Friday 21 August 2015

தினம் ஓரு உரிமை - Habeas Corpus - ஆட்கொணர்வு நீதி பேராணை


Habeas Corpus என்பது இலத்தின் மொழியாகும், இதன் பொருள் you have our body, இந்த வார்த்தையை ஏன் ஆங்கில சட்டத்தில் உள்ளது என்றால் , இங்கிலாந்து சில காலங்கள் வரை பிரஞ்ச் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது அப்போது அவர்கள் பயன்படுத்திய இலத்தின் வார்த்தைகள். அது தொன்று தொட்டு இன்று வரை ஆங்கிலேய சட்டத்திலும் அவர்கள் ஆண்ட இந்தியாவிலும் நாம் இதுப் போன்ற வார்தைகளை உபயோகின்றோம்.





       இந்திய குடிமக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு நம் அரசியலமைப்பு சட்டம் பல அம்சங்களை வழங்கியுள்ளது. அதில் மிக முக்கியமானது நீதி பேராணைகள். ரிட் மனு என சொல்லப்படும் இந்த நீதிப்பேராணை கள் ஐந்து இருக்கிறது. இதில் அதிகமாக பயன்படுத்தப்படுவது Herbias corpus எனப்படும் ஆட்கொணர்விக்கும் நீதிப் பேராணை. 

        ஒருவரை சட்டத்திற்குப் புறம்பாக கைது செய்து அவர் இருக்கும் இடமே யாருக்கும் தெரியாமல் இருக்கிறது என்ற சூழ்நிலையில் உயர் நீதிமன்றத்தை அணுகி இந்த ரிட் மனுவை தாக்கல் செய்யலாம். யார் தாக்கல் செய்யலாம் உறவினர்களும் மற்றும் நண்பர்களும் தாக்கல் செய்யலாம்.


         
       காவல்துறையினர் அல்லது வேறு அரசாங்க பிரதிநிதிகள் சட்டத்திற்கு புறம்பாக ஒருவரை கைது செய்யும் போது மட்டுமல்லாமல், யாரேனும் ஒருவர் கடத்திச் செல்லப்பட்ட  சூழ்நிலையிலும் அவரை உரியவர்களிடம் ஒப்படைக்க கூறி நீதி மன்றத்தில் இந்த ரிட் மனிவை தாக்கல் செய்யலாம். உதாரணமாக,  காதலித்து திரு மணம் செய்து கொண்ட ஜோடிகள் பெற் றோருக்கு தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்கள் அவர்களை தேடி கண்டுபிடித்து, அந்த பெண்ணை அழைத்துச் சென்று விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்நேரத்தில் கணவன் என்ற முறையில் தனது துனைவியை கண்டுபிடித்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர் மனுபோடலாம். மனுவை விசாரித்து அதில் உண்மை இருப்பின் நீதிமன்றத்தின் முன் சட்டத்திற்கு புறம்பாக 


               கைது செய்தி ருக்கும் நபரை ஒப்படைக்க சொல்வார்கள்.
இந்த மனுக்களை நேரடியாக உயர்நீதிமன்றத்திலும் ‌(Article 226) அல்லது உச்ச நீதிமன்றத்திலும் (Article 32) தான் தாக்கல் செய்யமுடியும். மாவட்ட நீதிமன்ற ங்களில் தாக்கல் செய்ய முடியாது.  அல்லது கிளை நிதிமன்றத்திலும் தாக்கல் செய்ய முடியாது.

              சமீபத்தில் லக்னோவில் சித்தாபூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஹரிபிரசாத் ஒருகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு நீதி மன்றம் தண்டனை வழங்கியதன் பேரில் சிறையில் இருந்தார். நீதி மன்ற உத்தரவு ப்படி ஏப்ரல் ஒன்றாம் தேதி அவர் விடுத லையாக வேண்டும். அவர் மீது வேறு எந்தவித புகாரும் இல்லாதபோதும் உரிய தேதியில் விடுவிக்கப்படவில்லை. இதனை எதிர்த்து ஹரிபிரசாத் ஜூன் ஆறாம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்ற த்தில் ஆட் கொணர்விக்கும் நீதிப்பேரா ணை தாக்கல் செய்தார்.



           மனுவை விசாரித்த நீதிபதி ஹரிபிரசாத்தை சட்டத்திற்கு புறம்பான வகையில் இன்னும் விடுதலை செய்யாமல் இருப்பதற்காக மாவட்ட சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு “ஹரி பிரசாத்தை சட்டத்திற்கு புறம் பான வகையில் இன்னும் விடுதலை செய்யாமல் வைத்திருப் பதற்கு உங்களது சம்பளத்திலிருந்து நஷ்ட ஈடு வழங்கினால் என்ன ?” என கேட்டிருந்தனர். மூன்று வாரத்தில் பதிலளிக்கும்படி நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.  

      இந்த வழக்கின் கீழ் நாம் நிவாரணம் பெற உரிமை உள்ளது. [In Malkiat Singh v. State of U.P 7, the son of a person was allegedly kept in illegal custody by the police officers. It was established that the son was killed in an encounter with the police. The court awarded Rs. 5,00,000 as compensation to the petitioner.]

          ஆனால், உரிய தினத்தில் பதிலளிக்க வில்லை. அதனால் நீதிமன்றம் சிறை கண்காணிப்பாளர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞரை கண்டித்தது. பிறகு ஹரிபிரசாத் நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. தனது தண்டனைக் காலம் முடிந்தும் விடுதலை செய்யாததை எதிர்த்து ஆட்கொணர்விக்கும் நீதிபேராணை மூலம் விடுதலையானார் ஹரிபிரசாத்.
          இது போன்று சட்டத்திற்கு புறம்பான வகை யில் ஒருவரை கைது செய்து வைத்தி ருக்கும் போதும் கூட ரிட் மனு தாக்கல் செய்யலாம்.  காணாமல் போ யிருக்கும் நபரை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டி நீதிமன்றத்தை அணுகி ரிட்மனு தாக்கல்செய்ய  ஆட்கொணர் விக்கும் நீதிபேராணை பெரும் துணையாக இருக்கிறது.



 &



1. Habeas Corpus:

A writ of habeas corpus is in the nature of an order calling upon the person who has detained another, to produce the latter before the Court in order to let the Court know on what ground she/ he has been confined and to set him/her free if there is no legal justification for the imprisonment.

The words ‘habeas corpus’ literally mean ‘you may have the body’. The writ may be addressed to any person whatever, an official or a private person who has another person in his custody and disobedience to the writ is met with punishment for the contempt of the court.

The different purposes for which the writ of habeas corpus can be issued are: (a) for the enforcement of fundamental rights, (b) to decide whether the order of imprisonment or detention is ultra vires the statute that authorises the imprisonment or detention.

The writ of habeas corpus is, however, not issued in the following cases:

(i) Where the person against whom the writ is issued or the person who is detained is not within the jurisdiction of the Court, (ii) To secure the release of a person who has been imprisoned by a court of law on a criminal charge, (iii) To interfere with a proceeding for contempt by a court of record or by the Parliament.

2 comments:

  1. விரிவான விடயங்கள் நன்று நண்பா....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி...

      Delete