Sunday, 27 September 2015

தினம் ஒரு சட்டம் - ஆளைக் கவர்தல் அதன் தண்டனையும்.


இ.த.ச 359

ஆளைக் கவர்ந்து செல்லுதல் என்பது இந்திய தண்டனை சட்டத்தின் இரண்டு வகைகள்.


1 - இந்தியாவிலிருந்து ஆளை கவர்ந்து செல்லுதல்
2 - அல்லது சட்டப்படியான பாதுக்காவலரிடமிருந்து கவர்ந்து செல்லுதல்


Section 359- Kidnapping
Kidnapping is of two kinds: - kidnapping from *[India], and kidnapping from lawful guardianship.

* The words "British India" have successively been subs. by the A. O.1948, the A.O. 1950 and Act 3 of 1951, sec. 3 and sch, to read as above. 

 
இ.த.ச 360
 
யாராவது, ஒருவருடைய சம்மதத்தைப் பெறாமல்  அல்லது சட்டப்படி ஒருவருடைய பொருப்பில் வைத்திருப்பவரின் சம்மதத்தைப் பெறாமல் இந்திய எல்லையிலிருந்து அழைத்து செல்வதை இந்தியாவிலிருந்து ஆளைக் கவர்ந்து செல்லுதல் என்று சொல்லப்படும்.

 
 
Section 360- Kidnapping from India


       Whoever conveys any person beyond the limits of *[India] without the consent of that person, or of some person legally authorized to consent on behalf of that person is said to kidnap that person from *[India].

* The words "British India" have successively been subs. by the A. O.1948, the A.O. 1950 and Act 3 of 1951, sec. 3 and sch., to read as above.


இ.த.ச 361
 
யாராவது, சிறிய வயதையுடைய சிறுவர் (பதினாறு வயதுக்கு வரையுள்ள ஆண்) அல்லது சிறிய வயதையுடைய சிறுமி (பதினெட்டு வயது வயதுள்ள பெண்) அல்லது புத்தி சுவாதினம் இல்லாதவர்களை  பாதுக்காக்கும் பொருப்பில் உள்ள பாதுகாவலர்களின் சம்மதம் பெறாமல், அழைத்துக் கொண்டு செல்வது குற்றமாகும். இது  சட்டப்படி பாதுகாப்பாவரிடமிருந்து ஆளைக் கவர்ந்து செல்லுதல் என்று சொல்லப்படும்.
 
விளக்கம் - சட்டப் படி பாதுக்காவலர் என்ற சொல்  சிறிய வயதையுடைய சிறுவர் (பதினாறு வயதுக்கு வரையுள்ள ஆண்) அல்லது சிறிய வயதையுடைய சிறுமி (பதினெட்டு வயது வயதுள்ள பெண்) அல்லது புத்தி சுவாதினம் இல்லாதவர்களை  பாதுக்காக்கும் பொருப்பில் உள்ள யாரையும் குறிக்கலாம்.

விதிவிளக்கு - இந்தப் பிரிவின் கீழ் யாராவது அந்த சிறிய வயதையுடைய சிறுவர் (பதினாறு வயதுக்கு வரையுள்ள ஆண்) அல்லது சிறிய வயதையுடைய சிறுமி (பதினெட்டு வயது வயதுள்ள பெண்) அல்லது புத்தி சுவாதினம் இல்லாதவர்களுக்கு தான் ஒரு பெற்றோறாக இருப்பதாகவும் அல்லது தனக்கு முறைத் தவறி ஒரு குழந்தை அவரின் நலன் கருதி பராமரிப்பதற்காக நல்ல எண்ணத்துடன் அழைத்து செல்வது குற்றமாகாது.

Section 361- Kidnapping from lawful guardianship
Whoever takes or entices any minor under *[sixteen] years of age if a male, or under **[eighteen] years of age if a female, or any person of unsound mind, out of the keeping of the lawful guardian of such minor or person of unsound mind, without the consent of such guardian, is said to kidnap such minor or person from lawful guardianship.

Explanation: - The words "lawful guardian" in this section include any person lawfully entrusted with the care of custody of such minor or other person.

Exception: - This section does not extend to the act of any person who in good faith believes himself to be the father of an illegitimate child, or who in good faith believes himself to be entitled to lawful custody of such child, unless such act is committed for an immoral or unlawful purpose.

STATE AMENDMENTS

Union of Territory of Manipur

In its application to Union Territory of Manipur, in section 361 for the words 'eighteen' substitute the word 'fifteen'.

[Vide Manipur Act No.30 of 1950, sec. 3 (w.e.f. 16-4-1950), read with Act 81 of 1971, sec. 3 (w.e.f. 25-1-1972)].

* Subs. by Act 42 of 1949, sec. 2, for "fourteen".

** Subs. by Act 42 of 1949, sec. 2, for "sixteen".
 
 

 
இ.த.ச 363 - ஆளைக் கவர்தலுக்கான தண்டனை.
 
யாராவது ஒரு நபரை இந்தியாவிற்குள்ளோ அல்லது இந்தியாவிற்கு வெளியோ அல்லது அவரது சட்டப்படி பாதுக்காவலரிடமிருந்து கவர்ந்து சென்றாலோ அவருக்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக் காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனை யாக விதிக்கப்படும் 
 
Section 363- Punishment for kidnapping
Whoever kidnaps any person from *[India] or from lawful guardianship, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.

* The words "British India" have successively been subs. by the A.O.1948, the A. O.1950 and Act 3 of 1951, sec.3 and sch., to read as above.
 
 
 
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.  

No comments:

Post a Comment