Wednesday, 30 September 2015

தினம் ஒரு சட்டம் - குழந்தையிடமிருந்து திருட வேண்டும் என கடத்தினால் என்ன தண்டனை


இ.த.ச 369

 

யாராவது, ஒரு குழந்தையையோ அல்லது பத்து வயதுக்கு குறைவானவரையோ ஒரு நகையை எடுக்க வேண்டும் அல்லது அவரிடமிருந்து அந்த நடமாடும் சொத்தை பிடுங்க வேண்டும் என கடத்தி செல்வதும் அல்லது கவர்ந்து செல்வதும் குற்றமாகும்.



 

இந்தக் குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் சேர்த்து அபராதமும் தண்டனையாக வழங்கப்படும்.


Section 369- Kidnapping or abducting child under ten years with intent to steal from its person
 
 

          Whoever kidnaps or abducts any child under the age of ten years with the intention of taking dishonestly any movable property from the person of such child,


  shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine. 




  குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

 

தினம் ஒரு சட்டம் - அடிமையாக்க கடத்தினால் என்ன தண்டனை - 3


இ.த.ச 370

   யாராவது , ஒருவரை அடிமையாக இறக்குமதி செய்வதும் , ஏற்றுமதி செய்வதும், அடிமையாக விற்றலும், அடிமையாக இருக்கும் படி ஒருவரை வாங்குவதும், பிறருக்குக் கொடுத்தாலும் அல்லது தம் வசத்தில் வைத்திருப்பதும் அல்லது அடிமையாகுபவரின் சம்பந்தம் இல்லாமல் சட்டவிரோதமாக ஏற்றுக் கொள்வதும்  குற்றமாகும்.


  இந்தக் குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரைச் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.





Section 370- Buying or disposing of any person as slave
Whoever imports, export, removes, buys, sells or disposes of any person as a slave, or accepts, receives or detains against his will any person as slave, 

shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years and shall also be liable to fine.

http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1826
                       

இ.த.ச 371
  யாராவது , ஒருவரை அடிமையாக இறக்குமதி செய்வதும் , ஏற்றுமதி செய்வதும், அடிமையாக விற்றலும், அடிமையாக இருக்கும் படி ஒருவரை வாங்குவதும், பிறருக்குக் கொடுத்தாலும் அல்லது தம் வசத்தில் வைத்திருப்பதும் அல்லது அடிமையாக ஏற்றுக் கொள்வதும்  குற்றமாகும். 

      இந்தக் குற்றத்தை வழக்கமாக செய்பவருக்கு இ.த.ச 370 ல் கூறியதைவிட அதிகமாக விதிக்கப்பட வேண்டும். அதாவது


  இந்தக் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரைச் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

Section 371- Habitual dealing in slave
Whoever habitually imports, exports, removes, buys, sells, traffics or deals, 

    shall be punished with *[imprisonment for life] or with imprisonment of either description for a term not exceeding ten years, and shall also be liable to fine.

* Subs. by Act 26 of 1955, sec. 117 and Sch., for "transportation for life" (w.e.f. 1-1-1956).


http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1827


 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 
                       

Tuesday, 29 September 2015

தினம் ஒரு சட்டம் - அடிமையாக்க கடத்தினால் என்ன தண்டனை - 2


இ.த.ச 367

     யாராவது,  ஒரு மனிதரை கவரந்து செல்வதும் அல்லது கடத்தி செல்வதும் குற்றமாகும். அதற்கான காரணங்கள் அவரை ஒரு அபாயத்தில் மாட்டி விட வேண்டும் அல்லது அவரை ஒரு கொடுங்காயம் படுத்த வேண்டும் அல்லது அடிமையாக்கப்பட வேண்டும் அல்லது அவரை ஒரு இயற்க்கைக்கு மாறான பாலியல் தொல்லைக்கு உட்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடனும் அல்லது இது வேல்லாம் சம்பவிக்கும் எனத் தெரிந்தும் அவரைக் கவர்ந்து அல்லது கடத்தி செல்வது குற்றமாகும்.



    இந்தக் குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் வரையில் சிறைக் காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


Section 367- Kidnapping or abducting in order to subject person to grievous hurt, slavery, etc.
    Whoever kidnaps or abducts any person in order that such person may be subjected, or may be so disposed of as to be put in danger of being subject to grievous hurt, or slavery, or to unnatural lust of any person, or knowing it to be likely that such person will be so subjected or disposed of, 

    shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.


இ.த.ச 368

 யாராவது , ஒருவர் மற்றோருவரை கவர்ந்து அல்லது கடத்திக் கொண்டு வந்திருக்கிறார் என தெரிந்தும் அல்லது நம்புவதற்கான காரணங்கள் இருந்தும். அவர் கடத்தி அல்லது கவர்ந்து வந்திருக்கு நபரை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைப்பதும் அல்லது சிறையில் வைப்பதும் குற்றமாகும்.

 


    இந்தக் குற்றத்திற்கு கடத்துபவருக்கு கிடைக்கும், பத்து ஆண்டுகள் வரையில் சிறைக் காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என்ற அதே தண்டனை அவர்களுக்கும் விதிக்கப்படும்.

Section 368- Wrongfully concealing or keeping in confinement, kidnapped or abducted person


   Whoever, knowing that any person has been kidnapped or has been abducted, wrongfully conceals or confines such person, 


    shall be punished in the same manner as if he dad kidnapped or abducted such person with the same intention or knowledge, or for the same purpose as that with or for which he conceals or detains such person in confinement.

 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

Monday, 28 September 2015

தினம் ஒரு சட்டம் - பெண்ணை கடத்தினால் என்ன தண்டனை


இ.த.ச 366 -கட்டாய திருமணம் செய்ய பெண்ணை கடத்தல்

     யாராவது, கவர்ந்தோ அல்லது கடத்தியோ ஒரு பெண்ணை அவளின் விருப்பமின்றி பிறக்கு திருமணம் முடிக்க அல்லது முடிக்கப்படும் என கடத்தி செல்வது குற்றமாகும். 

 
    மேலும் அவளுடைய விருப்பத்திற்கு விரோதமாக அல்லது கட்டாயப்படுத்தி , உடல் புணர்ச்சிக்கு அல்லது அத்தகைய உடல் புணர்ச்சிக்கு உட்படுவால் என தெரிந்திருந்தும் , அந்தப் பெண்ணை கவர்தலும் அல்லது கடத்தி செல்வதும் குற்றமாகும்.



    இந்தக் குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் வரையில் சிறைக் காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


Section 366- Kidnapping, abducting or inducing woman to compel her marriage, etc.
Whoever kidnaps or abducts any woman with intent that she may be compelled, or knowing it to be likely that she will be compelled, to marry any person against her will, or in order that she may be forced or seduced to illicit intercourse, or knowing it to be likely that she will be forced or seduced to illicit intercourse shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine; *[and whoever, by means of criminal intimidation as defined in this Code or of abuse of authority or any other method of compulsion, induces any woman to go from any place with intent that she may be, or knowing that it is likely she will be, forced or seduced to illicit intercourse with another person shall be punished as aforesaid].

* Added by Act 20 of 1923, sec. 2.



இ.த.ச 366-A- மைனர் பெண்ணை கட்டாய புணர்ச்சிக்கு கடத்தல்

    யாராவது, மைனர் பெண்ணை அதாவது பதினேட்டு வயது நிரம்பாத பெண்ணை, கடத்துவதும் ஆசைக் காட்டி கவர்ந்து செல்வதும் குற்றமாகும். மேலும் அந்தப் பெண்ணை ஒரு பாலியல் தொழில் செய்யவோ அல்லது வேறு ஒரு நபருக்கு அவள் கட்டாய பாலியல் தொல்லை அனுபவிக்கும் பொருட்டு அல்லது அத்தகைய செயல் நடைப் பெறும் என தெரிந்தும் கடத்துவதும் ஆசைக் காட்டி கவர்ந்து செல்வதும் ஒரு இடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு செல்லுமாறு சொல்வதும் குற்றமாகும். 



   இந்தக் குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் வரையில் சிறைக் காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

Section 366-A- Procreation of minor girl
Whoever, by any means whatsoever, induces any minor girl under the age of eighteen years to go from any place or to do any act with intent that such girl may be, or knowing that it is likely that she will be, forced or seduced to illicit intercourse with another person shall be punishable with imprisonment which may extend to ten years, and shall also be liable to fine.]

* Ins. by Act 20 of 1923, sec. 3. 



இ.த.ச 366-B- வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு பெண்ணைக் கடத்தல்

    யாராவது, இந்தியாவிற்கு வெளியிலிருந்து  இந்தியாவிற்குள் இருபத்தி வயது வரை நிரம்பாத பெண்ணை பாலியல் புணர்ச்சிக்கு உட்படுத்த அல்லது உட்படுத்தப் படுவாள் என்ற கருத்துடன்.


 அவரால் அல்லது பிறரால் அத்தகைய தவறு நடைப் பெறவேண்டும்  என ஒரு பெண்ணை கவர்ந்து வருவதும் அல்லது கடத்தி வருவதும் குற்றமாகும். 


   இந்தக் குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் வரையில் சிறைக் காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். 

இந்தியா என்ற பதம் ஜம்மு மற்றும் காஷ்மீர் நீங்கலாக எனக் கொள்ளவும்.



Section 366-B- Importation of girl from foreign country
1 Whoever imports into 2[India] from any country outside India 3[or from the State of Jammu and Kashmir] any girl under the age of twenty-one years with intent that she may be, or knowing it to be likely that she will be, forced or seduced to illicit intercourse with another person, 4[***] shall be punishable with imprisonment which may extend to ten years and shall also be liable to fine.]

1. Ins. by Act 20 of 1923, sec. 3.

2. The words "British India" have successively been subs. by the A.O. 1948, the A.O. 1950 and Act 3 of 1951, sec. 3 and Sch. to read as above.

3. Ins. by Act 3 of 1951, sec. 3 and Sch.

4. Certain words omitted by Act 3 of 1951, sec. 3 and Sch.



குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

தினம் ஒரு சட்டம் - ரகசியமாக சிறை வைக்க ஆட்கடத்தல்


இ.த.ச 365 - ரகசியமாக சிறை வைக்க ஆட்கடத்தல்

     யாராவது, ஒருவரை கவர்ந்து அல்லது கடத்தி ரகசியமாக சிறை வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் கடத்தினாலும் அல்லது கவர்ந்து கடத்தி ரகசியமாக சிறைவைத்தாலும்  குற்றமாகும்.


அந்தக் குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.


Section 365- Kidnapping or abducting with intent secretly and wrongfully to confine person




        Whoever kidnaps or abducts any person with intent to cause that person to be secretly and wrongfully confined, 


    

     shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine. 



குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.  

தினம் ஒரு சட்டம் - அரசை பனிய வைக்க ஆட்கடத்தலும் அதன் தண்டனையும் - 2


இ.த.ச 364 - கொலை செய்வதற்காக ஆட்கடத்தல்

     யாரவது, ஒருவரை கொலைச் செய்யவேண்டும் அல்லது அத்தகைய அபயத்தில் விடவேண்டும் என்ற நோக்கத்துடன் ஒருவரை கவர்த்தலும் அல்லது கடத்தி செல்லுதலும் குற்றமாகும்.


     இந்தக் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையில் கடுங்காவல் தண்டனையுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.




Section 364- Kidnapping or abducting in order to murder
Whoever kidnaps or abducts any person in order that such person may be murdered or may be so disposed of as to be put in danger of being murdered, shall be punished with *[imprisonment for life] or rigorous imprisonment for a term which may extend to ten years, and shall also be liable to fine.

Illustrations

(a) A kidnaps Z from **[India], intending or knowing it to be likely that Z may be sacrificed to an idol. A has committed the offence defined in this section.

(b) A forcibly carries or entices B away from his home in order that B may be murdered. A has committed the offence defined in this section.

1. Subs. by Act 26 of 1955, sec.117 and sch., for "transportation for life" (w.e.f.1-1-1956).

2. The words "British India" have successively been subs. by the A. O. 1948, the A.O. 1950 and Act 3 of 1951, sec.3 and sch., to read as above.

http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1817

இ.த.ச 364 - A - பணம் பறிப்பதற்காக அல்லது பனயமாக ஆட்கடத்தல்


      யாராவது, ஒருவரைக் கவர்த்து செல்லவதும் அல்லது கட்டாயப்படுத்தி கவர்ந்து சென்று அதன் முலம் அவரை சிறை வைத்து அதனால் ஒருவரை விடுவிப்பதும் அல்லது அதன் முலம் ஒன்றை அரசாங்கத்திடம் சாதித்துக் கொள்வதும் குற்றமாகும். 

   இந்தக் குற்றத்திற்கு மரணத் தண்டனையும் அல்லது ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும் அத்துடன் அபராதமும் உண்டு.


Section 364-A- Kidnapping for ransom, etc.
*Whoever kidnaps or abducts any person or keeps a person in detention of the such kidnapping or abduction and threatens to cause death or hurt to such person, or by his conduct gives rise to a reasonable apprehension that such person may be put death or hurt, or causes hurt or death to such person in order to compel the Government or **[any foreign State or international inter-governmental organization or any other person] to do or abstain from doing any act or to pay a ransom, shall be punishable with death, or imprisonment for life, and shall also be liable to fine].

* Ins. by Act 42 of 1993, sec. 2 (w.e.f. 22-5-1993).

** Subs. by Act 24 of 1995, for "any other person" (w.e.f. 26-5-1995).

http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1818

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    இதில் வரும் படங்கள் கூகுள் தேடுப் பொறி மூலம் எடுக்கப்பட்டவை, தாங்களுக்கு உரியது என தகவல் தெரிவிப்பின் படம் நீக்கப்படும்.

Sunday, 27 September 2015

தினம் ஒரு சட்டம் - ஆட்கடத்தலும் அதன் தண்டனையும்



இ.த.ச 362 - ஆட்கடத்தல்

யாராவது, தன் வன்முறைப் பலத்தாலும் அல்லது ஏமாற்றியும், ஒருவரை ஒரு இடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு அழைத்து செல்லுவதை கட்டாயப்படுத்து கடத்தி செல்லுதல் என்கிறோம்.





Section 362- Abduction
Whoever by force compels, or by any deceitful means induces, any person to go from any place, is said to abduct that person.
 இ.த.ச 363 எ- பிச்சை எடுப்பதற்காக ஆட்கடத்தல் அதன் தண்டனையும்

உட்பிரிவு 1 - யாராவது சிறிய சிறுவர் சிறுமியாரை பிச்சை எடுக்க வேண்டும் என கவர்ந்தாலும் அல்லது கடத்தினாலும். மேலும் அவரின் சட்டப்படியான பாதுக்காவலரிடமிருந்து கடத்தினாலும் கவர்ந்தாலும் குற்றமாகும். 
   இந்தக்குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

http://tamil.thehindu.com/multimedia/dynamic/01709/boy2_1709145h.jpg
உட்பிரிவு 2 - யாராவது சிறிய சிறுவர் சிறுமியாரை பிச்சை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உடலை பழுது செய்வோருக்கு ஆயுள் தண்டனையும் அதனுடன் இலவச இனைப்பாக அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.


உட்பிரிவு 3 - யாராவது சிறிய சிறுவர் சிறுமியாரை பிச்சை எடுக்க வேண்டும் அல்லது வேலைக்கு பயன் படுத்த வேண்டும் என அவர்களை தன் பொருப்பில் வைத்திருப்பவர் - அவர்களுடைய சட்டப்புர்வமான பாதுக்காவலர் இல்லை என்னும் பட்சத்தில் - தான் அவர்களை அந்த தொழிலுக்கு அழைத்து வரவில்லை அல்லது கடத்தி வர வில்லை என்பதை நிருபிக்க வேண்டியது அவர்களுடைய பொருப்பாகும்.


உட்பிரிவு 4 -
அ-i - பிச்சை என்றால் ஒரு பொது இடத்தில் பணம் பெறும் எண்ணத்துடன் ஆடுவதும், பாடுவதும், குறி சொல்வதும், வித்தைகள் செய்வதும், விலங்குகளை வைத்து வேடிக்கை காட்டுவதும், நோய் வந்தவர் போல் நடித்து பணம் பெறுவதையும் குறிக்கும்.


அ-ii - ஒரு தனியாருக்கு சொந்தமான இடத்தில் சென்று தான தர்மம் கேட்பது
 அ-iii - தம் உடலில் உள்ள ஊனம் அல்லது குறைப்பாடு அல்லது காயம் அல்லது நோய் ஆகியவற்றைக் காட்டி பணம் பெற நினைப்பது.
ஆ -மைனர் சிறுவர் சிறுமி என்பது என்ன வெனில்
ஆ - i - சிறுவர் என்பது பதினாறு வயதுக்கு உட்பட்ட ஆண் பிள்ளைக் குறிக்கும்.
- ii - சிறுமி என்பது பதினெட்டு வயதுக்கு உட்பட்ட பெண் பிள்ளையைக் குறிக்கும்

Section 363-A- Kidnapping or maiming a minor for purposes of begging
Whoever kidnaps any minor or, not being the lawful guardian of a minor, obtains the custody of the minor, in order that such minor may be employed or used for the purpose of begging shall be punishable with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.
Whoever maims any minor in order that such minor can be employed or used for the purposes of begging shall be punishable with imprisonment for life, and shall also be liable to fine.
Where any person, not being the lawful guardian of minor, employs or uses such minor for the purpose of begging, it shall be presumed, unless the contrary is proved, that he kidnapped or otherwise obtained the custody of that minor in order that the minor might be employed or used for the purposes of begging.
In this section -

(a) "Begging" means;

(i) Soliciting or receiving alms in a public place, whether under the pretence of singing, dancing, fortune-telling, performing tricks or selling articles or otherwise;

(ii) Entering on any private premises for the purpose of soliciting or receiving alms;

(iii) Exposing or exhibiting, with the object of obtaining or e extorting alms, any sore, wound, injury, deformity or disease, whether of himself or of nay other person or of an animal;

(iv) Using a minor as an exhibit for the purpose of soliciting or receiving alms;

(b) "Minor" means-

(i) In the case of a male, a person under sixteen years of age; and

(ii) In the case of a female, a person under eighteen years of age].


குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    இதில் வரும் படங்கள் கூகுள் தேடுப் பொறி மூலம் எடுக்கப்பட்டவை, தாங்களுக்கு உரியது என தகவல் தெரிவிப்பின் படம் நீக்கப்படும்.

தினம் ஒரு சட்டம் - ஆளைக் கவர்தல் அதன் தண்டனையும்.


இ.த.ச 359

ஆளைக் கவர்ந்து செல்லுதல் என்பது இந்திய தண்டனை சட்டத்தின் இரண்டு வகைகள்.


1 - இந்தியாவிலிருந்து ஆளை கவர்ந்து செல்லுதல்
2 - அல்லது சட்டப்படியான பாதுக்காவலரிடமிருந்து கவர்ந்து செல்லுதல்


Section 359- Kidnapping
Kidnapping is of two kinds: - kidnapping from *[India], and kidnapping from lawful guardianship.

* The words "British India" have successively been subs. by the A. O.1948, the A.O. 1950 and Act 3 of 1951, sec. 3 and sch, to read as above. 

 
இ.த.ச 360
 
யாராவது, ஒருவருடைய சம்மதத்தைப் பெறாமல்  அல்லது சட்டப்படி ஒருவருடைய பொருப்பில் வைத்திருப்பவரின் சம்மதத்தைப் பெறாமல் இந்திய எல்லையிலிருந்து அழைத்து செல்வதை இந்தியாவிலிருந்து ஆளைக் கவர்ந்து செல்லுதல் என்று சொல்லப்படும்.

 
 
Section 360- Kidnapping from India


       Whoever conveys any person beyond the limits of *[India] without the consent of that person, or of some person legally authorized to consent on behalf of that person is said to kidnap that person from *[India].

* The words "British India" have successively been subs. by the A. O.1948, the A.O. 1950 and Act 3 of 1951, sec. 3 and sch., to read as above.


இ.த.ச 361
 
யாராவது, சிறிய வயதையுடைய சிறுவர் (பதினாறு வயதுக்கு வரையுள்ள ஆண்) அல்லது சிறிய வயதையுடைய சிறுமி (பதினெட்டு வயது வயதுள்ள பெண்) அல்லது புத்தி சுவாதினம் இல்லாதவர்களை  பாதுக்காக்கும் பொருப்பில் உள்ள பாதுகாவலர்களின் சம்மதம் பெறாமல், அழைத்துக் கொண்டு செல்வது குற்றமாகும். இது  சட்டப்படி பாதுகாப்பாவரிடமிருந்து ஆளைக் கவர்ந்து செல்லுதல் என்று சொல்லப்படும்.
 
விளக்கம் - சட்டப் படி பாதுக்காவலர் என்ற சொல்  சிறிய வயதையுடைய சிறுவர் (பதினாறு வயதுக்கு வரையுள்ள ஆண்) அல்லது சிறிய வயதையுடைய சிறுமி (பதினெட்டு வயது வயதுள்ள பெண்) அல்லது புத்தி சுவாதினம் இல்லாதவர்களை  பாதுக்காக்கும் பொருப்பில் உள்ள யாரையும் குறிக்கலாம்.

விதிவிளக்கு - இந்தப் பிரிவின் கீழ் யாராவது அந்த சிறிய வயதையுடைய சிறுவர் (பதினாறு வயதுக்கு வரையுள்ள ஆண்) அல்லது சிறிய வயதையுடைய சிறுமி (பதினெட்டு வயது வயதுள்ள பெண்) அல்லது புத்தி சுவாதினம் இல்லாதவர்களுக்கு தான் ஒரு பெற்றோறாக இருப்பதாகவும் அல்லது தனக்கு முறைத் தவறி ஒரு குழந்தை அவரின் நலன் கருதி பராமரிப்பதற்காக நல்ல எண்ணத்துடன் அழைத்து செல்வது குற்றமாகாது.

Section 361- Kidnapping from lawful guardianship
Whoever takes or entices any minor under *[sixteen] years of age if a male, or under **[eighteen] years of age if a female, or any person of unsound mind, out of the keeping of the lawful guardian of such minor or person of unsound mind, without the consent of such guardian, is said to kidnap such minor or person from lawful guardianship.

Explanation: - The words "lawful guardian" in this section include any person lawfully entrusted with the care of custody of such minor or other person.

Exception: - This section does not extend to the act of any person who in good faith believes himself to be the father of an illegitimate child, or who in good faith believes himself to be entitled to lawful custody of such child, unless such act is committed for an immoral or unlawful purpose.

STATE AMENDMENTS

Union of Territory of Manipur

In its application to Union Territory of Manipur, in section 361 for the words 'eighteen' substitute the word 'fifteen'.

[Vide Manipur Act No.30 of 1950, sec. 3 (w.e.f. 16-4-1950), read with Act 81 of 1971, sec. 3 (w.e.f. 25-1-1972)].

* Subs. by Act 42 of 1949, sec. 2, for "fourteen".

** Subs. by Act 42 of 1949, sec. 2, for "sixteen".
 
 

 
இ.த.ச 363 - ஆளைக் கவர்தலுக்கான தண்டனை.
 
யாராவது ஒரு நபரை இந்தியாவிற்குள்ளோ அல்லது இந்தியாவிற்கு வெளியோ அல்லது அவரது சட்டப்படி பாதுக்காவலரிடமிருந்து கவர்ந்து சென்றாலோ அவருக்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக் காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனை யாக விதிக்கப்படும் 
 
Section 363- Punishment for kidnapping
Whoever kidnaps any person from *[India] or from lawful guardianship, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.

* The words "British India" have successively been subs. by the A.O.1948, the A. O.1950 and Act 3 of 1951, sec.3 and sch., to read as above.
 
 
 
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.  

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - கூகுள்


ஆம் இன்று கூகுளின் 17 வது பிறந்த நாள்.

இது தொடங்கப்பட்டது 1998 ஆம் ஆண்டு. இதனை உருவாக்கியவர்கள் லாரி பெஜ் மற்றும் செர்ஜீ பிரின்.




அதன் அன்றைய தோற்றம் மற்றும் ஊழியர்கள்




    இன்று நம்முடைய எல்லாத் தேவைகளையும் எளிதாக்கி மாபெரும் சாதனை கூகுள், மைக்ரோசாப்ட், ஜாவா மற்றும் ஆரக்களை சாரும். கணினியில் வேலைப் பார்ப்பதும் ஒரு மக்கள் சேவைதான் எப்படி என்றால் தகவல்கள் மிக எளிதாக கிடைப்பது தான். 


20 வருடங்களுக்கு முன்னர் நமக்கு ஒரு தகவல் தேவையென்றால் ஆசிரியர் அல்லது லைப்ரரியில் அல்லது தினத்தந்தியில் வரும் குருவியாரிடமோ அல்லது


    ராணியில் வரும் அல்லியிடமோ அல்லது க்ரைம் மன்னன் ராஜேஸ்குமாரிடமோ தான் கேட்போம்.


    ஆனால் இன்று அப்படியில்லை நாம் கூகுளிடம் அல்லவா கேட்கிறோம். மாதா , பிதா, குரு வரிசையில் இப்போது கூகுளும் இனைந்துள்ளது. அதன் தலைமை அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை அவர்கள் ஒரு தமிழராக இருப்பதும், நமக்கு எல்லாம் பெருமைதான். வாழ்த்துவோம் மேன் மேலும் வளர. 


Not sure what’s more of a relic from a bygone era, the lava lamp or the computer monitor.

     இதுப் போல பல நிறுவனங்கள் தோன்றின அவைகள் முதலில் இலவசமாக தொடங்கி பின் கட்டண சேவைக்கு மாறிவிட்டார்கள் அவர்கள் போல இல்லாமல் இதுப் போன்ற சேவைகளை என்றும் வழங்குவார்கள் என எதிர்பார்ப்போம்.

 நன்றி கூகுள் எங்களின் அன்றாட வாழ்க்கையில் உன் பங்களிப்பிற்கு.

   இன்று நமக்கேன்று இருக்கும் சுமார்ட் போனின் ஆன்ட்ராய்ட் இயங்குதளம்  கூகுளின் தயாரிப்பு என்றால் அது மிகையாகாது.  இப்போது நீங்கள் படிக்கும் பிளாக்கர் கூட கூகுளின் தயாரிப்புதான்.

அவர்களின் என்னற்ற படைப்புகளை இங்கு காணலாம்.

https://www.google.com/doodles/googles-17th-birthday
www.google.com
https://en.wikipedia.org/wiki/Google

 அன்று

இன்று


தினம் ஒரு சட்டம் - இ.த.ச 511 இது தான் கடைசி சட்டம் - இ.த.ச வில்


குற்றம் செய்ய முயற்சிப்போருக்கு - எந்த தண்டனை விவரம் குறிப்பிடாதப் போது

 


இ.த.ச 511 -    இந்த இந்திய தண்டனைச் சட்டம்  படி ஒரு குற்றம் செய்ய முயற்சிப்பவருக்கு எந்த தண்டனையும் குறிப்பிடாதப்பட்சத்தில் அந்த நபர் ஆயுள் தண்டனை அல்லது சிறைத்தண்டனை பெறத்தக்க ஒரு குற்றத்தை செய்ய முயற்சித்தாலே போதும். 

அத்தகைய ஒரு குற்றத்திற்கு இந்த சட்டத் புத்தகத்தில் ஒரு தண்டனையை குறிப்பிட படவில்லையெனில் அவர் அந்த குற்றத்தை செய்ந்தால் என்ன தண்டனை கிடைக்குமோ அதில் பாதி கிடைக்கும்.



        உதாரணமாக அவர் ஆயுள் தண்டனை விதிக்கத்தக்க ஒரு குற்றத்தைப்புரிய முயற்ச்சித்தால் அதில் பாதியையும் அல்லது வேறு தண்டனைப் பெறத்தக்க ஒரு குற்றத்தைப் புரிய முயற்ச்சித்தால் அந்த தண்டனையின் அதிகப்பட்ச தண்டனையில் பாதியை தண்டனையையும்,

    மேலும் அந்த குற்றத்திற்கு எதாவது அபராதமாக மட்டுமே விதிக்கப்படுமானால் அதை மட்டும் விதிக்கப்படும் அல்லது அபராதமும் தண்டனையும் என்றால் இரண்டையும் சேர்த்து  தண்டனையாக விதிக்கப்படும்.




உதாரணம் - 1 

என்பவர் பி என்பவரின் நகைகளை திருடுவதற்காக எ என்பவரின் பெட்டியை உடைத்து நகையை எடுக்க முயற்ச்சித்து பெட்டியை உடைக்கிறான் ஆனால் பெட்டியில் நகை இல்லை. திருட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த செயல் புரியப்பட்டதால் , என்பவர் இந்தப் பிரிவின் கீழ் குற்ற வாளியாகிறார்.

உதாரணம் - 2 

என்பவர் ஒருவருடைய சட்டைப் பையில் கையை விட்டு திருடவேண்டும் என்று கையை உள்ளே விடுகிறார் ஆனால் பணம் இல்லை அதனால் திருட வில்லை ஆனாலும் இந்த சட்டப்பிரிவின் படி அவர் குற்றவாளியாகிறார் எனேன்றால் அவரின் மனம் அந்த செயலை செய்ய தூண்டியது (mens rea)


Section 511- Punishment for attempting to commit offences punishable with imprisonment for life or other imprisonment



          Whoever attempts to commit an offence punishable by this Code with *[imprisonment for life] or imprisonment, or to cause such an offence to be committed, and in such attempts does any act towards the commission of the offence, shall, where no express provision is made by this Code for the punishment of such attempt, 



 be punished with **[imprisonment of any description provided for the offence, for a term which may extend to one-half of the imprisonment for life or, as the case may be, one-half of the longest term of imprisonment provided for that offence], or with such fine as is provided for the offence, or with both.

Illustrations

(a) A makes an attempt to steal some jewels by breaking open a box, and finds after so opening the box, that there is no jewel in it. He has done an act towards the commission of theft, and therefore is guilty under this section.

(b) A makes an attempt to pick the pocket of Z by thrusting his hand into Z's pocket. A fails in the attempt in consequence of Z's having nothing in his pocket. A is guilty under this section.

* Subs. by Act 26 of 1955, s. 117 and Sch., for "transportation for life" (w.e.f. 1-1-1956).

** Subs. by Act 26 of 1955, sec. 117 and Sch., for certain original words (w.e.f. 1-1-1956). 




குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    இதில் வரும் படங்கள் கூகுள் தேடுப் பொறி மூலம் எடுக்கப்பட்டவை, தாங்களுக்கு உரியது என தகவல் தெரிவிப்பின் படம் நீக்கப்படும். 

Saturday, 26 September 2015

தினம் ஒரு சட்டம் - பெண்னை நோக்கி சைகை கேலி செய்தல்


இ.த.ச 509


     யாராவது, ஒரு பெண்மணி காணும்படி அல்லது கேட்கும் படி ஒரு ஒளி எழுப்புவதும் அல்லது தமது கையையோ அல்லது உடல் பாகத்தைக் கொண்டு ஒரு சைகை செய்வதும் அல்லது ஒரு பொருளைக் காட்டி கேலி செய்வதும், அல்லது அந்தப் பெண்ணின் அந்தரங்கத்தில் நுழைவதும் அவளை வெட்கப்படுத்த இத்தகைய காரியங்கள் புரியப்பட்டால் அது குற்றமாகும்.


    இந்த குற்றத்திற்கு ஒராண்டுவரை வெறுங்காவல் தண்டனையாக விதிக்கப்படும் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும்.

Section 509- Word, gesture or act intended to insult the modesty of a woman


    
     Whoever, intending to insult the modesty of any woman, utters any word, makes any sound or gesture, or exhibits any object, intending that such word or sound shall be heard, of that such gesture or object shall be seen, by such woman, or intrudes upon the privacy of such woman, 

    shall be punished with simple imprisonment for a term which may extend to one year, or with fine, or with both. 



இ.த.ச 510


    யாராவது , போதையில் பொது இடத்தில் அல்லது போதையில் போகக்கூடாத ஒரு இடத்திற்கு அத்துமீறி செல்வதும் அல்லது போதையில் பிறருக்கு தர்ம சங்கடமான நிலையை உண்டாக்குவதும் குற்றமாகும்.

     அந்த குற்றத்தைப் புரிந்த அந்த நபருக்கு இருபத்தி நான்கு மணி நேரம் வெறுங்காவல் அல்லது பத்து ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும்.

Section 510- Misconduct in public by a drunken person


    Whoever, in a state of intoxication, appears in any public place, or in any place, or in any place which it is a trespass in him to enter, and there conducts himself in such a manner as to cause annoyance to any person, 

      shall be punished with simple imprisonment for a term which may extend to twenty-four hours, or with fine which may extend to ten rupees, or with both.


http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1977


குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    

தினம் ஒரு சட்டம் - அனானியாக அல்லது ஆண்டவன் பெயரால் மிரட்டுதல்


இ.த.ச 507



     யாராவது,  ஒருவரை ஒருவர் மிரட்டினால் அது குற்றமாகும். மேலும் யாராவது அனானியாக மொட்டைக் கடிதம் மூலம் யார் மிரட்டுகின்றார்கள் என்ற விபரம் தெரியாமல் மிரட்டினால் அதுவும் குற்றமாகும்.


    அவருக்கு இ.த.ச 506 ல் வழங்கப்பட்ட தண்டனையுடன் மேலும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவலை அதிகப்படுத்தி தண்டனை விதிக்கப்படும்.

    அனானி என்ற பதம் தற்போதை கணினி உலகில் வேகமாக வளர்து வரும் ஒரு பதமாகும். அதனை தமிழில் பெயரில்லா என்ற பதத்திலும் அநாமத்தாக என்றும் வழங்கப்படுகிறது.


Section 507- Criminal intimidation by an anonymous communication



      Whoever commits the offence of criminal intimidation by an anonymous communication, or having taken precaution to conceal the name or abode of the person form whom the threat comes, 



   shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, in addition to the punishment provided for the offence by the last preceding section.



http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1974



இ.த.ச 508

     யாராவது, ஒருவர் செய்யவேண்டிய செயலை செய்யக்கூடாது எனவும் அல்லது செய்ய கூடாத செயலை செய்யவேண்டும், அவ்வாறு மிரட்டும் நபர்,


      அவர் கூறியப்படி செய்ய வில்லையெனில் வேலையை செய்யாத அவரோ அல்லது அவருக்கு பிரியமான ஒருவருக்கோ கடவுளின் சாபம் உண்டாகும் என தன்னிச்சையாக ஆண்டவன் பெயரால் அச்சுறுத்துவதும் அல்லது அவ்வாறு அச்சுறுத்த முயற்சி செய்வதும் குற்றமாகும்.

      இந்த குற்றத்திற்கு ஒர் ஆண்டுகள் வரையில் சிறைகாவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும்.


படம் http://tamilmurasu.org/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_41809809208.jpg


Section 508- Act caused by inducing person to believe that he will be rendered an object of the Divine displeasure


      Whoever voluntarily causes or attempts to cause any person to do anything which that person is not legally bound to do, or to omit to do anything which he is legally entitled to do, by inducing or attempting to induce that person to believe that he or any person in whom he is interested will become or will be rendered by some act of the offender an object of Divine displeasure if he does not do the thing which it is the object of the offender to cause him to do, or if he does the thing which it is the object of the offender to cause him to omit, 

     shall be punished with imprisonment of either description for a term which may extend to one year, or with fine, or with both.

Illustrations - உதாரணங்கள்

அ - எ என்பவர் பி என்பவருக்கு கெடுதல் விளையவேண்டும் என பி என்பவரின் விட்டின் முன் தவம் இருக்கிறார். இந்த பிரிவின் படி எ என்பவர் குற்றமிழைக்கிறார்.

(a) A sits dharna at Z's door with the intention of causing it to be believed that, by so sitting, he renders Z an object of Divine displeasure. A has committed the offence defined in this section.

ஆ - ஒருவர் நரபலித் தர வேண்டும் என பிறரை மிரட்டுவதும் அதை செய்ய மறுத்தால் நான் என் பிள்ளையைக் கொன்று அதானால் உனக்கு கடவுளுடைய சாபம் உண்டாகும் என பயமுறுத்துவதும் இந்தப் பிரிவின் கீழ் குற்றமாகும்.

(b) A threatens Z that, unless Z performs a certain act, A will kill one of A's own children, under such circumstances that the killing would be believed to render Z an object of Divine displeasure. A has committed the offence defined in this section. 

http://www.indianlawcases.com/act-Indian.Penal.Code,1860-1975


குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    இதில் வரும் படங்கள் கூகுள் தேடுப் பொறி மூலம் எடுக்கப்பட்டவை, தாங்களுக்கு உரியது என தகவல் தெரிவிப்பின் படம் நீக்கப்படும்.