Friday, 8 April 2016

தினம் ஒரு சட்டம் - பொய்யை உண்மைப் போல கூறி ஏமாற்றினால்



இ.த.ச 199 -
           


      யாராவது ஒருவர்,  அவர் அளித்துள்ள அல்லது அவர் ஒப்புதல் கொடுத்துள்ள அறிக்கையில் காணப்படும் விவரங்களை ஒரு நீதிமன்றம் அல்லது அரசு பொது ஊழியர் அல்லது சட்டத்தின் கீழ் பணியாற்றுகின்ற அதிகாரம் பெற்றுள்ள வேறு யாராவது சாட்சியமாக பயன்படுத்துவார்கள் என்று தெரிந்தும், 

    அந்த அறிக்கையில் அதன் நோக்கத்தைப் பாதிக்கக்கூடிய வகையில் பொய்யான அல்லது உண்மைக்கு மாறான தகவல்களைத் தருவதும் அல்லது உபயோகப்படுத்துவதும் குற்றமாகும்.  

   இந்தக் குற்றத்திற்கு பொய்சாட்சி சொன்னவர்களுக்கு அல்லது உருவாக்கியவர்களுக்கு அளிப்படவேண்டிய தண்டனையே விதிக்கப்படவேண்டும்.



Section 199- False statement made in declaration which is by law receivable as evidence
 

    Whoever, in any declaration made or subscribed by him, which declaration any Court of Justice, or any public servant or other person, is bound or authorized by law to receive as evidence of any fact, makes any statement which is false, and which he either knows or believes to be false or does not believe to be true, touching any point material to the object for which the declaration is made or used, 

     shall be punished in the same manner as if he gave false evidence.
 



குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.       


 

1 comment: