Monday, 28 September 2015

தினம் ஒரு சட்டம் - பெண்ணை கடத்தினால் என்ன தண்டனை


இ.த.ச 366 -கட்டாய திருமணம் செய்ய பெண்ணை கடத்தல்

     யாராவது, கவர்ந்தோ அல்லது கடத்தியோ ஒரு பெண்ணை அவளின் விருப்பமின்றி பிறக்கு திருமணம் முடிக்க அல்லது முடிக்கப்படும் என கடத்தி செல்வது குற்றமாகும். 

 
    மேலும் அவளுடைய விருப்பத்திற்கு விரோதமாக அல்லது கட்டாயப்படுத்தி , உடல் புணர்ச்சிக்கு அல்லது அத்தகைய உடல் புணர்ச்சிக்கு உட்படுவால் என தெரிந்திருந்தும் , அந்தப் பெண்ணை கவர்தலும் அல்லது கடத்தி செல்வதும் குற்றமாகும்.



    இந்தக் குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் வரையில் சிறைக் காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


Section 366- Kidnapping, abducting or inducing woman to compel her marriage, etc.
Whoever kidnaps or abducts any woman with intent that she may be compelled, or knowing it to be likely that she will be compelled, to marry any person against her will, or in order that she may be forced or seduced to illicit intercourse, or knowing it to be likely that she will be forced or seduced to illicit intercourse shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine; *[and whoever, by means of criminal intimidation as defined in this Code or of abuse of authority or any other method of compulsion, induces any woman to go from any place with intent that she may be, or knowing that it is likely she will be, forced or seduced to illicit intercourse with another person shall be punished as aforesaid].

* Added by Act 20 of 1923, sec. 2.



இ.த.ச 366-A- மைனர் பெண்ணை கட்டாய புணர்ச்சிக்கு கடத்தல்

    யாராவது, மைனர் பெண்ணை அதாவது பதினேட்டு வயது நிரம்பாத பெண்ணை, கடத்துவதும் ஆசைக் காட்டி கவர்ந்து செல்வதும் குற்றமாகும். மேலும் அந்தப் பெண்ணை ஒரு பாலியல் தொழில் செய்யவோ அல்லது வேறு ஒரு நபருக்கு அவள் கட்டாய பாலியல் தொல்லை அனுபவிக்கும் பொருட்டு அல்லது அத்தகைய செயல் நடைப் பெறும் என தெரிந்தும் கடத்துவதும் ஆசைக் காட்டி கவர்ந்து செல்வதும் ஒரு இடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு செல்லுமாறு சொல்வதும் குற்றமாகும். 



   இந்தக் குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் வரையில் சிறைக் காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

Section 366-A- Procreation of minor girl
Whoever, by any means whatsoever, induces any minor girl under the age of eighteen years to go from any place or to do any act with intent that such girl may be, or knowing that it is likely that she will be, forced or seduced to illicit intercourse with another person shall be punishable with imprisonment which may extend to ten years, and shall also be liable to fine.]

* Ins. by Act 20 of 1923, sec. 3. 



இ.த.ச 366-B- வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு பெண்ணைக் கடத்தல்

    யாராவது, இந்தியாவிற்கு வெளியிலிருந்து  இந்தியாவிற்குள் இருபத்தி வயது வரை நிரம்பாத பெண்ணை பாலியல் புணர்ச்சிக்கு உட்படுத்த அல்லது உட்படுத்தப் படுவாள் என்ற கருத்துடன்.


 அவரால் அல்லது பிறரால் அத்தகைய தவறு நடைப் பெறவேண்டும்  என ஒரு பெண்ணை கவர்ந்து வருவதும் அல்லது கடத்தி வருவதும் குற்றமாகும். 


   இந்தக் குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் வரையில் சிறைக் காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். 

இந்தியா என்ற பதம் ஜம்மு மற்றும் காஷ்மீர் நீங்கலாக எனக் கொள்ளவும்.



Section 366-B- Importation of girl from foreign country
1 Whoever imports into 2[India] from any country outside India 3[or from the State of Jammu and Kashmir] any girl under the age of twenty-one years with intent that she may be, or knowing it to be likely that she will be, forced or seduced to illicit intercourse with another person, 4[***] shall be punishable with imprisonment which may extend to ten years and shall also be liable to fine.]

1. Ins. by Act 20 of 1923, sec. 3.

2. The words "British India" have successively been subs. by the A.O. 1948, the A.O. 1950 and Act 3 of 1951, sec. 3 and Sch. to read as above.

3. Ins. by Act 3 of 1951, sec. 3 and Sch.

4. Certain words omitted by Act 3 of 1951, sec. 3 and Sch.



குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

No comments:

Post a Comment