Sunday 30 August 2015

தினம் ஓரு உரிமை - பொது உரிமையியல் சட்டம்





இந்திய அரசியல் சாசனம் - 44

 குடிமக்கள் அனைவருக்கும் ஒரே சீரான உரிமை இயல் சட்டத்தை இந்தியா முழுவதிலும் அமல் செய்யப்படுவதற்கான முயற்ச்சிகளை அரசு எடுக்க வேண்டும்.


பொது சிவில் சட்டம் என்றால் என்ன? பொது சிவில் சட்டம் வந்தால் சொத்துரிமை, தனிப்பட்ட உரிமைகளான திருமணம், விவாகரத்து, பராமரிப்பு, தத்து எடுத்தல் உள்ளிட்ட பல சட்ட உரிமைகள் எல்லோருக்கும் பொதுவாக இருக்கும். தற்போது உள்ள நிலையில் பல்வேறு வகுப்பினரையும் நிர்வாகம் செய்ய பல்வேறு சட்டங்கள் உள்ளன. பொது சிவில் சட்டம் அமல் செய்யப்பட்டால் இந்த தனி மதச் சட்டங்கள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் வந்துவிடும். இந்த சட்டங்கள் மத சார்பில்லாமல் அமையும். இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் அவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் அது பொருந்தும் வகையில் இருக்கும் .

 


Constitution of India Article 44. 


     The State shall endeavor to secure for the citizens a uniform civil code throughout the territory of India.



தகவல்: http://lawmin.nic.in/coi/coiason29july08.pdf
 


குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.  

5 comments:

  1. தினம் ஒரு சட்டம்! அருமை வாழ்த்துகள்!!!

    அன்புடன் கரூர்பூபகீதன் நன்றி!?

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி!

      Delete
  2. அருமை தகவலுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி!

      Delete
  3. மிகவும் அருமை நல்ல பதிவு வாழ்த்துக்கள் பயனுள்ள தகவல் நல்ல இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் தமிழில் பிளாக்கரை ஆரம்பிப்பது எப்படி? https://www.techhelpertamil.xyz/

    ReplyDelete