Friday, 11 September 2015

தினம் ஒரு சட்டம் - டகாயிட்டிக்கான தண்டனைகள்


டகாயிட்டிக்கான என்கிற கூட்டுக் கொள்ளைக்கான தண்டனைகள்


இ.த.ச 395

     கூட்டுக்கொள்ளை அடிப்பவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அத்துடன் அபராதமும் விதிக்கப்படும்.

 
Whoever commits dacoity shall be punished with *[imprisonment for life], or with rigorous imprisonment for a term which may extend to ten years, and shall also be liable to fine.

* Subs. by Act 26 of 1955, sec.117 and sch., for "transportation for life" (w.e.f.1-1-1956). 


இ.த.ச 396


     கூட்டுக்கொள்ளையடிக்கும் போது யாரையாவது கொன்றுவிட்டால் அவருக்களுக்கு மரணத்தண்டனை  அல்லது ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அத்துடன் அபராதமும் விதிக்கப்படும்.

 If any one of five or more persons, who are conjointly committing dacoity, commits murder in so committing dacoity, every one of those persons shall be punished with death, or *[imprisonment for life], or rigorous imprisonment for term which may extend to ten years, and shall also be liable to fine.

* Subs. by Act 26 of 1955, sec.117 and sch., for "transportation for life" (w.e.f.1-1-1956).

இ.த.ச 397




     கொள்ளை அல்லது கூட்டுக்கொள்ளையடிக்கும் போது மரணம் விளைவிக்கும் ஆயுதங்களை பயன்படுத்தினாலும் அல்லது யாரையாவது தாக்கி கொடுங்காயம் ஏற்படுத்தினாலும் அல்லது மரணம் அல்லது கொடுங்காயம் ஏற்படுத்த முயற்சித்தாலும் அவருக்களுக்கு சிறைத் தண்டனை ஏழு ஆண்டுகளுக்கு குறையக்கூடாது.



If, at the time of committing robbery or dacoity, the offender uses any deadly weapon, or causes grievous hurt to any person, or attempts to cause death or grievous hurt to any person, the imprisonment with which such offender shall be punished shall not be less than seven years.
இ.த.ச 398

கொள்ளை அல்லது கூட்டுக்கொள்ளையடிக்க முயற்சிக்கும் போது மரணம் விளைவிக்கும் ஆயுதங்களை வைத்திருந்தாலும் அவருக்களுக்கு சிறைத் தண்டனை ஏழு ஆண்டுகளுக்கு குறையக்கூடாது.

If, at the time of attempting to commit robbery or dacoity, the armed with any deadly weapon, the imprisonment with which such offender shall be punished shall not be less than seven years.
 
இ.த.ச 399


     கூட்டுக்கொள்ளையடிக்க ஆயத்தங்களை யார் புரிந்தாலும் அவருக்கு, பத்து ஆண்டுகள் வரை கடுங்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக வழங்கப்படும்.


Whoever makes, any preparation for committing dacoity, shall be punished with rigorous imprisonment for a term which may extend to ten years, and shall also be liable to fine. 

இ.த.ச 400



    இந்த சட்டம் அமல் படுத்தப்பட்ட பிறகு யாரேனும்  கூட்டுக்கொள்ளை அடிப்பதை நிரந்தர பழக்கமாக கொண்ட கூட்டத்தைச் சார்ந்திருந்தால்  அந்த நபருக்கு  ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அத்துடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


Whoever, at any time after the passing of this Act, shall belong to a gang of persons associated for the purpose of habitually committing dacoity, shall be punished with *[imprisonment for life], or with rigorous imprisonment for a term which may extend to ten years, and shall also be liable to fine.

* Subs. by Act 26 of 1955, sec.117 and sch., for "transportation for life" (w.e.f. 1-1-1956).

இ.த.ச 401

       இந்த சட்டம் அமல் படுத்தப்பட்ட பிறகு யாரேனும்  திருட்டு அல்லது கொள்ளை அடிப்பதை நிரந்தர பழக்கமாக கொண்ட  நாடோடிகள் கூட்டத்தைச் அல்லது வேறு திருட்டுக் கூட்டத்தை சார்ந்திருந்தால்  அந்த நபருக்கு  ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும்.

 [தக்கர்கள் அல்லது வேறு கூட்டுக் கொள்ளைக் கூட்டத்தை சார்ந்தவர்கள் இந்தப் பிரிவின் கீழ் வரமாட்டார்கள்]

 Whoever, at any time after the passing of this Act, shall belong to any wandering or other gang of persons associated for the purpose of habitually committing theft or robbery, and not being a gang of thugs or dacoits, shall be punished with rigorous imprisonment for a term which may extend to seven years, and shall also be liable to fine. 

 இ.த.ச 402


       இந்த சட்டம் அமல் படுத்தப்பட்ட பிறகு யாரேனும் கூட்டுக்கொள்ளை அடிப்பதை நிரந்தர பழக்கமாக கொண்ட  கூட்டத்தைச்  சார்ந்திருந்தால்  அந்த நபருக்கு  ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும்.

 Whoever, at any time after the passing of this Act, shall be one of five or more persons assembled for the purpose of committing dacoity, shall be punished with rigorous imprisonment for a term which may extend to seven years, and shall also be liable to fine. 


கீழ் கண்ட தண்டுபால்யா என்ற படத்தை கட்டாயம் பார்க்கவும்



தகவல்கள்
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1862
நன்றி தண்டுபால்யா  குழு


 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

2 comments:

  1. தகவல் அருமை நண்பரே

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே

      Delete