Sunday 23 October 2016

நாடகம் - நாட்டிற்கும்.... வீட்டிற்கும் கேடு......


நலமானதை சிந்திப்போம் நல்லதை செய்வோம்...நல்லதை பார்ப்போம்.....


நம்முடைய சமுகத்தில் புகைப்பிடித்தலும், குடித்தலும் மட்டுமே குற்றம் அதனை பயன்படுத்தும் போதும் மட்டும் சினிமா மற்றும் தொலைக்காட்சிகளிலிலும் குடி நாட்டுக்கும் வீட்டிற்கும் உடலுக்கும் கேடு என விளம்பர படுத்தப்படுகின்றது...


புகைப்பிடித்தலும்...........



 குடித்தலும்............மட்டுமே அல்ல....



ஆனால் சமுகத்திற்கு அதனை விட கேடு விளைவிக்கும் எத்தனையோ நாடகங்களும், சினிமா வன்முறை காட்சிகளும் அமைந்துள்ளன அதனை திரையிடும் நிறுவனங்களும், காட்சி அமைப்பவரும் அது குற்றம் எனவும் எந்தகைய தண்டனை எனவும் அதில் வெளியிட வேண்டும்,  








இதனால் மட்டுமே குற்றத்தை தடுக்கவும், சட்ட விழிப்புனர்ச்சியை உண்டாக்கவும் முடியும் மத்திய மாநில அரசுகள் இத்தகைய கோரிக்கைகளை ஏற்று நல்ல சமுகத்தி உருவாக்க வேண்டும்.... 





எவ்வாறு எனில்.... ஒரு தற்கொலைக்கும் முயலும் போதும் அல்லது கொலை செய்ய முயலும் போதும் அதன் அடியில் அல்லது வேறு சில வகைகளில் இது குற்றம் என காண்பிக்க படவேண்டும்....

உதாரணமாக யாராவது தற்கொலை செய்ய முயலும் போது அதில் கீழ் கண்டவாறு பிரசுரிக்க வேண்டும் 




இ.த.ச 309 - யாராவது தற்கொலை செய்து கொள்வதற்கு முயறச்சித்தாலும் அது தொடர்பான ஏதாவது ஒரு செயலைப் புரிந்து முயற்ச்சித்தாலும் அது தற்கொலை முயற்சியாக கருதப்படும். இது சட்டப்படி குற்றமாகும்.


இந்தக் குற்றத்திற்கு ஒரு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

பொருப்புறுதி - பொதுமக்களின் நலன் கருதியும் நல்ல எண்ணத்தின் அடிப்படையிலும் , யாரையும் குறை குற்றம் சுமத்தும் எண்ணத்திலும் அல்ல, என சான்று உரைக்கின்றேன்.

நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு....


நலமானதை சிந்திப்போம் நல்லதை செய்வோம்...நல்லதை பார்ப்போம்.....


நம்முடைய சமுகத்தில் புகைப்பிடித்தலும், குடித்தலும் மட்டுமே குற்றம் அதனை பயன்படுத்தும் போதும் மட்டும் சினிமா மற்றும் தொலைக்காட்சிகளிலிலும் குடி நாட்டுக்கும் வீட்டிற்கும் உடலுக்கும் கேடு என விளம்பர படுத்தப்படுகின்றது...


புகைப்பிடித்தலும்...........



 குடித்தலும்............மட்டுமே அல்ல....



ஆனால் சமுகத்திற்கு அதனை விட கேடு விளைவிக்கும் எத்தனையோ நாடகங்களும், சினிமா வன்முறை காட்சிகளும் அமைந்துள்ளன அதனை திரையிடும் நிறுவனங்களும், காட்சி அமைப்பவரும் அது குற்றம் எனவும் எந்தகைய தண்டனை எனவும் அதில் வெளியிட வேண்டும்,  








இதனால் மட்டுமே குற்றத்தை தடுக்கவும், சட்ட விழிப்புனர்ச்சியை உண்டாக்கவும் முடியும் மத்திய மாநில அரசுகள் இத்தகைய கோரிக்கைகளை ஏற்று நல்ல சமுகத்தி உருவாக்க வேண்டும்.... 





எவ்வாறு எனில்.... ஒரு தற்கொலைக்கும் முயலும் போதும் அல்லது கொலை செய்ய முயலும் போதும் அதன் அடியில் அல்லது வேறு சில வகைகளில் இது குற்றம் என காண்பிக்க படவேண்டும்....

உதாரணமாக யாராவது தற்கொலை செய்ய முயலும் போது அதில் கீழ் கண்டவாறு பிரசுரிக்க வேண்டும் 




இ.த.ச 309 - யாராவது தற்கொலை செய்து கொள்வதற்கு முயறச்சித்தாலும் அது தொடர்பான ஏதாவது ஒரு செயலைப் புரிந்து முயற்ச்சித்தாலும் அது தற்கொலை முயற்சியாக கருதப்படும். இது சட்டப்படி குற்றமாகும்.


இந்தக் குற்றத்திற்கு ஒரு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

பொருப்புறுதி - பொதுமக்களின் நலன் கருதியும் நல்ல எண்ணத்தின் அடிப்படையிலும் , யாரையும் குறை குற்றம் சுமத்தும் எண்ணத்திலும் அல்ல, என சான்று உரைக்கின்றேன்.

Saturday 15 October 2016

வசூலான தொகை 65,250 கோடி பணத்தை என்ன பண்ணலாம்...?



தாமே வந்து கருப்பு பணத்தை கணக்கில் காட்டவேண்டும் என்ற திட்டத்தின் கீழ் வந்த தொகை 65,250 கோடி (65,250 * 1,00,00,000)
 




மத்திய மாநில அரசுகளுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம், தாமே வந்து கருப்பு பணத்தை கணக்கில் காட்டவேண்டும் என்ற திட்டத்தின் கீழ் வந்த தொகை 65,250 கோடி இந்தப் பணத்தைக் கொண்டு ,ஏழை எளிய மக்களுக்கு அடிப்படை வசதியையும், தாலுக்கா தோறும் பல வசதிகள் கொண்ட மருத்துவமணையும், 



மற்றும் அனைத்து தாலுக்க மற்றும் பேருராட்சி தோறும் மத்திய அரசின் கீழ் நடைப் பெறும் கேந்திரிய வித்யா பவன் பள்ளி போல பல பள்ளிகளையும் உருவாக்கவும், 




டோல் சாலைகளின் நிறுவனங்களின் மீதமுள்ள தொகையை ஒரே கணக்காக செட்டில் செய்துவிடவும்..அந்த டோல் சாலைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும், மேலும் பல புதிய சாலைகளையும் அமைக்கவும், பழைய சாலைகளை செப்பனிடவும்..

பல முக்கிய பண்டிகையின் போது பொது மக்கள் பயணிக்க சிறப்பு பேருந்துக்களை வாங்கவும்...

பல புதிய ரயில் மார்க்கத்தை உருவாக்கவும், பல புதிய ரயில்களை அறிமுகப்படுத்தவும்,
அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக புத்தகம், நோட்டு , உபகரணம் மற்றும் சிருடை வழங்கவும்,
மீதமுள்ள பணத்தில் குளம், குட்டை, கம்மாய், ஆறு ஆகியவற்றை தூறுவாரவும், புதிய தடுப்பணைகளை கட்டவும் இந்த பணத்தை மத்திய அரசு செலவு செய்ய வேண்டுமாய் தங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.


மேலும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடனாக தந்து விவசாயத்தை ஊக்குவிக்கவும், விவசாய சம்பந்தப்பட்ட உபகரணங்களை தயாரிப்பதற்கும் பயன்படுத்தலாம்.

ராணுவத்திலிருந்து ஒய்வுப் பெற்ற ராணுவ வீரர்களைக் கொண்ட ஒரு ஊர்காவல் படையை அமைத்து எல்லையில் பணிசெய்வது போன்று அவர்களை வைத்து ரோந்து பணியில் இரவிலும் பகலிலும் ஈடுப்படுத்த வேண்டும், இதனால் கூலிப்படை கொலை கொள்ளைப் போன்ற துணிகரமான குற்றங்கள் குறையும்.


மேலும் பணம் இருக்குமானால் ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்களை மாநிலத்திற்கு மேலும் இரண்டு என துவங்கவும்.
 

மேலும் பல மருத்துவ கல்லூரிகளையும், துறைச் சார்ந்த பல அலுவலகங்களை சொந்தமாக உருவாக்கவும், 

தங்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.

பொது மக்கள் நலன் கருதி நல்ல எண்ணத்தின் அடிப்படையில் கேட்டுக் கொள்கிறேன்.. மேலும் தங்களுக்கு இதுப் போன்ற பல திட்டங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்.

Friday 14 October 2016

முன்னெச்சரிக்கை மனுத் தாக்கல் (CAVEAT ) என்றால் என்ன..?


உரிமையியல் நடைமுறைச் சட்டம் (CPC) – பிரிவு – 148 (அ) – முன்னெச்சரிக்கை மனுத் தாக்கல் (CAVEAT ) என்றால் என்ன..?


 




நம் யாருக்காவது பிறர் நமது சொத்து அல்லது பொருளின் மீது வழக்கு தொடருவார்கள் எனத் தெரிந்தால், அல்லது நாம் வெளியூர்களுக்கு பயணிக்கும் போது அவ்வாறு பிறரால் ஒரு வழக்கு தொடரப்படும்

அல்லது

வழக்கு தொடரப்பட்டுள்ளது என நம்முடைய கவனத்திற்கு வரும் போது நாம் முன் கூட்டியே நீதிமன்றத்திற்கு இத்தகைய மனுவைத் தாக்கல் செய்யலாம்.





இதன் மூலம் யார் அந்த வழக்கை தொடருவார்கள் என்பது நமக்கு தெரியுமானால் அவருக்கும் அக்னாலட்ஜ்மென்ட் கார்டு கொண்ட பதிவுத்தபாலில் அந்த வழக்கு தொடர்பான முன்னெச்சரிக்கை மனுவைத் பிரதிவாதிக்கும் தாக்கல் செய்யலாம்,


இதனால் நாம் ஊரில் இல்லாத சமயத்தில் அல்லது வெளியூரில் வேலை நிமித்தம் இருக்கும் நம்முடைய சொத்து அல்லது கரும் பொருளின் மீது பிறர் வழக்கு தொடர்ந்து ஒரு தலைப்பட்சமான ஒரு தீர்ப்பை எதிர்தரப்பினரான வாதி பெறஇயலாது, 

 



நமக்கு நீதிமன்றத்தின் மூலம் சம்மன் சார்பு செய்யப்பட்டது அல்லது நாம் நீதிமன்றத்தின் சம்மனைப் பெறவில்லை என வழக்கிலிருந்து நம்மை புறத்தே ஒதுக்கமுடியாது (ex parte decree), ஒதுக்கி ஒரு தீர்ப்பை வழங்க முடியாது... இது அனைவருக்கும் பயனாகும் என்ற நல்ல எண்ணத்திலும், பொதுமக்களின் நலன் கருதியும் வெளியிடுகின்றேன, மேலும் இது தொடர்பான சட்ட பிரிவுகளை ஆங்கிலத்தில் வழங்கப்பட்டுள்ளது அதனை வாசிக்கவும்.

அதிகம் பகிரவும்...



Section 148A of CPC. Right to lodge a caveat



148A. Right to lodge a caveat—

(1) Where an application is expected to be made, or has been made, in a suit or proceedings instituted, or about to be instituted, in a Court, any person claiming a right to appear before the Court on the hearing of such application may lodge a caveat in respect thereof.

(2) Where a caveat has been lodged under sub-section (1), the person by whom the caveat has been lodged (hereinafter referred to as the caveator) shall serve a notice of the caveat by registered post, acknowledgement due, on the person by whom the application has been or is expected to be, made, under sub-section (1).

(3) Where, after a caveat has been lodged under sub-section (1), any application is filed in any suit or proceeding, the Court, shall serve a notice of the application on the caveator.

(4) Where a notice of any caveat has been served on the applicant, he shall forthwith furnish the caveator at the caveator's expense, with a copy of the application made by him and also with copies of any paper or document which has been, or may be, filed by him in support of the application.

(5) Where a caveat has been lodged under sub-section (1), such caveat shall not reman in force after the expiry of ninety days from the date on which it was lodged unless the application referred to in sub-section

(1) has been made before the expiry of the said period.

அதிகம் பகிரவும்...



 பொருப்புறுதி - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    எளிதாக பொது மக்களுக்கு சட்டம் சென்றடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் வெளியிடப்படுகின்றது, இதனை மட்டுமே சட்ட முழுமையான சட்ட விளக்கமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.. 

Thursday 13 October 2016

மாநில முதல்வரின் பணிகள் - அரசியலமைப்பு சாசனத்தின் படி


இந்திய அரசியலமைப்பு சாசனம் - ஷரத்து 167


167. இது ஒரு மாநிலத்தின் முதலமைச்சரின் பணிக்கடமையாகும் 

       It shall be the duty of the Chief Minister of each State—



(அ) - ஒரு மாநிலத்தின் நலம் கருதி எடுக்கும் முடிவுகளையும் , சட்டமன்றம் மற்றும் அமைச்சரவையின் முலம் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களை ஆளுநருக்கு உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும்.
 


(a) to communicate to the Governor of the State all decisions of the Council of Ministers relating to the administration of the affairs of the State and proposals for legislation;
 



(ஆ) -  ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் , ஒரு மாநிலத்தில் நிர்வாக நலன் கருதி எடுக்கப்படும் முடிவுகளையும் மற்றும் உருவாக்கப்பட்டிருக்கும் சட்டங்களைப் பற்றியும் அந்த மாநிலத்தின் ஆளுநரால் கேட்ப்படும் தகவல்களைத் தரப்பட வேண்டும்; மற்றும்

(b) to furnish such information relating to the administration of the affairs of the State and proposals for legislation as the Governor may call for; and
 
 



  (இ) - ஒரு மாநிலத்தின் ஆளுநரின் வேண்டுகோளுக்கு இனங்க ஒரு அமைச்சரவையில் எடுக்கப்பட்டிருக்கும் எல்லா முடிவுகளையும் ஒரு முதல்வரின் முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் அனைத்து முடிவுகளையும் தெரியப்படுத்த வேண்டும், 

ஆனால் அவ்வாறு எடுக்கப்பட்டிருக்கும் முடிவானது அந்த மாநிலத்தின் அமைச்சரவையினால் கைவிடப்பட்டிருந்தால் அதனை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறுவுத்த முடியாது.

(c) if the Governor so requires, to submit for the consideration of the Council of Ministers any matter on which a decision has been taken by a Minister but which has not been considered by the Council.


  பொருப்புறுதி - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    எளிதாக பொது மக்களுக்கு சட்டம் சென்றடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் வெளியிடப்படுகின்றது, இதனை மட்டுமே சட்ட முழுமையான சட்ட விளக்கமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.. 

Wednesday 12 October 2016

இந்திய அரசியலமைப்பு சாசனம் - 166 என்ன சொல்கின்றது...




இந்திய அரசியலமைப்பு சாசனம் 166 – மாநில அரசின் அலுவல் பணிகள் குறித்து 




(1) ஒரு மாநிலத்தின் எல்ல நிர்வாகத்தையும் அந்த மாநிலத்தின் ஆளுநரின் பெயரால் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட வேண்டும்.


  (2) ஒரு மாநிலத்தின் ஆளுநரின் பெயரால் அறிவிக்கப்படும் கட்டளைகளும் அல்லது வேறு ஆவணங்களும் ஒரு மாநிலத்தின் ஆளுநரின் உத்தரவுப்படி அதனை எவ்வாறு உண்மை என சான்றளிக்கவும், உத்தரவு அளிக்கவும் விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளதோ அவ்வாறே உறுதி செய்யப்பட வேண்டும், அவ்வாறு அறிவிக்கப்பட்ட கட்டளை அல்லது வேறு ஆவணங்களும் உண்மையானவை அல்ல என்று யாரும் கேள்வி கேட்கமுடியாது அல்லது மறுக்க முடியாது.


(3) ஒரு மாநிலத்தின் ஆளுநர் தமக்கு எனில் இந்திய அரசியலமைப்பு சாசனம் வழங்கியபடி அந்த மாநிலத்தின் அரசு பணிகளை தக்க வகையில் செயல்படுத்துவதற்கு விதிமுறைகளை உருவாக்கவும், மேலும் அமைச்சர்களுக்கு அந்த பணிகளை ஒதுக்கிடு செய்வதற்கும் விதிமுறைகள் வகுக்கலாம், அது எவ்வாறு எனில் இந்திய அரசியலமைப்பு சாசன முறைப்படி வகுக்கப்படவேண்டும்.

(4) நீக்கப்பட்டது.


பொருப்புறுதி - Disclaimer, எளிதாக பொது மக்களுக்கு சட்டம் சென்றடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் வெளியிடப்படுகின்றது, இதனை மட்டுமே சட்ட விளக்கமாக கொள்ளக்கூடாது.. மேலும் இத்துடன் இனைத்துள்ள இந்திய அரசியலமைப்பு சாசன சட்ட விளக்க படங்களையும் காணவும்.

யூ.எஸ்.ஏ (U.S.A) என பெயர் வரக் காரணம் என்ன....?



அமெரிக்கா என்பது யூ.எஸ்.ஏ (U.S.A) என பெயர் வரக் காரணம் என்ன...?

 

ஒரு நல்லது, ஒரு கேட்டது மேலும் ஒரு கேடுகேட்டது அதாவது - The Good The Bad And The Ugly என்ற படத்தில் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது... 




அமெரிக்காவில் அமைந்துள்ள பல மாகாணங்களுக்கு ஒரே சீரான நீதியும், நிதியும், சுதந்திரமும் சரியாக வழங்கப்படவில்லை எனவும் ஒரு மாகாணத்தின் மக்களை அடுத்த மாகாண மக்கள், ஒரே தேசத்தின் மக்களாக நடத்தவில்லை என்பதாலும் அவர்களுக்குள் நடந்தது தான் இந்த அமெரிக்கா உள்நாட்டுப் போர். இந்தப்போர் பல வருடங்கள் நடந்தது என்பது வரலாற்று உண்மை யாகும், இதனை இந்தப்படம் பதிவு செய்துள்ளது இது தான் நிதர்சனம் மற்றும் உண்மை...



இதனால் அமெரிக்கா உள் நாட்டுப்போர் பலவருடங்கள் நடந்தது பல லட்சம் மக்கள் போரினாலும், பசி மற்றும் பட்டினியாலும் உயிரிழந்தார்கள்... அதனை தொடர்ந்து அப்ரகாம் லிங்கன் தலைமையில் ஒரு அமைப்பு அமைதியை வேண்டியும், மாகாணங்களுக்குள் ஒரே சீரான நிர்வாகமும் எந்த விதமான பிரிவினை சக்திகளும் குறுக்கிடாமலும் இருக்க முயன்று உள்நாட்டு போரை நிறுத்தியும் போராடினார்கள்... அதில் வெற்றியும் கண்டார்கள்... 



அதன் பின்பு... அமெரிக்கா என்பதை அழைப்பதை விடுத்து யுனைட்டடு நேஷன்ஸ் ஆப் அமெரிக்கா எனவும் ... அமெரிக்க நாட்டு பிரஜைகள் அனைவருக்கும் சம உரிமையும் சுதந்திரத்தையும் வழங்கினார்கள், எந்த மாகாணங்களுக்கும், எந்த மாகாண மக்களும் எந்த விதமான அச்சுறுத்தும், இடர்பாடுகளும் இன்றி செல்ல அதிகாரமும் அரசியலமைப்பும் இயற்றப்பட்டு இன்று வரை அனைவரும் அதனை பின்பற்றுகின்றார்கள்
அதுதான் யு.எஸ் - U.S.A எனிகின்ற United State of America 

- இந்த சம்பவம் நடந்தது April 12, 1861 – May 9, 1865.

Sunday 2 October 2016

புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக

அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி

புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக



இன்று நமது தேச பிதா அகிம்சா வாதி காந்தியின் பிறந்த தினம் இன்றைய தினம் - காந்தி அடிகளை பற்றி சில நினைவுகள்.


காந்தி மகான் கதை - ஆமாம் இன்று நாம் ரூபாய் நோட்டில் இருக்கும் காந்தியை தினமும் பார்க்கின்றோம், ஆனால் அவரின் வாழ்க்கை வரலாறு , இளமைக்காலம், பட்டப்படிப்பு பாரிஸ்டர் படித்த காலம், வழக்கறிஞராக பணியற்றிய காலம் அப்போது நடந்த சம்பவம் நமக்கு எத்தனை பேருக்கு தெரியும்... சரி தங்களின் பதில் சரியாக இருந்தாலும்.... 

இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் தெரியுமா என்பது சந்தேகமே ஏன் என்றால் இன்றைய தினங்களில் நடக்கும் குற்றம் , குடிப்பழக்கத்தை வைத்துப் பார்க்கும் போது யாரும் காந்தியடிகளின் உபதேசத்தை கடைப்பிடிப்பதாக தெரியவில்லை...

ஆனால் நான் ஒன்றைக் கூற கடமைப் பட்டுள்ளேன்.. நான் முதன் முதலில் இந்த காந்தி மகான் கதை என்ற புத்தகம் தான் என் வாழ்க்கையை மாற்றியது... எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் துன்பங்கள் துயரங்கள் வந்தாலும் நாம் துணிவுடன் போராடினால் வெற்றிப் பெறமுடியும்.
அதனால் தான் இந்தப் புத்தகத்தை இன்னும் என்னுடைய அறையில் இருக்கும் இதில் இருக்கும் ஒரு வாசகம்



"என்னைக் கேட்டால் நீ எதைப் படிக்கத் தவறினாலும் பிற்காலத்தில் காந்தியின் சுயசரிதைத் படிக்கத் தவறிவிடாதே. ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படித்தேயாக வேண்டிய கருத்துப் பேழை அவரது வரலாறு"

காந்தி மகானிடம் நாம் கற்க வேண்டிய பாடங்கள்

1 - எப்போதும் சிந்தனை மற்றும் புத்தகங்களைப் படிப்பதும், சரித்திரம் பற்றிக் தெரிந்துக் கொள்ளுவதும்.

2- பள்ளி படிக்கும் காலத்தில் டிக்டேசன் என்ற தேர்வு நடக்கும் போது, தவறாக ஒரு வார்த்தையை எழுதியிருந்தார், அவரின் நண்பர் அது தவறு என சுட்டிக் காட்டி திருத்திக் கொள்ள கூறினார் ஆனால் அவ்வாறு அதை செய்ய வில்லை.

3- சிறு வயதில் புலால் குடும்பத்திற்கு தெரியாமல் சாப்பிட்டுவிடுவார் , ஒரு நாள் கணவில் அந்த ஆடு அவர் வயிற்றில் கத்துவதாக உணர்ந்து, அதை பாவம் என கருதி புலால் உண்பதை விட்டு விட்டார்.

4- பொய் பேசாமல் இருப்பது, அவ்வாறு உண்மையை பேசினாலும் அதை விட முக்கியம் தனிமனித ஒழுக்கமே.

5- இளம் வயதில் எல்லாரும் செய்யும் தவறான புகைக்கும் பழக்கம் அவருக்கு தூண்டியது அதற்காக பணம் இல்லை என மனம் நொந்து தற்கொலைக்கு முயற்சித்தார்கள் பின்னர் மனம் திரும்பி ஒரு போதை பழக்கத்துக்காக விலைமதிப்பற்ற உயரை மாய்த்துக்கொள்ளுவதா என மனம் மாறினார்.

6- காந்தியடிகள் சிக்கனத்திற்கு ஒரு உதாரணம் எந்த வேலையாக இருந்தாலும் அதை அவரே செய்வார், அதனால் தான் சமதர்ம சமாதானம் உருவாகும், சாதி வேறுபாடுகள் தோன்றாது என நம்பினார் , அதன் படி வாழ்ந்தும் காட்டினார்.

7- காந்தியடிகளை தென்னாப்பிரிக்காவில் ஏழைகள் வக்கில் என வர்னித்தார்கள், அவர் ஏழைகளுக்காக வாதாடினார்.

8 - புலன் உணர்ச்சியை அடக்க காந்தியடிகள் ருசியான உணவு, பழவகைகளை சாப்பிடுவதை நிறுத்திக்கொன்டார், தம்முடைய துணிகளை தாமே துவைத்தார், பிறருக்கு பணிவிடை செய்ந்தார் அதனை தம்முடைய மனைவிக்கும் கற்றுத் தந்தார்கள்.

9 - பட்டினி விரதம் புலன் அடக்கத்துக்குச் சிறந்தது என்று எல்லாருக்கும் போதித்தார்கள் காந்தி, புலன் அடக்கம் என்பது ஆசைகளை அடக்குவது என்று பொருள்.

10- சுதேசி - உள்நாட்டு பொருட்களை வாங்குவதும் , விற்பதும் இதன் மூலம் இந்தியாவின் தரத்தை உயர்த்தும்.


மேலும் நிறைய விஷயங்கள் உள்ளது.. இப்போதைக்கு இது போதும் என நிறுத்துகின்றேன்... 

மேலும் அனைவரும் தங்கள் பிள்ளை, மாணவர்கள் அனைவருக்கும் காந்தியின் வாழ்க்கை வரலாறையும், அது சம்பந்தப்பட்ட புத்தகத்தையும் வாங்கி கொடுங்கள்.

மகான் காந்தியே மகான் !!!

நமக்காக இனி ஒரு காந்தியோ, புத்தனோ, ஏசுவோ , அம்பேத்காரோ, நேதாஜியோ பிறக்க மாட்டார்கள், அதனால் அவர்களின் வாழ்க்கையை பாடமாக நாம் படித்து தெரிந்துக் கொள்ள வேண்டும்..

ஏன் என்றால் நாம் வாழ்ந்து, குற்றம் செய்து பிழைக்கவா.. அல்லது நிம்மதியாக வாழவா... என நாம் உணரவேண்டும். மேலும் தமிழக அரசும், பள்ளிகளும் தேச தலைவர்களின் வரலாற்றை படிப்பளவில் மட்டும் அல்லாமல் உளவியல் அளவிலும் போதிக்க வேண்டும்.

புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக.........