Thursday, 24 September 2015

தினம் ஒரு சட்டம் - இவையெல்லாம் அவதூறு இல்லை - 1


இ.த.ச 499

           யாராவது, ஒருவருடைய நன்மதிப்பை கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அல்லது கேடு உண்டாக்கும் என தெரிந்தும். ஒருவரைப்பற்றி
அனைவரும் அறியும் படி பேச்சால் அல்லது எழுத்தால் அல்லது அறிகுறிகளால் அல்லது காணும் காட்சிப் பொருட்களால் வசைப் பாடுவதையும் அல்லது வசைப் பாடி வெளியிடுதலையும் அவதூறு செய்தல் என்கிறோம். 




கீழ் கண்டநிலைகள் அன்றி மற்ற நிலைகளில் அத்தகைய செயல்பாடு தண்டனைக்குரியது.


விதிவிளக்குகள்

1 -  பொது மக்களின் நலன் கருதி ஒருவரைப் பற்றி உண்மையை கூறுவது வெளியிடுவதும் அவதூறாகாது. அது பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டதா இல்லை தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் வெளியிடப்பட்டதா என்பதை அந்தப் பிரச்சனையை ஒட்டி முடிவு செய்யப்படும்.




First Exception-Imputation of truth which public good requires to be made or published: --It is not defamation to impute anything which is true concerning any person, if it be for the public good that the imputation should be made or published. Whether or not it is for the public good is a question of fact.

2 - ஒரு பொது ஊழியரைப் பற்றி  அவர் கடமை யாற்றும் முறையைப் பற்றியும் அல்லது அவரது அலுவலகப் பணியைப் பற்றியும் அல்லது அதை அவர் நடத்தும் விதம் பற்றியும் நல்லெண்ணத்துடன் கூறப்படும் கருத்தை அவதூறு என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. 




Second Exception-Public conduct of Public servants: -- It is not defamation to express in a good faith any opinion whatever respecting the conduct of a public servant in the discharge of his public functions, or respecting his character, so far as his character appears in that conduct, and no further.

3 - ஒரு பொது பிரச்சனைக் குறித்து, நல்ல எண்ணத்தின்படி அந்த பிரச்சனையில் சம்பந்தப்பட்ட ஒருவரைப் பற்றி தெரிவிக்கப்படும் ஒரு கருத்தானது அவதூறாகாது.

Third Exception-Conduct of any person touching any public question: -- It is not defamation to express in good faith any opinion whatever respecting to conduct of any person touching any public question, and respecting his character, so far as his character appears in that conduct, and no further.


4 - ஒரு நீதிமன்றத்தின் நடவடிக்கைகளைப்பற்றி அல்லது நீதிமன்றத்தின் தீர்ப்பைப்பற்றி உள்ளதை உள்ளப்படி வெளியிடுவது குற்றமாகாது.



Fourth Exception-Publication of reports of proceedings of Courts: -- It is not defamation to publish substantially true report of the proceedings of a Court of Justice, or of the result of any such proceedings.

விளக்கம் - ஒரு நீதிமன்த்தின் விசாரணைக்கு முன்னர் நடைப் பெறும் பூர்வாங்க விசாரணையையும் நீதிமன்றத்தின் நடவடிக்கையாகவே எடுத்துக் கொள்ளவேண்டும்.

Explanation-A justice of the Peace or other officer holding an inquiry in open Court preliminary to a trial in a Court of Justice, is a Court within the meaning of the above section.




5 - ஒரு நீதிமன்றத்தின் முடிவு செய்யப்பட்ட வழக்கைப் பற்றி நல்ல எண்ணத்துடன் செய்யப்படும் விமர்ச்சன வசைப் பாடுதல் அவதூறாகாது. அத்தகைய வழக்கில் உள்ள வாதி , பிரதி வாதி அல்லது சாட்சிகளை அல்லது அந்த வழக்கு சம்பந்தப்பட்ட நபர்களை பற்றி அந்த வழக்கையோட்டி தெரிவிக்கப்படும் கருத்து அவதூறாகாது.

Fifth Exception-Merits of case decided in Court or conduct of witnesses and others concerned: --It is not defamation to express in good faith any opinion whatever respecting the merits of any case, civil or criminal, which has been decided by a Court of Justice, or respecting the conduct of any person as a party, witness or agent, in any such case, or respecting the character of such person, as far as his character appears in that conduct, and no further.


Illustrations - உதாரணம் -




அ - சொன்னார் - சி என்பவரது சாட்சி இந்த வழக்கைப் பொறுத்து முன்னுக்கு பின்னாக முரனாகவுள்ளது அவன் மூடனாக அல்லது நாணயமற்றவனாக இருக்க வேண்டும். இது என்பவர் சாட்சி என்ற முறையில் சி யை க்குறித்து இவ்வாறு கூறியுள்ளார்.

(a) A says-"I think Z's evidence on that trial is so contradictory that he must be stupid or dishonest". A is within this exception if he says this in good faith, inasmuch as the opinion which he express respects Z's character as it appears in Z's conduct as a witness, and no further.

ஆ - என்பவர் - சி எவ்வளவு நேரம் உண்மையை பேசுவார் என்று எனக்கு நன்றாக தெரியும் . ஆகவே விசாரனையில் அவர் கூறியதை எதையும் நான் நம்ப மாட்டேன் என்று கூறுகிறார்.  இது அவதூறாகும் ஏன் என்றால் சாட்சியம் என்ற முறைப்படி கூறாமல் வேறு வகையிலும் தம் கருத்தை கூறியுள்ளார்.

(b) But if A says-"I do not believe what Z asserted at that trial because I know him to be a man without veracity" ; A is not within this exception, inasmuch as the opinion which he express of Z's character, is an opinion not founded on Z's conduct as a witness.


http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1966

 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    

No comments:

Post a Comment