Showing posts with label tortlaw. Show all posts
Showing posts with label tortlaw. Show all posts

Wednesday, 27 December 2017

தீங்கு உண்டு சேதம் இல்லை - Injuria Sine Dammo - Injury without Damage





ஒருவரின் சட்ட உரிமைக்கு தீங்கு ஏற்பட்டாலும் ஆனால் அதனால் அவருக்கு எவ்விதமான சேதமும்
ஏற்படவில்லை என்றாலும் தீங்கை இழைத்தவர்  தீங்கியல் பொறுப்பு நிலைக்கு உள்ளாக்கப்படுவார்
என்பதே சேதமில்லாத் தீங்கு அல்லது தீங்கு உண்டு சேதம் இல்லை








உதாரணம் - Ashby vs White (1703) 2 Ld Rayn 938 என்ற வழக்கில் வாதி Ashby
என்பவரி தேர்தலில் வாக்களிக்க சென்றார் ஆனால் தேர்தல் அதிகாரி பிரதிவாதி White அவர்கள்
வாதியை தேர்தலில் வாக்களிக்க விடாமல் தடுத்துவிட்டார்கள்.


அந்த தேர்தலில் வாதி வாக்களிக்காமல்
போனாலும் அந்த தேர்தலில் வாதி விரும்பிய வேட்பாளரே வெற்றியும் பெற்றார், இருந்தாலும் வாதி தனக்கு ஏற்ப்பட்ட மனஉளைச்சலுக்கும் இழப்பிட்டுக்கும் இழப்பிடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு  தொடுத்தார்கள் நீதிமன்றம்  தீங்கு உண்டு சேதம் இல்லை - Injuria Sine Dammo என்ற சட்ட
முதுமொழியின் அடிப்படையில் பிரதிவாதி White  அவர்களால் எவ்விதமான சேதம்
ஏற்படாவிட்டாலும் வாதியின் வாக்களிக்கும் சட்ட உரிமைக்கு தீங்கு ஏற்பட்டுள்ளது எனவே வாதிக்கு
ஏற்பட்ட தீங்கிற்கு பிரதிவாதி பொறுப்பெறுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.




இரண்டாவது உதாரணம்



Asharfi Lal எதிர் The Municipal Board of Agra என்ற வழக்கில் வாதியின் பெயர் வாக்காளர் பட்டியலிருந்து விடுப்பட்டு போனது, வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலிருந்து விடுப்பட்டு போனது வாக்களரின் சட்ட உரிமைக்கு ஏற்பட்ட இழப்பாக கருதி வாதி Asharfi Lal அவர்களுக்கு சட்ட உரிமைக்கு ஏற்ப்பட்ட தீங்காக கருதி தீர்ப்பு வழங்கப்பட்டது .

தீங்கில்லா சேதம் - Domnum sine injuria





அதாவது ஒருவருக்கு சட்ட உரிமைகளுக்கு எவ்விதமான சேதமும் ஏற்படுத்தாமல் சேதம் உண்டாக்குவது தீங்கில்லா சேதம்


உதாரணம் gloucester எதிர் grammar school case என்ற வழக்கில் வாதி-எ என்பவர் நடத்தி வந்த பள்ளிக்கு அருகிலே பிரதிவாதி-பி என்பவர் புதியதாக ஒரு பள்ளியை துவங்கினார் காலப் போக்கில் வாதி-எ என்பவரின் பள்ளியிலிருந்து பல மாணவர்கள் பி என்பவரின் பள்ளியில் சேர்ந்தார்கள் 


இதனால் வாதி-எக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது வாதி-எ நீதிமன்றத்தை அனுகினார் நீதிமன்றம் வாதி-எ  ன் கோரிக்கையை நிராகரித்தது. பிரதிவாதி-பி க்கும் பள்ளிகூடம் தொடங்க அனுமதி இருக்கின்றது


சட்டப்படி வாதி-எ என்பவரின் சட்ட உரிமைகளுக்கு எவ்விதமான சேதமும் ஏற்படுத்தப் படவில்லை
என தீர்ப்பு வாதிக்கப்பட்டது. பிரதிவாதி-பி வெற்றியும் பெற்றார்.


இரண்டாவது உதாரணம் - Chasemore vs Richards


என்ற வழக்கில் வாதி Chasemore 60 ஆண்டுகளுக்கு மேலாக நீரால் இயங்கும் ஆலை ஒன்றை  நடத்திவந்தார் தன்னுடைய ஆலை இயங்குவதற்கு அருகில் இருந்த ஆற்றின் நீரை பயன்படுத்தி
வந்தார்.


பிரதிவாதி Richards என்பவர் சுகாதார மையம் ஒன்றை நிறுவி அதற்கு தேவையான நீரை பெற ஆற்றின் அருகில் தனக்கு சொந்தமான இடத்தில் கிணறு வெட்டி நீரை பயன்படுத்திவந்தார்
இதனால் வாதியின் நீர் தேவைக் குறைந்தது வாதிக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.


தன்னுடைய இழப்பிற்கு வாதி Chasemore பிரதிவாதி Richards என்பவர் மீது வழக்கு தொடர்ந்தார்  வழக்கை விசாரித்த நீதிபதி வாதி, பிரதிவாதி இருவருக்கும் நீரைப் பயன்படுத்த உரிமை உள்ளது எனவும்,


மேலும் தன் நிலத்தில் கிணறு வெட்டவும் சட்டப்படி உரிமைப் பெற்றவர் பிரதிவாதி எனவும் வாதிக்கு ஏற்பட்ட இழப்புக்கு பிரதிவாதி பொறுப்பு ஏற்க முடியாது எனவும் தீர்ப்பு வழங்கி நீதிமன்றம் உத்திரவிட்டது.