Sunday, 2 October 2016

புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக

அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி

புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காகஇன்று நமது தேச பிதா அகிம்சா வாதி காந்தியின் பிறந்த தினம் இன்றைய தினம் - காந்தி அடிகளை பற்றி சில நினைவுகள்.


காந்தி மகான் கதை - ஆமாம் இன்று நாம் ரூபாய் நோட்டில் இருக்கும் காந்தியை தினமும் பார்க்கின்றோம், ஆனால் அவரின் வாழ்க்கை வரலாறு , இளமைக்காலம், பட்டப்படிப்பு பாரிஸ்டர் படித்த காலம், வழக்கறிஞராக பணியற்றிய காலம் அப்போது நடந்த சம்பவம் நமக்கு எத்தனை பேருக்கு தெரியும்... சரி தங்களின் பதில் சரியாக இருந்தாலும்.... 

இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் தெரியுமா என்பது சந்தேகமே ஏன் என்றால் இன்றைய தினங்களில் நடக்கும் குற்றம் , குடிப்பழக்கத்தை வைத்துப் பார்க்கும் போது யாரும் காந்தியடிகளின் உபதேசத்தை கடைப்பிடிப்பதாக தெரியவில்லை...

ஆனால் நான் ஒன்றைக் கூற கடமைப் பட்டுள்ளேன்.. நான் முதன் முதலில் இந்த காந்தி மகான் கதை என்ற புத்தகம் தான் என் வாழ்க்கையை மாற்றியது... எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் துன்பங்கள் துயரங்கள் வந்தாலும் நாம் துணிவுடன் போராடினால் வெற்றிப் பெறமுடியும்.
அதனால் தான் இந்தப் புத்தகத்தை இன்னும் என்னுடைய அறையில் இருக்கும் இதில் இருக்கும் ஒரு வாசகம்"என்னைக் கேட்டால் நீ எதைப் படிக்கத் தவறினாலும் பிற்காலத்தில் காந்தியின் சுயசரிதைத் படிக்கத் தவறிவிடாதே. ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படித்தேயாக வேண்டிய கருத்துப் பேழை அவரது வரலாறு"

காந்தி மகானிடம் நாம் கற்க வேண்டிய பாடங்கள்

1 - எப்போதும் சிந்தனை மற்றும் புத்தகங்களைப் படிப்பதும், சரித்திரம் பற்றிக் தெரிந்துக் கொள்ளுவதும்.

2- பள்ளி படிக்கும் காலத்தில் டிக்டேசன் என்ற தேர்வு நடக்கும் போது, தவறாக ஒரு வார்த்தையை எழுதியிருந்தார், அவரின் நண்பர் அது தவறு என சுட்டிக் காட்டி திருத்திக் கொள்ள கூறினார் ஆனால் அவ்வாறு அதை செய்ய வில்லை.

3- சிறு வயதில் புலால் குடும்பத்திற்கு தெரியாமல் சாப்பிட்டுவிடுவார் , ஒரு நாள் கணவில் அந்த ஆடு அவர் வயிற்றில் கத்துவதாக உணர்ந்து, அதை பாவம் என கருதி புலால் உண்பதை விட்டு விட்டார்.

4- பொய் பேசாமல் இருப்பது, அவ்வாறு உண்மையை பேசினாலும் அதை விட முக்கியம் தனிமனித ஒழுக்கமே.

5- இளம் வயதில் எல்லாரும் செய்யும் தவறான புகைக்கும் பழக்கம் அவருக்கு தூண்டியது அதற்காக பணம் இல்லை என மனம் நொந்து தற்கொலைக்கு முயற்சித்தார்கள் பின்னர் மனம் திரும்பி ஒரு போதை பழக்கத்துக்காக விலைமதிப்பற்ற உயரை மாய்த்துக்கொள்ளுவதா என மனம் மாறினார்.

6- காந்தியடிகள் சிக்கனத்திற்கு ஒரு உதாரணம் எந்த வேலையாக இருந்தாலும் அதை அவரே செய்வார், அதனால் தான் சமதர்ம சமாதானம் உருவாகும், சாதி வேறுபாடுகள் தோன்றாது என நம்பினார் , அதன் படி வாழ்ந்தும் காட்டினார்.

7- காந்தியடிகளை தென்னாப்பிரிக்காவில் ஏழைகள் வக்கில் என வர்னித்தார்கள், அவர் ஏழைகளுக்காக வாதாடினார்.

8 - புலன் உணர்ச்சியை அடக்க காந்தியடிகள் ருசியான உணவு, பழவகைகளை சாப்பிடுவதை நிறுத்திக்கொன்டார், தம்முடைய துணிகளை தாமே துவைத்தார், பிறருக்கு பணிவிடை செய்ந்தார் அதனை தம்முடைய மனைவிக்கும் கற்றுத் தந்தார்கள்.

9 - பட்டினி விரதம் புலன் அடக்கத்துக்குச் சிறந்தது என்று எல்லாருக்கும் போதித்தார்கள் காந்தி, புலன் அடக்கம் என்பது ஆசைகளை அடக்குவது என்று பொருள்.

10- சுதேசி - உள்நாட்டு பொருட்களை வாங்குவதும் , விற்பதும் இதன் மூலம் இந்தியாவின் தரத்தை உயர்த்தும்.


மேலும் நிறைய விஷயங்கள் உள்ளது.. இப்போதைக்கு இது போதும் என நிறுத்துகின்றேன்... 

மேலும் அனைவரும் தங்கள் பிள்ளை, மாணவர்கள் அனைவருக்கும் காந்தியின் வாழ்க்கை வரலாறையும், அது சம்பந்தப்பட்ட புத்தகத்தையும் வாங்கி கொடுங்கள்.

மகான் காந்தியே மகான் !!!

நமக்காக இனி ஒரு காந்தியோ, புத்தனோ, ஏசுவோ , அம்பேத்காரோ, நேதாஜியோ பிறக்க மாட்டார்கள், அதனால் அவர்களின் வாழ்க்கையை பாடமாக நாம் படித்து தெரிந்துக் கொள்ள வேண்டும்..

ஏன் என்றால் நாம் வாழ்ந்து, குற்றம் செய்து பிழைக்கவா.. அல்லது நிம்மதியாக வாழவா... என நாம் உணரவேண்டும். மேலும் தமிழக அரசும், பள்ளிகளும் தேச தலைவர்களின் வரலாற்றை படிப்பளவில் மட்டும் அல்லாமல் உளவியல் அளவிலும் போதிக்க வேண்டும்.

புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக.........

No comments:

Post a Comment