அதாவது ஒருவருக்கு சட்ட உரிமைகளுக்கு எவ்விதமான சேதமும் ஏற்படுத்தாமல் சேதம் உண்டாக்குவது தீங்கில்லா சேதம்
உதாரணம் gloucester எதிர் grammar school case என்ற வழக்கில் வாதி-எ என்பவர் நடத்தி வந்த பள்ளிக்கு அருகிலே பிரதிவாதி-பி என்பவர் புதியதாக ஒரு பள்ளியை துவங்கினார் காலப் போக்கில் வாதி-எ என்பவரின் பள்ளியிலிருந்து பல மாணவர்கள் பி என்பவரின் பள்ளியில் சேர்ந்தார்கள்
இதனால் வாதி-எக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது வாதி-எ நீதிமன்றத்தை அனுகினார் நீதிமன்றம் வாதி-எ ன் கோரிக்கையை நிராகரித்தது. பிரதிவாதி-பி க்கும் பள்ளிகூடம் தொடங்க அனுமதி இருக்கின்றது
சட்டப்படி வாதி-எ என்பவரின் சட்ட உரிமைகளுக்கு எவ்விதமான சேதமும் ஏற்படுத்தப் படவில்லை
என தீர்ப்பு வாதிக்கப்பட்டது. பிரதிவாதி-பி வெற்றியும் பெற்றார்.
இரண்டாவது உதாரணம் - Chasemore vs Richards
என்ற வழக்கில் வாதி Chasemore 60 ஆண்டுகளுக்கு மேலாக நீரால் இயங்கும் ஆலை ஒன்றை நடத்திவந்தார் தன்னுடைய ஆலை இயங்குவதற்கு அருகில் இருந்த ஆற்றின் நீரை பயன்படுத்தி
வந்தார்.
பிரதிவாதி Richards என்பவர் சுகாதார மையம் ஒன்றை நிறுவி அதற்கு தேவையான நீரை பெற ஆற்றின் அருகில் தனக்கு சொந்தமான இடத்தில் கிணறு வெட்டி நீரை பயன்படுத்திவந்தார்
இதனால் வாதியின் நீர் தேவைக் குறைந்தது வாதிக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.
தன்னுடைய இழப்பிற்கு வாதி Chasemore பிரதிவாதி Richards என்பவர் மீது வழக்கு தொடர்ந்தார் வழக்கை விசாரித்த நீதிபதி வாதி, பிரதிவாதி இருவருக்கும் நீரைப் பயன்படுத்த உரிமை உள்ளது எனவும்,
மேலும் தன் நிலத்தில் கிணறு வெட்டவும் சட்டப்படி உரிமைப் பெற்றவர் பிரதிவாதி எனவும் வாதிக்கு ஏற்பட்ட இழப்புக்கு பிரதிவாதி பொறுப்பு ஏற்க முடியாது எனவும் தீர்ப்பு வழங்கி நீதிமன்றம் உத்திரவிட்டது.
பயனுள்ள தகவல், நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/
ReplyDelete