Sunday, 27 September 2015

தினம் ஒரு சட்டம் - இ.த.ச 511 இது தான் கடைசி சட்டம் - இ.த.ச வில்


குற்றம் செய்ய முயற்சிப்போருக்கு - எந்த தண்டனை விவரம் குறிப்பிடாதப் போது

 


இ.த.ச 511 -    இந்த இந்திய தண்டனைச் சட்டம்  படி ஒரு குற்றம் செய்ய முயற்சிப்பவருக்கு எந்த தண்டனையும் குறிப்பிடாதப்பட்சத்தில் அந்த நபர் ஆயுள் தண்டனை அல்லது சிறைத்தண்டனை பெறத்தக்க ஒரு குற்றத்தை செய்ய முயற்சித்தாலே போதும். 

அத்தகைய ஒரு குற்றத்திற்கு இந்த சட்டத் புத்தகத்தில் ஒரு தண்டனையை குறிப்பிட படவில்லையெனில் அவர் அந்த குற்றத்தை செய்ந்தால் என்ன தண்டனை கிடைக்குமோ அதில் பாதி கிடைக்கும்.



        உதாரணமாக அவர் ஆயுள் தண்டனை விதிக்கத்தக்க ஒரு குற்றத்தைப்புரிய முயற்ச்சித்தால் அதில் பாதியையும் அல்லது வேறு தண்டனைப் பெறத்தக்க ஒரு குற்றத்தைப் புரிய முயற்ச்சித்தால் அந்த தண்டனையின் அதிகப்பட்ச தண்டனையில் பாதியை தண்டனையையும்,

    மேலும் அந்த குற்றத்திற்கு எதாவது அபராதமாக மட்டுமே விதிக்கப்படுமானால் அதை மட்டும் விதிக்கப்படும் அல்லது அபராதமும் தண்டனையும் என்றால் இரண்டையும் சேர்த்து  தண்டனையாக விதிக்கப்படும்.




உதாரணம் - 1 

என்பவர் பி என்பவரின் நகைகளை திருடுவதற்காக எ என்பவரின் பெட்டியை உடைத்து நகையை எடுக்க முயற்ச்சித்து பெட்டியை உடைக்கிறான் ஆனால் பெட்டியில் நகை இல்லை. திருட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த செயல் புரியப்பட்டதால் , என்பவர் இந்தப் பிரிவின் கீழ் குற்ற வாளியாகிறார்.

உதாரணம் - 2 

என்பவர் ஒருவருடைய சட்டைப் பையில் கையை விட்டு திருடவேண்டும் என்று கையை உள்ளே விடுகிறார் ஆனால் பணம் இல்லை அதனால் திருட வில்லை ஆனாலும் இந்த சட்டப்பிரிவின் படி அவர் குற்றவாளியாகிறார் எனேன்றால் அவரின் மனம் அந்த செயலை செய்ய தூண்டியது (mens rea)


Section 511- Punishment for attempting to commit offences punishable with imprisonment for life or other imprisonment



          Whoever attempts to commit an offence punishable by this Code with *[imprisonment for life] or imprisonment, or to cause such an offence to be committed, and in such attempts does any act towards the commission of the offence, shall, where no express provision is made by this Code for the punishment of such attempt, 



 be punished with **[imprisonment of any description provided for the offence, for a term which may extend to one-half of the imprisonment for life or, as the case may be, one-half of the longest term of imprisonment provided for that offence], or with such fine as is provided for the offence, or with both.

Illustrations

(a) A makes an attempt to steal some jewels by breaking open a box, and finds after so opening the box, that there is no jewel in it. He has done an act towards the commission of theft, and therefore is guilty under this section.

(b) A makes an attempt to pick the pocket of Z by thrusting his hand into Z's pocket. A fails in the attempt in consequence of Z's having nothing in his pocket. A is guilty under this section.

* Subs. by Act 26 of 1955, s. 117 and Sch., for "transportation for life" (w.e.f. 1-1-1956).

** Subs. by Act 26 of 1955, sec. 117 and Sch., for certain original words (w.e.f. 1-1-1956). 




குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    இதில் வரும் படங்கள் கூகுள் தேடுப் பொறி மூலம் எடுக்கப்பட்டவை, தாங்களுக்கு உரியது என தகவல் தெரிவிப்பின் படம் நீக்கப்படும். 

No comments:

Post a Comment