Wednesday, 2 September 2015

தினம் ஓரு உரிமை - அரச கட்டளைகள் - முற்றும்.




இந்திய அரசியல் சாசனம் -50




    அரசு தமது பொதுப் பணிகளில் நீதித்துறையிலிருந்து நிர்வாகத்தை தனியே பிரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.







*[ உதாரணம் 1 - அதாவது ஒரு நீதித்துறையைச் சேர்ந்தவர், மற்றும் நிர்வாகத்துறை யை சேர்ந்த தாசில்தார் இவர்களை தனித்தனியே அறிக்கை தயாரிக்க அனுமதிக்க வேண்டும் இவர்கள் கூட்டு சேர்வது நலமற்றது.  ஏன் எனில் ஒரு காவல் நிலையத்தில் எதாவது ஒரு சிறைச்சாவு நடந்தால் அதனை கோட்டாச்சியர்  விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வார் அவ்வாறு இருக்கும் போது இருவரும் ஒரே அமைப்பின் கீழ்  இருவரும் இருந்தால் சரியாக விசாரிக்க முடியாது]

*[ உதாரணம் 2 - ஒரு மாவட்டத்தின் கோட்டாச்சியர் சில சமயங்களில் நீதித்துறை மாஜிஸ்திரேட் சில நேரங்களில் நிர்வாகத்துறை மாஜிஸ்திரேட்]


Section 20 Cr.P.C. (Executive Magistrates) :
In   every   District,   the   following   Officers   are   appointed   as   Executive. ஒவ்வொரு மாவட்டத்திலும் கீழ் கண்ட அதிகாரிகள் நிர்வாகத்துறை நடுவர்களாக நியமிக்கப்படுவார்கள். குற்றமுறை விசாரனை முறைச்சட்டத்தில் 20 தாவது பிரிவின் கீழ்



Magistrates by the Government U/S 20 Cr.P.C.
1. Collector -
மாவட்ட ஆட்சியர்
 2. Joint Collector - துனை மாவட்ட ஆட்சியர்
 3. District Revenue Officer - மாவட்ட வருவாய் அலுவலர்
 4. Revenue  Divisional officer - கோட்டாச்சியர்
 5. Tahsildar - வட்டாச்சியர்

       The above  Officers are appointed as Magistrates by virtue of the Offices held by them as noted against each, 
An executive magistrate exercises function, which are administrative or executive in nature such a granting of a license, sanctioning of prosecution, issuing of prohibitory orders etc. Apart from the Criminal Procedure Code, Executive Magistrate exercises so many functions under various acts like, The Kerala Police Act ,1960, The Indian Telegraph Act, the Press Registration and Books Act, 1867, The Kerala Stamp Act ,1959, The Registration of Births and Deaths Act1969, The Arms Act, The Petroleum Act, The Explosives Act ,1884, The Official Secrets Act 1923, The bonded Labour System(Abolition)Act, The prevention of atrocities Act, 1989, The Abkari Act etc.

 மேற்கண்ட உதாரணம் செய்தி தாளின்  மற்றும் செவி வழி கேட்டு கொடுக்கப்பட்டது.

2. The Code Of Criminal Procedure,1889

4. http://mulnivasiorganiser.bamcef.org/?p=482

இந்திய அரசியல் சாசனம் -51


அரசு கீழ் கண்டவற்றை அடைய பாடுப்படவேண்டும் அல்லது தேவைப்படும் அனைத்து முயற்சிகளை அவ்வவ்போது எடுத்துக் கொள்ள வேண்டும்.


- உலக நாடுகளுக்கிடையே  சமாதனத்தையும் நல்லுறவையும் பாதுக்காப்பையும் வளர்க்க 

- உலக நாடுகளுக்கிடையே நியாமனதும் கெளரமானதும் மான நட்புறவுகளை வளர்ப்பதற்கும் பராமறிப்பதற்கும்

- உலக மக்களுக்கிடையே உள்ள அமைப்புகளுக்குடையே ஒன்றோடு ஒன்று தொடர்புக் கொள்ளுவதற்கும் எற்ற சர்வதேச சட்டங்களுக்கும், உடன்படிக்கைக்களுக்கும், கட்டுப்பாட்டுகளுக்கும் உரிய மரியாதை அளிப்பதற்கும்.

- உலக நாடுகளுக்கிடையான சர்வ தேசப் பிரச்சனைகளை  மற்றும் நடுவர்களின் தீர்ப்புக்கள் சமர்க்கப்படுவதை ஊக்குவிப்பதற்கும்.



Article 50. Separation of judiciary from executive

judiciary
 
 executive 



 The State shall take steps to separate the judiciary from the executive in the public services of the State




51. Promotion of international peaceand security





 The State shall endeavour to—

 (a) promote international peace and security;


 (b) maintain just and honourable relations between nations;


 (c) foster respect for international law and treaty obligations in the dealings of organized peoples with one another; 


and
 

 (d) encourage settlement of international disputes by arbitration



 தகவல்: http://lawmin.nic.in/coi/coiason29july08.pdf
 




* குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை ஒரு பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.
மேலும் வாசிக்க

குற்ற வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் வருவாய் கோட்டாட்சியருக்கு இல்லை என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கொத்தடிமை சென்னை ஐகோர்ட்டில், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சி.கஜேந்திரன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

திருவள்ளூர் மாவட்டம், கீழம்பாக்கத்தில் உள்ள கத்தீரியார் ரைஸ்மில்லில், கடந்த 1990–ம் ஆண்டு முதல் 2005–ம் ஆண்டு வரை என் மாமனார் வாங்கிய முன் தொகைக்காக நானும், என் குடும்பத்தாரும் கொத்தடிமையாக வேலை செய்தோம். 2005–ம் ஆண்டு திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ), தாசில்தார் ஆகியோர் எங்களிடம் விசாரணை நடத்தி, எங்களை சொந்த கிராமத்துக்கு அனுப்பிவைத்தனர்.

செவ்வாய்பேட்டை போலீசார் ரைஸ்மில் உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரிப்பதற்காக, ஆவணங்கள் அனைத்தும் ஆர்.டி.ஓ.வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2005–ம் ஆண்டு முதல் எங்கள் வழக்கு மட்டுமல்லாமல், மேலும் 9 வழக்குகள் எந்த விசாரணையும் இல்லாமல் ஆர்.டி.ஓ. முன்பு நிலுவையில் உள்ளது.

அதிகாரம் இல்லை மத்திய அரசு கொண்டுவந்த கொத்தடிமை ஒழிப்பு சட்டம் 1976, பிரிவு 21–ன் கீழ், இதுபோன்ற வழக்குகளை விசாரிக்கும் அதிகாரத்தை நிர்வாக மாஜிஸ்திரேட்டான ஆர்.டி.ஓ., தாசில்தார் ஆகியோருக்கு வழங்கி தமிழக சமூக நலத்துறை 1987–ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது.

நீதித்துறை மாஜிஸ்திரேட்டு போல், நிர்வாகத்துறை மாஜிஸ்திரேட்டான ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த முடியாது. ஆர்.டி.ஓ. சட்டம்படித்தவரும் இல்லை. மாவட்ட மாஜிஸ்திரேட்டான கலெக்டருக்கு கிரிமினல் வழக்கை விசாரிக்க அதிகாரம் கிடையாது. எனவே, இந்த சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும். அதேபோல, இந்த சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விசாரிக்க ஆர்.டி.ஓ.வுக்கு அதிகாரம் வழங்கி, 1987–ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையையும் ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி அக்னிகோத்ரி, நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

சட்டப்பிரிவு ரத்து குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி, குற்ற வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் ஆர்.டி.ஓ.வுக்கு கிடையாது. அந்த வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் நீதித்துறை மாஜிஸ்திரேட்டுக்குத்தான் உள்ளது. கிரிமினல் வழக்குகள், அவற்றின் மேல்முறையீடு வழக்குகள் ஆகியவற்றை கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு தான் விசாரிக்க முடியும். கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு சட்டம் 1976, பிரிவு 21–யை அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று முடிவு செய்து, அதனை ரத்து செய்கிறோம்.

அதேபோல, இந்த வழக்குகளை விசாரிக்கும் அதிகாரத்தை ஆர்.டி.ஓ.வுக்கு வழங்கி தமிழக அரசு 1987–ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையையும் ரத்து செய்கிறோம். இந்த சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவான வழக்குகள் அனைத்தையும், சம்பந்தப்பட்ட தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளுக்கு சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ.க்கள் அனுப்பி வைக்க வேண்டும். அந்த ஆவணங்கள் கிடைத்த பின்னர், அந்த வழக்குகளை சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டுகள் விசாரித்து, விரைவாக பைசல் செய்யவேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர். 

1 comment:

  1. பிரமாண்டமான தகவலுக்கு நன்றி நண்பா...

    ReplyDelete