Friday, 26 May 2017

விழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரத்தில் புதிய அரசு சட்ட கல்லூரிகள் : முதல்வர்






சென்னை : 2017-18ஆம் கல்வியாண்டு முதல் விழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் புதிய அரசு சட்ட கல்லூரிகள் துவங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , " தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் தற்போது 7 அரசு சட்டக் கல்லூரிகளும், ஒரு தனியார் சுயநிதி சட்டக் கல்லூரியும் இயங்கி வருகின்றன. அதுமட்டுமின்றி, திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்ட தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியை ஜெயலலிதா திறந்து வைக்கப்பட்டது.

விழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் அதன் அருகாமையிலுள்ள பிற மாவட்டங்களைச் சேர்ந்த சட்டம் பயில விரும்பும் மாணவர்களுக்கு சட்டம் பயில அரசு சட்டக் கல்லூரி ஏதுவும் இல்லையென்பதால், இம்மாவட்டங்களைச் சேர்ந்த தகுதிவாய்ந்த மாணவர்கள் சட்டம் பயில்வதற்கு ஏதுவாக விழுப்புரம், தருமபுரி மற்றும் இராமநாதபுரத்தில் புதிதாக ஒரு அரசு சட்டக் கல்லூரி 2017-18ஆம் கல்வியாண்டு முதல் துவங்கப்படும்.

விழுப்புரம், தருமபுரி மற்றும் இராமநாதபுரம் ஆகிய நகரங்களில் துவக்கப்படும் இப்புதிய அரசு சட்டக் கல்லூரிகளில் 2017-18ஆம் கல்வியாண்டு முதல் 3 ஆண்டு சட்டப் படிப்பிற்கு முதலாம் ஆண்டில் 80 மாணவர்களுடனும், 5 ஆண்டு சட்டப் படிப்பிற்கு முதலாம் ஆண்டில் 80 மாணவர்களுடனும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.


இப்புதிய அரசு சட்டக் கல்லூரிகள் நிறுவுவதற்கான ஆரம்பக் கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ஒரு தனி அலுவலர் ஒவ்வொரு கல்லூரிக்கும் நியமிக்கப்படுவார்கள். மேற்குறிப்பிட்ட மூன்று புதிய அரசு சட்டக் கல்லூரிக்கு தேவையான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியிடங்கள், நூலகப் புத்தகங்கள், அறைகலன்கள் மற்றும் இதர தேவைகளுக்கு தலா ஒரு சட்டக் கல்லூரிக்கு 2 கோடியே 27 இலட்சம் ரூபாய் வீதம், 3 அரசு சட்டக் கல்லூரிக்கு, மொத்தம் 6 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவினம் ஏற்படும்." என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Thanks - http://tamil.samayam.com/…/three-n…/articleshow/58851648.cms

படம் - தினகரன் நாளிதழ்

2 comments:

  1. தகவலுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  2. மிகவும் அருமை நல்ல பதிவு. நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/

    ReplyDelete