Monday, 14 September 2015

தினம் ஒரு சட்டம் - இ.த.ச 416 - ஆள் மாறாட்டம் என்றால் என்ன ?


இ.த.ச 416 - ஆள் மாறாட்டம்



      யாராவது ஒருவர் , மற்ற ஒருவரைப் போல நடித்து அல்லது அந்த நபருக்கு பதிலாக மற்றொரு நபரைக் காட்டி அல்லது தான் தான் அந்த நபர் அல்லது அந்த நபர் அல்லாத வேறு நபரைக் காட்டி அவர் தான் அவர் என்று உண்மைக்குப் புறம்பாகக் கூறி, அதன் மூலம் வஞ்சிப்பதை  ஆள் மாறாட்டம் செய்ந்து வஞ்சித்தல் என்று கூறுப்படும். 

விளக்கம் - யாரைப் போல நாம் ஆள் மாறாட்டம் செய்கிறோமோ அந்த ஆள் உண்மையில் வாழ்ந்துக் கொன்டிருந்தாலும் அல்லது கற்பனை கதாப்பாத்திரமாக இருந்தாலும் , அவ்வாறு ஆள் மாறாட்டம் செய்யும் போது இந்தக் குற்றம் புரியப்படுகிறது.

உதாரணம் - 1.

ஒரு பெரிய மனிதருடைய பெயரும் தன் பெயரும் ஒன்றாக இருக்கும் போது அவர் தான் தான் என்று சொல்லும் போது. இந்தப் பிரிவின் கீழ் ஆள் மாறாட்டம் செய்த குற்றமாகின்றது.

 
உதாரணம் - 2.


இறந்து விட்ட மனிதர், தான் என நம்ப வைப்பதும்
இந்தப் பிரிவின் கீழ் ஆள் மாறாட்டம் செய்த குற்றமாகின்றது.



Section 416- Cheating by personation




    A person is said to "cheat by personation" if he cheats by pretending to be some other person, or by knowingly substituting one person for another, or representing that he or any other person is a person other than he or such other person really is.


Explanation. -The offence is committed whether the individual personated is a real or imaginary person.

Illustration

(a) A cheats by pretending to be a certain rich banker of the same name. A cheats by personation.

(b) A cheats by pretending to be B, a person who is deceased. A cheats by personation. 

தகவல் - http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1876

 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    


2 comments: