Showing posts with label தினம் ஒரு சட்டம். Show all posts
Showing posts with label தினம் ஒரு சட்டம். Show all posts

Friday, 8 April 2016

தினம் ஒரு சட்டம் - பொய்யை உண்மைப் போல கூறி ஏமாற்றினால்



இ.த.ச 199 -
           


      யாராவது ஒருவர்,  அவர் அளித்துள்ள அல்லது அவர் ஒப்புதல் கொடுத்துள்ள அறிக்கையில் காணப்படும் விவரங்களை ஒரு நீதிமன்றம் அல்லது அரசு பொது ஊழியர் அல்லது சட்டத்தின் கீழ் பணியாற்றுகின்ற அதிகாரம் பெற்றுள்ள வேறு யாராவது சாட்சியமாக பயன்படுத்துவார்கள் என்று தெரிந்தும், 

    அந்த அறிக்கையில் அதன் நோக்கத்தைப் பாதிக்கக்கூடிய வகையில் பொய்யான அல்லது உண்மைக்கு மாறான தகவல்களைத் தருவதும் அல்லது உபயோகப்படுத்துவதும் குற்றமாகும்.  

   இந்தக் குற்றத்திற்கு பொய்சாட்சி சொன்னவர்களுக்கு அல்லது உருவாக்கியவர்களுக்கு அளிப்படவேண்டிய தண்டனையே விதிக்கப்படவேண்டும்.



Section 199- False statement made in declaration which is by law receivable as evidence
 

    Whoever, in any declaration made or subscribed by him, which declaration any Court of Justice, or any public servant or other person, is bound or authorized by law to receive as evidence of any fact, makes any statement which is false, and which he either knows or believes to be false or does not believe to be true, touching any point material to the object for which the declaration is made or used, 

     shall be punished in the same manner as if he gave false evidence.
 



குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.       


 

Tuesday, 29 March 2016

தினம் ஒரு சட்டம் - பொய்ச்சான்றினை உருவாக்குதல்


இ.த.ச 192 -


         யாராவது, ஒரு தவறான சூழ்நிலையை உண்மையானதாக்த் தோன்றும்படி உருவாக்குவதும் குற்றமாகும் அல்லது ஒரு பொய்யான தகவலை ஒரு புத்தகத்தில் பதிப்பதும் அல்லது கணினி சம்பந்தப்பட்ட ஆவணத்தில் பதிவதும் அல்லது எத்தகைய ஆவணத்திலும் அல்லது கணினி சம்பந்தப்பட்ட ஆவணத்தில் அதை பதிவதும் அதனை ஒரு நீதிமன்றத்தில் சாட்சியமாகத் தாக்கல் செய்யப்பட இருக்கும் ஒரு புத்தகத்தில் அல்லது கணினி சம்பந்தப்பட்ட ரெகார்டில் அல்லது ஆவணத்தில் ஒரு பொய்யான தகவலைப் பதிவு செய்யவைப்பதும், அல்லது ஒரு தவறானப் பதிவு செய்யவைப்பதும், ஒரு தவறான சூழ்நிலையை உண்மையானதாக்த் தோன்றும்படி உருவாக்குவதும் குற்றமாகும். ஏனேன்றால் அந்தத் தவறான தகவலை நம்பி ஒரு பொது ஊழியரோ அல்லது ஒரு நீதிமன்றமோ உண்மைக்கு புறம்பான ஒரு கருத்தினை உருவாக்க நேரிடும். ஆகவே இந்தக் குற்றத்தை பொய்ச் சான்றினை உருவாக்குதல் என்று கூறுகிறோம்.
 
விளக்கம்
(a) A என்பவர் Z க்கு சொந்தமான ஒரு பெட்டியில் ஒரு நகையை போட்டு அவரை திருடர் என நம்பவைக்க, அவ்வாறே அந்த நகை Z பெட்டியிலிருந்து எடுக்கப்படுகின்றது அவரை திருடராக நம்பப்படுகின்றது.  A என்பவர் இந்தப் பிரிவின் கீழ் பொய்யான ஆவணங்களை உண்டாக்குன்றார்.

(b) A  என்பவர் நீதிமன்றத்தில் உண்மையான தகவல் என நம்பவைக்க தம்முடைய கடையில் உள்ள புத்தகத்தில் ஒரு தவறான தகவலை பதிய வைக்கின்றார். A
என்பவர் இந்தப் பிரிவின் கீழ் பொய்யான ஆவணங்களை உண்டாக்குன்றார் .


1. Subs. by Act 21 of 2000, sec. 91 and Sch. I, for certain words (w.e.f. 17-10-2000).


Section 192- Fabricating false evidence

       Whoever causes any circumstance to exist or 1[makes any false entry in any book or record or Electronic Record, or makes any document or Electronic Rercord containing a false statement], intending that such circumstance, false entry or false statement may appear in evidence in a judicial proceeding, or in a proceeding taken by law before a public servant as such, or before an arbitrator, and that such circumstance, false entry or false statement, so appearing in evidence, may cause any person who in such proceeding is to form an opinion upon the evidence, to entertain an erroneous opinion touching any point material to the result of such proceeding, is said "to fabricate false evidence".

Illustrations

(a) A puts jewels into a box belonging to Z, with the intention that they may be found in that box, and that this circumstance may cause Z to be convicted of theft. A has fabricated false evidence.

(b) A makes a false entry in his shop-book for the purpose of using it as corroborative evidence in a Court of Justice. A has fabricated false evidence.

(c) A, with the intention of causing Z to be convicted of a criminal conspiracy, writes a letter in imitation of Z's handwriting, purporting to be addressed to an accomplice in such criminal conspiracy, and puts the letter in a place which he knows that the officers of the Police are likely to search. A has fabricated false evidence.

1. Subs. by Act 21 of 2000, sec. 91 and Sch. I, for certain words (w.e.f. 17-10-2000).
 
 
 
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    
 

Monday, 28 March 2016

தினம் ஒரு சட்டம் - பொய் சாட்சி என்றால் என்ன......

இ.த.ச 191

      யாராவது ஒருவர், சட்டப்படியும் நீதியின்படியும் சத்தியப் பிரமாணம் செய்து தான் கூறப்போவது உண்மையை மட்டும் தான் என சத்தியம் செய்து  சான்று அளிக்கும்போது போது உண்மையை மட்டும் கூறவேண்டும். பொய்யானதை உண்மையென்று கூறுவதைப் பொய்ச் சான்று அளித்தல் என்கிறோம்.



விளக்கம்-1.

    வாய்மொழியாகக் கொடுக்கும் வாக்குமுலத்தையன்றி எழத்து முலமாகத் தரப்படும் வாக்குமூலங்களும் இதில் அடங்கும்.


விளக்கம்-2.

    தனக்குத் தெரிந்தவற்றைத் தெரியாது என்பதும், தெரியாததைத் தெரியும் என்று கூறுவதும் பொய்ச்சான்று ஆகும்.



Section 191- Giving false evidence

   Whoever, being legally bound by an oath or by an express provision of law to state the truth, or being bound by law to make a declaration upon any subject, makes any statement which is false, and which he either knows or believes to be false or does not believe to be true, is said to give false evidence.

Explanation 1-A statement is within the meaning of this section, whether it is made verbally or otherwise.

Explanation 2-A false statement as to the belief of the person attesting is within the meaning of this section, and a person may be guilty of giving false evidence by stating that he believes a thing which he does not believe, as well as by stating that he knows a thing which he does not know.

Illustrations

(a) A, in support of a just claim which B has against Z for one thousand rupees, falsely swears on a trial that he heard Z admit the justice of B's claim. A has given false evidence.

(b) A, being bound by an oath to state the truth, states that he believes a certain signature to be the handwriting of Z, when he does not believe it to be the handwriting of Z. Here A states that which he knows to be false, and therefore gives false evidence.

(c) A, knowing the general character of Z's handwriting, states that he believes a certain signature to be the handwriting of Z; A in good faith believing it to be so. Here A's statement is merely as to his belief, and is true as to his belief, and therefore, although the signature may not be the handwriting of Z, A has not given false evidence.

(d) A, being bound by an oath to state the truth, states that he knows that Z was at a particular place on a particular day, not knowing anything upon the subject. A gives false evidence whether Z was at that place on the day named or not.

(e) A, an interpreter or translator, gives or certifies as a true interpretation or translation of a statement or document which he is bound by oath to interpret or translate truly, that which is not and which he does not believed to be a true interpretation or translation. A has given in false evidence.
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    

Thursday, 24 March 2016

தினம் ஒரு சட்டம் - பொது ஊழியர் சட்டப்படி இடும் ஆணையை மீறுதல்


இ.த.ச 188 

       யாராவது ஒருவர் தமக்கு நன்றாக தெரிந்து, ஒரு பொது ஊழியர் சட்டப்படி பொது நலன் கருதி ஒரு ஆனையை நிறைவேற்ற ஒரு கட்டளையிட அல்லது உத்திரவிட அதனை வேண்டும் என்றே நாம் செய்யாமல் இருப்பதும் அல்லது அதனை மீறி நடப்பதும் குற்றமாகும்.

அத்தகைய உத்தரவு ஒரு சட்டரீதியான முறையில் ஒரு சொத்தை காப்பதற்கோ அல்லது அத்தகைய சொத்தை சட்டப்படி தம்வசத்தில் வைத்திருப்பதற்கும் சட்டத்தில் இடம் இருக்கும் போது அத்தகைய உத்தரவை மதித்து நடப்பது நமது கடமையாகின்றது.





       அத்தகைய உத்தரவை மீறுவதும் அதனால் ஒரு தொல்லை விளைந்தால் குற்றமாகும் இந்த குற்றத்திற்கு ஒரு மாதம் வரை வெறுங்காவல் தண்டனை அல்லது இரு நூறு ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.


       மேலும் அத்தகைய ஆனை அல்லது உத்தரவை நாம் மீறி நடப்பதால் மனித உயிருக்கு ஏதாவது சேதம் அல்லது பாதுக்காப்புக்கு ஒரு அச்சுறுத்தல் அல்லது சுகாதாரக்கேடு உண்டானால் அல்லது அதன் விளைவாக ஒரு கலகம் நடைப் பெற காரணமாகவோ அல்லது  அதன் விளைவாக ஒரு கலகம் பெற்றாலாலோ தண்டனை மேலும் நீட்டிக்கப்படும்.

      இதற்கு ஆறு மாதம் வரைக்கூடிய சிறைத்தண்டனை அல்லது  ஆயிரம் ரூபாய்  வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

விளக்கம் - அத்தகைய அத்துமீறுதல் ஒரு ஒரு சேதத்தை  உண்டாக்க வேண்டும் என்ற எண்ணம் குற்றவாளிக்கு இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவர் பொது ஊழியரின் ஆணைக்கு கட்டுப்படாமல் இருந்தாலே அல்லது அதனால் ஒரு தீங்கு உண்டாகும் என அறிந்தாலே போதுமானதாகும்.



உதாரணம் - ஒரு பொது ஊழியர் ஒரு குறிப்பிட்ட சாலையில் மத ஊர்வலத்துக்கு தடை விதித்துள்ளார் அவருடைய உத்தரவை மீறு மத ஊர்வலம் நடத்துவதால் மதக்கலவரம் உண்டாகின்றார், அது இந்தப் பிரிவின் கீழ் குற்றமாகும்.
 




       
         
Section 188- Disobedience to order duly promulgated by public servant

     Whoever, knowing that, by an order promulgated by a public servant lawfully empowered to promulgate such order, he is directed to abstain from a certain act, or to take certain order with certain property in his possession or under his management, disobeys such direction,

      Shall, if such disobedience causes to tender to cause obstruction, annoyance or injury, or risk of obstruction, annoyance of injury, to any persons lawfully employed, be punished with simple imprisonment for a term which may extend to one month or with fine which may extend to two hundred rupees, or with both;

      And if such disobedience causes or trends to cause danger to human life, health or safety, or causes or tends to cause a riot or affray, shall be punished with imprisonment of either description for a term which may extend to six months, or with fine which may extend to one thousand rupees, or with both.

Explanation-It is not necessary that the offender should intend to produce harm, or contemplate his disobedience as likely to produce harm. It is sufficient that he knows of the order which he disobeys, and that his disobedience produces, or is likely to produce, harm.

Illustration

An order is promulgated by a public servant lawfully empowered to promulgate such order, directing that a religious procession shall not pass down a certain street. A knowingly disobeys the order, and thereby causes danger of riot. A has committed the offence defined in this section.

http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1628

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    
 

Sunday, 20 March 2016

தினம் ஒரு சட்டம் - சட்டப்பூர்வமான ஏலம் விடும் சொத்தை தடுத்தல்


இ.த.ச 184

     யாராவது ஒருவர், சட்டப்பூர்வமான முறையில் சட்டப்பூர்வமான முறையில் அனுமதிப்பெற்று  ஒரு சட்டப்பூர்வமான ஏஜன்ட் அல்லது அரசாங்க பொது ஊழியர் அந்த சொத்தை ஏலம் விடும் போது அதனை தடுப்பதும் இறையூறு செய்வதும் குற்றமாகும்.



      இந்தக் குற்றத்திற்கு ஒரு மாதம் வரைக்கூடிய சிறைத்தண்டனை அல்லது  ஐநூரு ரூபாய்  அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.



Section 184- Obstructing sale of property offered for sale by authority of public servant
 

     Whoever intentionally obstructs any sale of property offered for sale by the lawful authority of any public servant as such, 

     shall be punished with imprisonment of either description for a term which may extend to one month, or with fine which may extend to five hundred rupees, or with both.
 
 

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.     
 
 

Saturday, 19 March 2016

தினம் ஒரு சட்டம் - சட்டப்பூர்வமான முறையில் கட்டளைப் பெற்ற பொது ஊழியரை அனுமதிக்க மறுப்பது


இ.த.ச 183

        யாராவது ஒருவர், ஒரு சட்ட பூர்வமான முறையில் ஒரு சொத்தை கைப்பற்ற ஒரு அதிகாரம் அல்லது கட்டளைப் பெற்று அதைக் கைப்பற்ற ஒரு பொது ஊழியர்  வரும் போது அவரைத் தடுத்தி நிறுத்தி தடுப்பதும் அல்லது அவரை அனுமதிக்க மறுப்பதும் குற்றமாகும்.

      இந்தக் குற்றத்திற்கு ஆறு மாதங்கள் வரைக்கூடிய சிறைத்தண்டனை அல்லது  அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


Section 183- Resistance to the taking of property by the lawful authority of a public servant


    Whoever offers any resistance to the taking of any property by the lawful authority of any public servant, knowing or having reason to believe that he is such public servant, 

    shall be punished with imprisonment of either description for a term which may extend to six months, or with fine which may extend to one thousand rupees, or with both.

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    

Friday, 18 March 2016

தினம் ஒரு சட்டம் - பொது ஊழியருக்கு அளிக்கும் வாக்குமூலத்தில் பொய் கூறினால்


இ.த.ச 181

       யாராவது ஒருவர்,   தாம் மனமுன்வந்து ஒரு பொது ஊழியர் அல்லது அத்தகைய அதிகாரம் பெற்ற ஒருவர் முன்பு அளிக்கும் வாக்குமூலம் அல்லது உறுதிமொழியில் ஒரு பொய்யான தகவலை அளிப்பதும் அல்லது பொய்யான உறுதிமொழியைக் கூறுவதும் , அல்லது பொய்யானது என தெரிந்தும் ஒரு பொய்யான வாக்குமூலத்தை அளிப்பதும், அது பொய்யானது என தெரிந்தும் அத்தகைய தகவலை உண்மையானது நம்புவதற்கு ஏதுவானது என சான்றளிப்பதும் குற்றமாகும்.



     இந்தக் குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரைக்கூடிய சிறைத்தண்டனை அல்லது  அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


Section 181- False statement on oath or affirmation to public servant or person authorized to administer an oath or affirmation
 

     Whoever, being legally bound by an oath *[or affirmation] to state the truth on any subject to any public servant or other person authorized by law to administer such oath 1[or affirmation], makes, to such public servant or other person as aforesaid, touching the subject, any statement which is false, and which he either knows or believes to be false or does not believe to be true,

    shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, and shall also be liable to fine.

* Ins. by Act 10 of 1873, sec. 15.
 
 
 
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    
 

Wednesday, 16 March 2016

தினம் ஒரு சட்டம் - வாக்குமூலத்திற்கு சத்தியப்பிரமாணம் செய்ய மறுத்தல்


இ.த.ச 178

    யாராவது ஒருவர்,  பொது ஊழியர் முன்பு ஆஜராகி ஒரு விசாரனைக்கு அல்லது ஒரு செயலைப் உறுதிப்படுத்துவதற்கு அளிக்கப்படும் வாக்குமூலத்திற்கு அல்லது சம்பவத்தை உறுதிப்படுத்தப்படுவதற்கு அளிக்கப்படும் சாட்சியத்திற்கு முன்பு....  உறுதிமொழி  அளிக்கப்பட வேண்டும் என்ற சட்டப்படி நியமிக்கப்பட்ட நியதிப்படி சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும், இவ்வாறு இருக்க சத்தியப்பிரமாணம்  செய்ய மறுப்பது குற்றமாகும்.

அவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்ய மறுக்கும் குற்றத்திற்கு ஆறு மாதங்கள் வரை வெறும் சிறைக்காவல் தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

Section 178- Refusing oath or affirmation when duly required by public servant to make it
 

    Whoever refuses to bind himself by an oath *[or affirmation] to state the truth, when required so to bind himself by a public servant legally competent to require that he shall so bind himself, 

   shall be punished with simple imprisonment for a term which may extend to six months, or with fine which may extend to one thousand rupees, or with both.

* Ins. by Act 10 of 1873, sec. 15.
 
 
 

 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.  

Tuesday, 15 March 2016

தினம் ஒரு சட்டம் - அதிகாரிகளுக்கு தவறான தகவலைத் தந்தால் அது குற்றமாகும்


இ.த.ச 177


      யாராவது ஒருவர், நாம் சட்டப்படியும் நியாப்படியும் ஒரு பொது ஊழியர் ஒரு தகவலைக் கேட்கும் போது நான் சரியான தகவலை தர  பொறுப்பாகின்றோம்.

    அதனை அறிந்தும் நாம் ஒரு தவறான தகவலையும் அறிக்கையையும் தருவது குற்றமாகும். அது அவருக்கு நன்றாக தெரியும் அது ஒரு தவறான தகவல் என இது குற்றமாகும்.

    இந்தக் குற்றத்திற்கு ஆறுமாதங்கள் வரை வெறுங்காவல் தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் வரைக் கூடிய அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

அல்லது 

    ஒரு குற்றத்தைப் பற்றி நாம் தகவல் தர கடமைப் பட்டு இருக்கின்றோம் அல்லது ஒரு நடைப் பெற இருக்கும் ஒரு குற்றத்தை பற்றி நாம் தகவல் தர கடமைப்பட்டு இருக்கின்றோம்.  இவைகளை செய்யாமல் நாம் குற்றவாளிகளை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அத்தகைய தகவலை தராமல் இருப்பதும் மறைப்பதும் குற்றமாகும்.

     இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்க கூடிய சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.



Section 177- Furnishing false information
 
  Whoever, being legally bound to furnish information on any subject to any public servant, as such, furnishes, as true, information on the subject which he knows or has reason to believe to be false, 
   shall be punished with simple imprisonment for a term which may extend to six months, or with fine which may extend to one thousand rupees, or with both;

Or, if the information which he is legally bound to give respects the commission of an offence, or is required for the purpose of preventing the commission of an offence, or in order to the apprehension of an offender, with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.

Illustrations

(a) A, a landholder, knowing of the commission of a murder within the limits of his estate, willfully misinforms the Magistrate of the district that the death has occurred by accident in consequence of the bite of a snake. A is guilty of the offence defined in this section.

(b) A, a village watchman, knowing that a considerable body of strangers has passed through his village in order to commit a dacoity in the house of Z, a wealthy merchant residing in a neighbouring place, and being being bound under clause 5, section VII, 1[Regulation III, 1821], of the Bengal Code, to give early and punctual information of the above fact to the officer of the nearest police-station, willfully misinforms the police-officer that a body of suspicious characters passed through the village with a view to commit dacoity in a certain distant place in a different direction. Here A is guilty of the offence defined in the later part of this section.

2[Explanation-In section 176 and in this section the word "offence" includes any act committed at any place out of 3[India], would be punishable under any of the following sections, namely, 302, 304, 382, 392, 393, 394, 395, 396, 397, 398, 399, 402, 435, 436, 449, 450, 457, 458, 459 and 460; and the word "offender" includes any person who is alleged to have been guilty of any such act.]

1. Rep. by Act 17 of 1862.

2. Added by Act 3 of 1894

3. The words "British India" have successively been subs. by the A.O.1948. the A.O. 1950 and Act 3 of 1951, sec. 3 and sch. to read as above.
 
 
 
 
 
 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.  
 
 

Monday, 14 March 2016

தினம் ஒரு சட்டம் - ஒரு குற்றத்தைப் பற்றிய தகவல் தராமல் இருந்தால் அது குற்றமாகும்.

இ.த.ச 176


    யாராவது அல்லது எவர் ஒருவர், சட்டப்படி ஒரு பொது ஊழியர் ஒரு தகவல் அல்லது அறிவிப்பைப் பற்றி கேட்கப்படும் போது அதனைப் பற்றிய தமக்கு தெரிந்த தகவலை சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம். அவ்வாறு நடந்த எந்தகைய சம்பவத்தைப் பற்றிய  அறிவிப்பை அல்லது அது தொடர்பான எந்த தகவலை தராமல் இருப்பதும் உண்மையை மறைப்பதும் குற்றமாகும்.  இது தொடர்பாக சட்டத்தில் ஒரு குறிப்பிட்ட கால ஆவகாசத்தக்குள் தெரிவிக்க வேண்டும் என சட்டத்தில் இருக்கின்றது, அத்தகைய கால ஆவகாசத்துக்குள் தெரிவிக்காமல் இருப்பது குற்றமாகும்.

    இந்தக் குற்றத்திற்கு ஒராண்டு வரை சிறைத் தண்டனை அல்லது ஐந்து நூறு ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

  அல்லது அத்தகைய அறிவிப்பு அல்லது தகவல் ஒரு குற்ற சம்பவத்தை சார்ந்ததாக இருப்பின், அல்லது அத்தகைய அறிவிப்பு அல்லது தகவல் மறைக்கப்பட்டு அதன் மூலம் குற்ற சம்பவத்தில் ஈடுப்பட்ட ஒரு குற்றவாளியை காப்பற்ற வேண்டும் என தராமல் இருப்பதும் குற்றமாகும், அவருக்கு ஆறு மாதங்கள் வரையில் கூடிய சிறைத் தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் வரைக் கூடிய அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.


  அல்லது அத்தகைய அறிவிப்பு அல்லது தகவல் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898 ன் பிரின் 565 ன் கீழ் அறிவிப்பு அல்லது தகவல் பொது ஊழியர்களுக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என  கூறப்பட்டிருக்கும் போது, அத்தகைய தகவலையோ அல்லது அறிவிப்பையோ பொது ஊழியருக்கு தராமல் இருப்பது குற்றமாகும். 

   அத்தகைய குற்றத்திற்கு ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.


Section 176- Omission to give notice or information to public servant by person legally bound to give it
    

    Whoever, being legally bound to give any notice or to furnish information on any subject to any public servant, as such, intentionally omits to give such notice or to furnish such information in the manner and at the time required by law, shall be punished with simple imprisonment for a term which may extend to one month, or with fine which may extend to five hundred rupees, or with both;

     Or, if the notice or information required to be given respects the commission of an offence, or is required for the purpose or preventing the commission of an offence, or in order to the apprehension of an offender, with simple imprisonment for a term which may extend to six month, or with fine which may extend to one thousand rupees, or with both;

     *[Or, if the notice or information required to be given is required by an order passed under sub-section (1) of section 565 of the Code of Criminal Procedure, 1898 (5 of 1898) with imprisonment of either description for a term which may extend to six months, or with fine which may extend to one thousand rupees, or with both.]

* Added by Act 22 of 1939, sec. 2. 


 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

தினம் ஒரு சட்டம் - ஆவணத்தை ஆனையிடும் போது சமர்ப்பிக்க தவறினால்


இ.த.ச 175

      யாராவது, சட்டப்படி ஒரு ஆவணத்தை அல்லது கணினி சம்பந்தப்பட்ட ஆவணத்தை, ஒரு பொது ஊழியரிடம் சமர்ப்பிக்கபட வேண்டும் என ஒரு ஆணையிடும் போது,  அல்லது கேட்டுக் கொள்ளப்படும் போது அவர் அதற்கு கட்டுப்பட வேண்டும் , அதற்கு கட்டுப்படாமல் அத்தகைய ஆவணத்தை அல்லது கணினி சம்பந்தப்பட்ட ஆவணத்தை சமர்ப்பிக்காமல் இருப்பது குற்றமாகும் .

இந்தக் குற்றத்திற்கு ஒரு மாதம் வரை சிறைக்காவல் அல்லது ஐந்து நூறு ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

அல்லது அத்தகைய ஆவணம் அல்லது கணினி சம்பந்தப்பட்ட ஆவணத்தை ஒரு நீதிமன்றம் ஆணையிடும் போது அதை செய்யாமல் அத்தகைய ஆவணத்தை சமர்ப்பிக்காமல் இருப்பது குற்றமாகும்.

 இந்தக் குற்றத்திற்கு ஆறு மாதம் வரை சிறைக்காவல் அல்லது ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

விளக்கம்

எ என்பவர் சட்டப்படி ஒரு ஆவணத்தை ஒரு மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய கடமையும் பொருப்பும் உடையவர், அவர் தம் மனவிருப்பப்படி ஒரு தவறிழைக்க வேண்டும் என அத்தகைய ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல் இருப்பது இந்தப் பிரிவின் கீழ் குற்றமாகும்.
 
A being legally bound to produce a document before a **[District Court], intentionally omits to produce the same. A has committed the offence defined in this section.



Section 175- Omission to produce to document or electronic record to public servant by person legally bound to produce it
    Whoever, being legally bound to produce or deliver up any *[document or Electronic Record] of any public servant, as such, intentionally omits so to produce or deliver up the same, shall be punished with simple imprisonment for a term which may extend to one month, or with fine which may extend to five hundred rupees, or with both;

Or, if the *[document or Electronic Record] is to be produced or delivered up to a Court of Justice, with simple imprisonment for a term which may extend to six months, or with fine which may extend to one thousand rupees, or with both.

Illustration

A being legally bound to produce a document before a **[District Court], intentionally omits to produce the same. A has committed the offence defined in this section.

1. Subs. by Act 21 of 2000, sec. 91 and Sch. I, for "document" (w.e.f. 17-10-2000)

2. Subs. by the A.O.1950, for "Zila Court".
 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

Saturday, 12 March 2016

தினம் ஒரு சட்டம் - சம்மனுக்கு ஆஜராகமல் இருந்தால்


இ.த.ச 174.


      யாராவது, ஒரு பொது ஊழியரால் ஒரு சம்மன் அல்லது அறிவிப்பு அல்லது ஆணை அனுப்பப்பட்டு , அதனை யாருக்கு அனுப்பினாரோ அவர் சம்மனைப் பெற்று அதில் கூறப்பட்டுள்ள இடத்தில், அதில் கூறப்பட்டுள்ள நாளில் மேலும் கூறப்பட்டுள்ள நேரத்தில் நேரில் வர வேண்டும் அல்லது ஆஜராக வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படும் போது அவர் அந்த சம்மன் அல்லது அறிவிப்பு அல்லது ஆணைக்கு கட்டுப்பட்டு நேரில் ஆஜராக வேண்டும்.

     அவர் வேண்டும் என்றே அந்த சம்மனுக்கு மதிப்பளிக்காமல் அந்த சம்மனைப் புறக்கனித்து நேரில் ஆஜராகமலும் அல்லது அதற்கு பதிலளிக்காமல் இருப்பது குற்றமாகும். 

   இந்தக் குற்றத்திற்கு ஒரு மாதம் வரை சிறைத்காவல் தண்டனை அல்லது ஐநூறு ருபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

 அல்லது அத்தகைய சம்மன் அல்லது அறிவிப்பு அல்லது தாக்கீது ஒரு நீதிமன்றத்தால் அனுப்பப்படும் போது அதற்கு அவராலோ அல்லது அவரால் நியமிக்கப்பட்ட நபரால் பதிலோ அல்லது நேரிலோ ஆஜராகாமல் இருப்பது குற்றமாகும்.


 இந்தக் குற்றத்திற்கு ஆறு மாதம் வரை சிறைத்காவல் தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.




Section 174- Non-attendance in obedience to an order form public servant
 
   Whoever, being legally bound to attend in person or by an agent at a certain place and time in obedience to a summons, notice, order or proclamation proceeding from any public servant legally competent, as such public servant, to issue the same,

Intentionally omits to attend at that place of time, or departs form the place where he is bound to attend before the time at which it is lawful for him to depart,

Shall be punished with simple imprisonment for a term which may extend to one month, or with fine which may extend to five hundred rupees, or with both;

Or, if the summons, notice, order of proclamation is to attend in person or by agent in a Court of Justice, with simple imprisonment for a term which may extend to six months, or with fine which may extend to one thousand rupees, or with both.

Illustrations

(a) A, being legally bound to appear before the *[High Court] at Calcutta, in obedience to a subpoena issuing from that Court, intentionally omits to appear. A has committed the offence defined in this section.

(b) A, being legally bound to appear before a **[District Judge], as a witness, in obedience to a summons issued by that 2[District Judge] intentionally omits to appear. A has committed the offence defined in this section.

*Subs. by the A.O.1950, for "Supreme Court".

**Subs. by the A.O.1950. for "Zila Judge".
 
 
 
 
 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 
 

Friday, 11 March 2016

தினம் ஒரு சட்டம் - சம்மனை அலட்சியப் படுத்தினால்


இ.த.ச 173



    யாராவது ஒருவர், ஒரு பொது ஊழியரிடமிருந்து வருகின்ற அழைப்பானை அல்லது உத்திரவு அல்லது தாக்கீதை அனுப்படுகின்ற நபருக்கு போய் சேரவிடாமல் தடுப்பதும் அதனை ஒரு பொதுமக்களின் பார்வைக்கு படும் படி ஒட்டப்பட்டதை அவ்விடத்திலிருந்து அகற்றுவதும் அல்லது அதனை மறைப்பதும் அல்லது ஒட்டப்படுவதை தடுப்பதும் அத்தகைய அறிவிப்பை செய்யவிடாமல் தடுப்பதும் குற்றமாகும்.



    இந்தக் குற்றத்திற்கு ஒரு மாதம் வரை சிறைத் தண்டனை அல்லது ஐந்து நூறு ருபாய் வரை அபராதம் தண்டனையாக வழங்கப்படும்.



   அத்தகைய அழைப்பானை அல்லது உத்திரவு அல்லது தாக்கீது ஒரு ஆவணத்தை சமர்ப்பிக்குமாறு ஒரு நீதிமன்றத்தால் ஒரு ஆவணத்தை அல்லது கணினி சம்பந்தப்ட்ட ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என அனுப்படும் போது அதனை செவிமடுக்காமல் இத்தகைய காரியத்தை புரிவது மேலும் தண்டனையை அதிகரிக்கும் அவருக்கு ஆறு மாதங்கள் வரைக் கூடிய சிறைத் தண்டனை அல்லது ஆயிரம் ருபாய் வரைக் கூடிய அபாரதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும்.





Section 172- Absconding to avoid service of summons or other proceeding
Whoever absconds in order to avoid being served with a summons, notice or order, proceeding form any public servant legally competent, as such public servant, to issue such summons, notice or order, shall be punished with simple imprisonment for a term which may extend to one month, or with fine which may extend to five hundred rupees, or with both;

or, if the summons or notice or order is to attend in person or by agent, or to *[produce a document or an electronic record in a Court of Justisce], with simple imprisonment for a term which may extend to six month, or with fine which may extend to five hundred rupees, or with both;

* Subs. by Act 21 of 2000, sec. 91 and Sch. I, for "produce a document in a Court of Justice"



 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 




Tuesday, 8 March 2016

தினம் ஒரு சட்டம் - அழைப்பானையை பெறாமல் ஒளிந்துக் கொன்டால்



இ.த.ச 172




         யாராவது , ஒரு பொது ஊழியரிடமிருந்து வருகிற சம்மன் அல்லது தாக்கிதை அல்லது அழைப்பானை பெறாமல் மறைந்துக் கொள்வதும் அல்லது ஒளிந்துக் கொள்வதும் குற்றமாகும்.


        அந்தக்குற்றத்திற்கு ஒரு மாதம் வரை சிறைத்தண்டனை அல்லது அல்லது அபராதமாக ஐநூறு ருபாய் வரை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

          அல்லது ஒரு நீதிமன்றத்திலிருந்து ஒரு சம்மன் அல்லது அழைப்பானை அல்லது தாக்கீது அனுப்பி ஒரு நபர் அல்லது அவருடைய நபர் அல்லது கணினி சம்பந்தப்பட்ட ஆவணத்தை கொனரவேண்டும் என ஒரு நபருக்கோ அல்லது நபரின் பிரதிநிதிக்கோ அல்லது முகவருக்கோ அனுப்பும் பட்சத்தில் அதனை பெற்றுக் கொள்ளாமல் அல்லது செவி சாய்க்காமல் இருக்கும் நபருக்கு ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கும் சிறைத்தண்டனை அல்லது அபராதமாக ஐநூறு ருபாய் வரை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.


Section 172- Absconding to avoid service of summons or other proceeding



    Whoever absconds in order to avoid being served with a summons, notice or order, proceeding form any public servant legally competent, as such public servant, to issue such summons, notice or order, shall be punished with simple imprisonment for a term which may extend to one month, or with fine which may extend to five hundred rupees, or with both;

    or, if the summons or notice or order is to attend in person or by agent, or to *[produce a document or an electronic record in a Court of Justisce], with simple imprisonment for a term which may extend to six month, or with fine which may extend to five hundred rupees, or with both;

* Subs. by Act 21 of 2000, sec. 91 and Sch. I, for "produce a document in a Court of Justice" 


 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

மகளிர் தினம் சிறப்பு சட்டங்கள் - Stalking - பெண்களை தவறான முறையில் பின்தொடர்ந்தால்


இதச - 354 ( ஈ) - பெண்ணை தவறான முறையில் அவரது  விருப்பத்திற்கு மாறாக பின் தொடர்தல்



(1) - எந்த மனிதராவது அவர்

1 - ஒரு பெண்னை பின் தொடர்வதும் அல்லது தொடர்புக் கொள்வதும் அல்லது அவரை தொடர்புக் கொள்ள முயற்சிப்பதும் அல்லது தம்முடைய விருப்பத்தை தினிக்கும்படி அவரை பின்தொடர்வதும் அவருக்கு விருப்பம் இல்லாமல் இருந்தும் அவருக்கு வேண்டியதை செய்வதும்.

2 - ஒரு பெண்ணின் சம்மதமின்றி அவருடைய இன்டர்நெட் வசதி அல்லது மின்னஞ்சல், அல்லது அவருடைய தனிப்பட்ட மின் சாதன தொடர்புகளை கண்கானிப்பதும் பெண்களை தவறான முறையில் பின்தொடர்தல்(Stalking) என்ற குற்றமாகும்.


மேல் சேர்க்கைக்காக ஒரு ஆணை பின் தொடர ஒரு அரசால் ஆனையிப்பட்டு அதனால் அந்தப் பெண்னை பின்தொடர்வது இந்தப் பிரிவின் கீழ் குற்றமாகாது.

(i) -- ஒரு மனிதர் சட்டப்படி நியமிக்கபட்ட அரசால் அல்லது அரசாங்கத்தால் அவ்வாறு ஒரு பெண்ணை பின் தொடர வேண்டும் ஒரு குற்றத்தை கண்டுப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதற்கு இனங்க அவரை பின் தொடர்வதும் அவரது மின் சாதன இனைப்புகளை பயன்படுத்துவதும் , மின் தொடர்புகருவிகளை பயன் படுத்துவதும் மின்னஞ்சலை பரிசோதிப்பதும் குற்றமாகாது அல்லது இந்தப் பிரிவு கட்டுப்படுத்தாது அல்லது.


(ii) -- இந்தப் பிரிவானது ஒரு நிலுவையில் உள்ள சட்ட பிரிவின் கீழ் இவ்வாறு பின் தொடர்வது தவறில்லை என எந்த ஒரு சட்டத்தினாலும் அல்லது எந்த ஒரு நபரினாலும் சட்டப்படி ஆணையிடும் போது இந்தப் பிரிவு கீழ் அந்த பின் தொடர்வது அடங்காது. அல்லது

(iii) -- ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அத்தகைய பெண்னை தொடர்புக் கொள்வதும் அல்லது தொடர்புக் கொள்ள முயற்சிப்பதும் நியாயமானதும் சட்டப்படியானது எனக் கருதப்படும் போது குற்றமாகாது.


(2) முதன்முறையாக செய்யப்படும் இந்தக் குற்றத்துக்கு  மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்க கூடிய சிறைத்தண்டனையுடன் அபராதமும்,  தொடர்ந்து இதே குற்றத்தை இரண்டாவது அல்லது மூன்றாவது முறை செய்யும் பட்சத்தில் அவருக்கு மூன்று ஆண்டுகள் குறையாமல் அதிகப்பட்சம் ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்க கூ டிய சிறைத்தண்டனையுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.


IPC 354D: Stalking1

(1) Any man who—
       
  1. follows a woman and contacts, or attempts to contact such woman to foster personal interaction repeatedly despite a clear indication of disinterest by such woman; or
  2.    

  3. monitors the use by a woman of the internet, email or any other form of electronic communication,commits the offence of stalking;
 Provided that such conduct shall not amount to stalking if the man who pursued it proves that—
       
  1. it was pursued for the purpose of preventing or detecting crime and the man accused of stalking had been entrusted with the responsibility of prevention and detection of crime by the State; or
  2.    
  3. it was pursued under any law or to comply with any condition or requirement imposed by any person under any law; or
  4.    
  5. in the particular circumstances such conduct was reasonable and justified.
 (2) Whoever commits the offence of stalking shall be punished on first conviction with imprisonment of either description for a term which may extend to three years, and shall also be liable to fine; and be punished on a second or subsequent conviction, with imprisonment of either description for a term which may extend to five years, and shall also be liable to fine.

1 Criminal Law (Amendment) Act, 2013


 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.