cr.pc)  நிலம் அல்லது நீர் பயன்படுத்துவது பற்றி எழக்கூடிய பிரச்சனைகள்.

24. ocal inquirty (section.148 cr.pc)
தன் கீழ் உள்ள வட்டாரத்தில் விசாரனை அதனை சட்சியமாக எடுத்துக் கொள்ளுதல்.

25. inquests (section.174 cr.pc)
தற்கொலைப்பற்றி விசாரனை.

26. custodial death and custodial rape (section.176 (1) cr.pc) 

சிறைச்சாலை மரணம் மற்றும் கற்பழிப்பு பற்றி விசாரனை

27. exhumation of deadbody (section.176 (3) cr.pc) 

இறந்தவரின் உடலைக் கைப்பற்றி விசாரனை

28. making over or withdrawal of cases by executive magistrate (section .411 cr.pc) வழக்குகளை செயல் துறை நடுவர்கள் திரும்ப பெறுதல்

29. order for custody and disposal of property pending trial (section. 451 cr.pc) சொத்துக்களுக்கேற்ற வகை செய்தல் -
சொத்து என்பது நீதிமன்றத்துக்கு கொன்டு வரப்படுவது அல்லது பொருப்பில் உள்ளது அல்லது ஒரு குற்றத்திற்கு பயன் படுத்தப்பட்டது

30. order for disposal of property at conculusion of trial (section. 452 cr.pc)
விசாரனைக்கு பிறகு சொத்துக்களுக்கான ஏற்பாடு

31. disposal of property where no claimant appears with in six motnths (section. 458 cr.pc) ஆறு மாதங்களுக்கு உரிமையாளர் எவரும் வரவில்லையெனில்

32. disposal of perishable property (section. 458 cr.pc)
ஆறு மாதங்களுக்கு உரிமையாளர் எவரும் வரவில்லையெனில் விற்பனை செய்தல்




1. Control and Direction by District Magistrate (Section 5) 

2. Special Police Officer (Section 11) 

3. Powers to regulate Traffic, Regulate Public Assemblies, Processions, Musics in Streets, Prohibit Carrying of swords, Spears, Mass Drills, Mass Training etc,. (Section 18, 19, 20, 21, 21A, 22 and 23) 

4. Prevention of Riots (Section 27)

5. Issue of orders for Maintenance of Order at religious Ceremonies (Section 28)

6. District Magistrate is at Liberty to call for and Inspect Diaries kept in Police Station (Section 67)

7. Allegations against Police Officers into the offences like, Torture, Grievous Hurt and Death (Section 155 departmental Punishment as under Kerala Police Manual)


If the police officer is of Gazetted rank, the enquiry shall be conducted personally by the District Magistrate. If the police officer is of a non Gazetted rank, the enquiry shall be conducted personally by the Sub Divisional Magistrate

In addition to the above work, the Executive Magistrates are empowered to perform a lot of functions under various Acts and Rules. 

நிபந்தனைகள் & Disclaimer: இந்தப்பதிவு சட்ட விழிப்புணர்வுக்காக எழுதப்பட்டது
இதில் உள்ள ஷரத் மற்றும் கட்டளைகள் மேற்கன்ட இனையத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது பிழை அல்லது தவறு இருப்பின் திருத்தத்திற்குட்பட்டது வழக்கிற்குட்பட்டது அல்ல  




*குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை ஒரு பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.
மேலும் வாசிக்க

http://indiankanoon.org/search/?formInput=+executive+magistrates
http://www.quora.com/Who-exactly-is-a-magistrate
http://www.apard.gov.in/powers_functionsof_rev_offi_as_executivemagistrates.pdf


குற்ற வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் வருவாய் கோட்டாட்சியருக்கு இல்லை என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கொத்தடிமை சென்னை ஐகோர்ட்டில், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சி.கஜேந்திரன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

திருவள்ளூர் மாவட்டம், கீழம்பாக்கத்தில் உள்ள கத்தீரியார் ரைஸ்மில்லில், கடந்த 1990–ம் ஆண்டு முதல் 2005–ம் ஆண்டு வரை என் மாமனார் வாங்கிய முன் தொகைக்காக நானும், என் குடும்பத்தாரும் கொத்தடிமையாக வேலை செய்தோம். 2005–ம் ஆண்டு திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ), தாசில்தார் ஆகியோர் எங்களிடம் விசாரணை நடத்தி, எங்களை சொந்த கிராமத்துக்கு அனுப்பிவைத்தனர்.

செவ்வாய்பேட்டை போலீசார் ரைஸ்மில் உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரிப்பதற்காக, ஆவணங்கள் அனைத்தும் ஆர்.டி.ஓ.வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2005–ம் ஆண்டு முதல் எங்கள் வழக்கு மட்டுமல்லாமல், மேலும் 9 வழக்குகள் எந்த விசாரணையும் இல்லாமல் ஆர்.டி.ஓ. முன்பு நிலுவையில் உள்ளது.

அதிகாரம் இல்லை மத்திய அரசு கொண்டுவந்த கொத்தடிமை ஒழிப்பு சட்டம் 1976, பிரிவு 21–ன் கீழ், இதுபோன்ற வழக்குகளை விசாரிக்கும் அதிகாரத்தை நிர்வாக மாஜிஸ்திரேட்டான ஆர்.டி.ஓ., தாசில்தார் ஆகியோருக்கு வழங்கி தமிழக சமூக நலத்துறை 1987–ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது.

நீதித்துறை மாஜிஸ்திரேட்டு போல், நிர்வாகத்துறை மாஜிஸ்திரேட்டான ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த முடியாது. ஆர்.டி.ஓ. சட்டம்படித்தவரும் இல்லை. மாவட்ட மாஜிஸ்திரேட்டான கலெக்டருக்கு கிரிமினல் வழக்கை விசாரிக்க அதிகாரம் கிடையாது. எனவே, இந்த சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும். அதேபோல, இந்த சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விசாரிக்க ஆர்.டி.ஓ.வுக்கு அதிகாரம் வழங்கி, 1987–ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையையும் ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி அக்னிகோத்ரி, நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

சட்டப்பிரிவு ரத்து குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி, குற்ற வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் ஆர்.டி.ஓ.வுக்கு கிடையாது. அந்த வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் நீதித்துறை மாஜிஸ்திரேட்டுக்குத்தான் உள்ளது. கிரிமினல் வழக்குகள், அவற்றின் மேல்முறையீடு வழக்குகள் ஆகியவற்றை கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு தான் விசாரிக்க முடியும். கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு சட்டம் 1976, பிரிவு 21–யை அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று முடிவு செய்து, அதனை ரத்து செய்கிறோம்.

அதேபோல, இந்த வழக்குகளை விசாரிக்கும் அதிகாரத்தை ஆர்.டி.ஓ.வுக்கு வழங்கி தமிழக அரசு 1987–ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையையும் ரத்து செய்கிறோம். இந்த சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவான வழக்குகள் அனைத்தையும், சம்பந்தப்பட்ட தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளுக்கு சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ.க்கள் அனுப்பி வைக்க வேண்டும். அந்த ஆவணங்கள் கிடைத்த பின்னர், அந்த வழக்குகளை சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டுகள் விசாரித்து, விரைவாக பைசல் செய்யவேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர். 

No comments:

Post a Comment