Monday 29 February 2016

தினம் ஒரு சட்டம் - தேர்தலில் செல்வாக்கை பயன்படுத்துதல் என்றால் என்ன - 3

இ.த.ச 171 இ

உட்பிரிவு -3

    ஒரு வேட்பாளரால் தேர்தலில் களத்தில் தரப்படும் தேர்தல் வாக்குறுதிகள் அல்லது பொது நலம் கருதி செய்யக்கூடிய எந்த திட்டங்களும் அல்லது பொது நலம் கருதி  மேற்க்கொள்ளப்படும் எந்த திட்டங்களும் இந்தப் பிரிவின் கீழ்  குற்றமாகாது. 

   ஒருவருடைய ஒட்டுரிமையில் குறிக்கிடும் கருத்தும் எண்ணமும் இன்றி  சட்டப்பூர்வமான முறையில் செய்யப்படும் எந்த நடவடிக்கைகளையும் இந்த பிரிவு கட்டுப்படுத்தாது.

குறிப்பு - பொதுவாக சுருங்க கூறின் ஒருவர் தமது அரசியல் செல்வாக்கால் அல்லது பணப்பலத்தால் ஒரு வேட்பாளரை நிற்க விடாமல் செய்வதும் அல்லது அத்தகைய செல்வாக்கால் தனக்கு ஒட்டாளிக்காத பிறர் கட்சிகளை சேர்ந்த வாக்காளர்கள் பெயரை நீக்குதலை குறிக்கும்

Section 171-C- Undue influence at elections
Whoever voluntarily interferes or attempts to interfere with the free exercise of any electoral right commits the offence of undue influence at an election.
Without prejudice to the generality of the provisions of sub-section (1), whoever-

(a) Threatens any candidate or voter, or any person in whom a candidate or voter is interested, with injury of any kind, or

(b) Induces or attempts to induce a candidate or voter to believe that he or any person in whom he is interested will become or will be rendered an object of Divine displeasure or of spiritual censure,

shall be deemed to interfere with the free exercise of the electoral right of such candidate or voter, within the meaning of sub-section (1).
A declaration of public policy or a promise of public action or the mere exercise of a legal right without intent to interfere with an electoral right shall not be deemed to be interference within the meaning of this section.

 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

Sunday 28 February 2016

தினம் ஒரு சட்டம் - தேர்தலில் செல்வாக்கை பயன்படுத்துதல் என்றால் என்ன - 2

இ.த.ச 171 இ

உட்பிரிவு -2

கீழ் கானும் இரண்டுப் பிரிவுகளில் உள்ளதை யாராவது செய்ந்தால் அவர்  இ.த.ச பிரிவு 171 இ ன் உட்பிரிவு 1 - கீழ் செயல்பட்டவராக கருதப்படுவார் எவ்வாறு எனில் யாராவது,

(a)  ஒரு வேட்பாளர் அல்லது வாக்காளரை கேடு உண்டாகும் என மிரட்டுவதும்  அல்லது அவருக்கு வேண்டிய ஒரு நபருக்கு ஒரு கேடு உண்டாகும் என மிரட்டுவதும் 

 அல்லது

(b) ஒரு வேட்பாளர் அல்லது வாக்காளருக்கு அல்லது அவருக்கு வேண்டிய ஒரு நபரின் மீது கடவுள் கோபப்படுவார் கடவுளின் சாபம் உண்டாகும் என அவருக்கு வேண்டியவர்களின் மீது தூண்டிவிடுவதும் அல்லது தூண்டிவிட முயற்சிப்பதும் இந்தப் பிரிவின் கீழ் குற்றமாகும்.

Section 171-C- Undue influence at elections

Whoever voluntarily interferes or attempts to interfere with the free exercise of any electoral right commits the offence of undue influence at an election.

Without prejudice to the generality of the provisions of sub-section (1), whoever-
(a) Threatens any candidate or voter, or any person in whom a candidate or voter is interested, with injury of any kind, or

(b) Induces or attempts to induce a candidate or voter to believe that he or any person in whom he is interested will become or will be rendered an object of Divine displeasure or of spiritual censure,

shall be deemed to interfere with the free exercise of the electoral right of such candidate or voter, within the meaning of sub-section (1).

A declaration of public policy or a promise of public action or the mere exercise of a legal right without intent to interfere with an electoral right shall not be deemed to be interference within the meaning of this section.

http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1606

 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

தினம் ஒரு சட்டம் - தேர்தலில் செல்வாக்கை பயன்படுத்துதல் என்றால் என்ன

இ.த.ச 171 இ

உட்பிரிவு - 1
                              
     யாராவது, தானாக முன்வந்து அமைதியாக நடைப் பெற்றுக்கொன்டிருக்கும் ஒரு தேர்தலை சீர்குலைக்கும் எண்ணத்துடனும் அல்லது கருத்துடனும் இடையுறு செய்வதும் அல்லது இடையுறு செய்ய முயற்ச்சிப்பதும் தேர்தலை பலவந்தத்தால் சீர் குலைத்தல் அல்லது தன் செல்வாக்கை தேர்தலில் பயன்படுத்தியதாக கருதப்படும் எனப்படும்.

Section 171-C- Undue influence at elections
Whoever voluntarily interferes or attempts to interfere with the free exercise of any electoral right commits the offence of undue influence at an election.
Without prejudice to the generality of the provisions of sub-section (1), whoever-

(a) Threatens any candidate or voter, or any person in whom a candidate or voter is interested, with injury of any kind, or

(b) Induces or attempts to induce a candidate or voter to believe that he or any person in whom he is interested will become or will be rendered an object of Divine displeasure or of spiritual censure,

shall be deemed to interfere with the free exercise of the electoral right of such candidate or voter, within the meaning of sub-section (1).
A declaration of public policy or a promise of public action or the mere exercise of a legal right without intent to interfere with an electoral right shall not be deemed to be interference within the meaning of this section.

http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1606

 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

Friday 26 February 2016

தினம் ஒரு சட்டம் - வாக்காளருக்கு பணம் கொடுத்தல் என்றால் என்ன...2

இ.த.ச 171 - ஆ

உட்பிரிவு (2) -

ஒருவர் பணத்தையோ அல்லது பரிசையோ அல்லது பரிதானத்தையோ ஒட்டுக்காக வேண்டி கொடுப்பதும் , கொடுக்க சம்மதிப்பதும், அல்லது பெறுவதும் பெறுவதற்கு முயற்சிப்பதும் குற்றமாகும்

உட்பிரிவு (3) -

ஒருவர் அத்தகை பணத்தையோ அல்லது பரிசையோ அல்லது பரிதானத்தையோ ஒட்டுக்காக வேண்டி பெறுபவரை அல்லது பெற சம்மதிப்பவரை அல்லது பெறுவதற்கு முயற்சிப்பவரை ஒட்டுக்காக பணத்தை பெற்றவராகவே கருதவேண்டும்.

அவர் அத்தகைய பரிதானம் பெறுவது தமக்கு விருப்பம் இல்லாத செயலை செய்வதற்கோ அல்லது விருப்பமான செயலை செயலை செய்யாமல் இருப்பதற்கோ இத்தகைய லஞ்சத்தை பெறுகின்றார். எனவே அவர் ஒட்டுக்காக பணத்தை பெற்றவராகவே கருதப்படுகிறார்

Section 171-B- Bribery
Whoever

(i) Gives a gratification to any person with the object of inducing him or any other person to exercise any electoral right or of rewarding any person for having exercised any such right; or

(ii) Accepts either for himself or for any other person any gratification as a reward for exercising any such right or for inducing or attempting to induce any other person to exercise any such right;

commits the offence of bribery:

Provided that a declaration of public policy or a promise of public action shall not be an offence under this section.
A person who offers, or agrees to give, or offers or attempts to procure, a gratification shall be deemed to give a gratification.
A person who obtains or agrees to accept or attempts to obtain a gratification shall be deemed to accept a gratification, and a person who accepts a gratification as a motive for doing what he does not intend to do, or as a reward for doing what he has not done, shall be deemed to have accepted the gratification as a reward. 
 
 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

தினம் ஒரு சட்டம் - வாக்காளருக்கு பணம் கொடுத்தல் என்றால் என்ன...1

இ.த.ச 171 ஆ

உட்பிரிவு (1) -
                   
                          (i) யாராவது ஒரு பரிசை அல்லது அன்பளிப்பை தமக்கோ அல்லது பிறருக்கோ அவருடை ஒட்டை தமக்கோ அல்லது வேண்டிய ஒருவருக்கோ பயன் படுத்த அல்லது பயன் படுத்த வேண்டும் என்று தூண்டுவதற்கோ கொடுப்பதாகும் வழங்கப்படும் அன்பளிப்பும் அல்லது பரிசும் அல்லது பரிதானமும் ஒட்டுக்கு லஞ்சம் வாங்குதல் எனப்படும்

                           (ii)  யாராவது தம்முடைய ஒட்டுரிமையை பயன்படுத்துவதற்கோ அல்லது பிறருடைய ஒட்டுரிமையை பயன்படுத்துவதற்கோ வாங்கப்படும் ஒரு அன்பளிப்பும் அல்லது பரிசும் அல்லது பரிதானமும் 

 ஒட்டுக்கு லஞ்சம் வாங்குதல் எனப்படும்

இது தண்டனைக்குரிய குற்றமாகும் , ஆனால் பொதுமக்களின் நலனுக்காக ஒரு செயலை செய்கிறேன் என தேர்தல் வாக்குறுதி அளிப்பது இந்தப் பிரிவின் கீழ் குற்றமாகாது.

நாளை உட்பிரிவு (2) - மற்றும் உட்பிரிவு (3)  பார்ப்போம்

Section 171-B- Bribery
Whoever

(i) Gives a gratification to any person with the object of inducing him or any other person to exercise any electoral right or of rewarding any person for having exercised any such right; or

(ii) Accepts either for himself or for any other person any gratification as a reward for exercising any such right or for inducing or attempting to induce any other person to exercise any such right;

commits the offence of bribery:

Provided that a declaration of public policy or a promise of public action shall not be an offence under this section.
A person who offers, or agrees to give, or offers or attempts to procure, a gratification shall be deemed to give a gratification.
A person who obtains or agrees to accept or attempts to obtain a gratification shall be deemed to accept a gratification, and a person who accepts a gratification as a motive for doing what he does not intend to do, or as a reward for doing what he has not done, shall be deemed to have accepted the gratification as a reward. 
 
 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

Thursday 25 February 2016

தினம் ஒரு சட்டம் - யார் வேட்பாளர்...? எது வேட்புரிமை...?

இ.த.ச 171 அ

அ- வேட்பாளர் என்பவர் எந்த ஒரு தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் மொழியப்படும் ஒருவரைக் குறிக்கும்.

ஆ- வேட்புரிமை எனப்படுவது ஒரு நபர் தேர்தலில் போட்டியிடுவதற்கும் அல்லது வேட்புரிமையை வாபஸ் பெறுவதற்கும் அல்லது ஒரு தேர்தலில் வாக்களிப்பதற்கும் அல்லது அந்த தேர்தலில் வாக்களிக்காமல் இருக்கும் உரிமையைக் குறிக்கும்.

Section 171-A- Candidate, Electoral right defined
 
"Candidate", "Electoral right" defined

For the purposes of this Chapter-

*[(a) "Candidate" means a person who has been nominated as a candidate at any election;]

(b) "Electoral right" means the right of a person to stand, or not to stand as, or to withdraw from being, a candidate or to vote or refrain form voting at an election.

* Subs. by Act 40 of 1975, sec. 9, for clause (a). (w.e.f. 6-8-1975)
 
 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 
 
Wednesday 24 February 2016

60 வருட விருத்தாசலம் தொகுதி சட்ட மன்ற தேர்தல் முடிவுகள்

         இதுவரை தமிழகம் 14 சட்டமன்ற தேர்தலை சந்தித்திருக்கின்றது அதில் விருத்தாசலம் தொகுதியின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்.. மற்றும் வாக்குப்பதிவு விவரங்கள்....

2011

2006

2001

1996

1991

1889

1984

1980

1977

1971

1967

1962

1957

1951

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் தகவல்கள் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

Tuesday 23 February 2016

தினம் ஒரு சட்டம் - இயற்கைக்கு மாறான முறையில் உடலுறவு செய்ந்ததாக பொய் வழக்கு பதிவு செய்ந்தால்

இ.த.ச 389
       ஒருவரிடமிருந்து அல்லது அவருக்கு வேண்டிய ஒருவர் மீது பொய்யாக அச்சுறுத்திப் பொருள் பறிக்க வேண்டும் என்பதற்காக அந்த நபர் மீது அல்லது மற்றவர் மீது மரணத்தண்டனைக்கு ஏதுவான 

  அல்லது ஆயுள் தண்டனைக்கு ஏதுவான அல்லது பத்து வருடம் வரைத் சிறைத்தண்டனைக் ஏதுவான  ஒரு குற்றம் புரிந்தார் அல்லது  ஒரு குற்றம் புரிய முயற்சித்தார் என பொய்யாக ஒரு வழக்கு தொடுப்பது குற்றமாகும்.  

    இந்தக் குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் வரைத் சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.

அவ்வாறு சுமத்தப்படும் குற்றம் இ.த.ச 377 வது பிரிவின் கீழ் இயற்க்கைக்கு மாறான பாலியல் குற்றமானால் (அதாவது குற்றம் சாட்டப்பட்ட நபர் தன்னை இயற்கைக்கு மாறாக கெடுத்து விட்டார் அவ்வாறு கூறுபவர் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கலாம்) - அந்தப் பிரிவின் கீழ் தண்டனைக்குரியதாக இருப்பின் அச்சுறுத்திப் பொருள் பறிப்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.  
  
Section 389- Putting person in fear of accusation of offence, in order to commit extortion

    Whoever, in order to the committing of extortion, puts or attempts to put any person in fear of an accusation, against that person or any other, of having committed, or attempted to commit an offence punished with death or with *[imprisonment for life], or with imprisonment for a term which may extend to ten years, 

    shall be punished with imprisonment of either description for term which may extend to ten years, 

    and shall also be liable to fine; and, if the offence be punished under section 377 of this Code, may be punished with *[imprisonment for life].

* Subs. by Act 26 of 1955, sec.117 and sch., for "transportation for life" (w.e.f.1-1-1956). 

 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

தினம் ஒரு சட்டம் - இயற்கைக்கு மாறான முறையில் உடலுறவு செய்ந்தால்

இ.த.ச 377

      யாரேனுமொருவர் மற்றொரு ஆண், பெண் அல்லது விலங்கினத்துடன் இயற்கைக்கு விரோதமாகப் புணர்வது குற்றமாகும்

 இந்தக் குற்றத்திற்கு ஆயுள்தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையில் கூடிய சிறைக் காவல் தண்டனை அத்துடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் .

Section 377- Unnatural offences

    Whoever voluntarily has carnal intercourse against the order of nature with any man, woman or animal, shall be punished with *[imprisonment for life], or with imprisonment of either description for term which may extend to ten years, and shall also be liable to fine.

Explanation. -Penetration is sufficient to constitute the carnal intercourse necessary to the offence described in this section.

* Subs. by Act 26 of 1955, sec.117. and sch., for "transportation for life" (w.e.f. 1-1-1956). 
 
 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

Monday 22 February 2016

தினம் ஒரு சட்டம் - பொய்யாக கணக்கு எழுதினால்

இ.த.ச 477அ -

          யாராவது, ஒருவர் மற்றோருவருடைய கணக்கராகவோ அல்லது அலுவலராகவோ அல்லது வேலைக்காராகவோ அல்லது பணியாளாகவோ அல்லது மேற்குறிய நிலையில் பணிச் செய்பவராக இருந்து தன் முதலாளி அல்லது அலுவலகத்திற்கு உரிய ஒரு ஆவணத்தில் அல்லது கணினி ஆவணத்தில் அல்லது புத்தகத்தில் அல்லது தாளில் அல்லது எழுத்தில் அல்லது விலைமதிப்புள்ள காப்பிட்டில் அல்லது கணக்கு புத்தகத்தில் பொய்யாக ஒரு சேர்க்கையை உட்புகுத்துவதும் அல்லது உட்புகுத்துவதற்கு உடந்தையாக இருப்பதும் அல்லது ஒரு வரவு செலவு கணக்கு அல்லது அது தொடர்பான மேற்கூறிய ஒரு ஆவணத்தில் அழிப்பதும் , திருத்துவதும், உருமாற்றம் செய்வதும் அல்லது பொய்யாக்குவதும் குற்றமாகும். மேலும் எழுத வேண்டியதை எழுதாமல் இருப்பதும் அல்லது விட்டுவிடுவதும் அல்லது அத்தகைய செயலுக்கு உடந்தையாக இருப்பதும் குற்றமாகும்.

Section 477-A- Falsification of accounts

*Whoever, being a clerk, officer or servant, or employed or acting in the capacity of a clerk, officer or servant, willfully, and with intent to defraud, destroys, alters, mutilates or falsifies any **[book, electronic record, paper, writing], valuable security or account which belongs to or is in the possession of his employer, or has been received by him for or on behalf of his employer, or willfully, and with intent to defraud, makes or abets the making of any false entry in, or omits or alters or abets the omission or alteration of any material particular of any material particular form or in, any such **[book, electronic record, paper, writing], valuable security or account, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, or with fine, or with both.

விளக்கம் - இந்தப் பிரிவில் யாரை அவர் ஏமாற்ற இவ்வாறு செய்கின்றார் என்றோ அல்லது எத்தகைய தொகையினை அதன் மூலம் அவர் ஏமாற்றுவதற்கும் வஞ்சிப்பதற்கும் ஏற்பாடு செய்ந்துள்ளார் என்று கூறிப்பிட வேண்டும் என்பது தேவையில்லை, பொதுவாக இத்தகைய செயலின் மூலம் ஏமாற்றும் கருத்து உள்ளது என்பதை குறிப்பிட்டாலே இந்த பிரிவின் கீழ் அடங்கும்.

Explanation-It shall be sufficient in any charge under this section to allege a general intent to defraud without naming any particular person intended to be defraud without naming any particular person intended to be defrauded or specifying any particular sum of money intended to be the subject of the fraud, or any particular day on which the offence was committed.]

* Added by Act 3 of 1895, sec. 4.

** Ins. By Information Technology Act, 2000 (Sch. 1). W.E.F. 17-10-2000. 
 http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1938

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

Sunday 21 February 2016

தினம் ஒரு சட்டம் - ஒரு உண்மையான ஆவணத்தை அழிக்க அல்லது உருக்கலைக்க நினைத்தால்

இ.த.ச 477

      யாராவது, பிறரை ஏமாற்றி வஞ்சிக்க வேண்டும் என்று நேர்மையின்றி தனிப்பட்ட ஒருவரையோ அல்லது பொதுமக்களையோ ஏமாற்றவேண்டும் என்று கருத்துடனும் அல்லது எண்ணத்துடனும், 

    ஒரு ஆவணத்தை அல்லது உயிலை அல்லது தத்து எடுக்கும் அதிகாரம் அல்லது மதிப்புள்ள காப்பீட்டை ரத்து செய்வதும் அல்லது அழிப்பதும் அல்லது உருக்குலைப்பதும் அல்லது மறைப்பதும் அல்லது ரத்து செய்வதற்கும் அல்லது அழிப்பதற்கும் அல்லது உருக்குலைப்பதற்கு முயற்சி செய்வதும் குற்றமாகும்.

      இந்தக் குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துதண்டனையாக விதிக்கப்படும்.

Section 477- Fraudulent cancellation, destruction, etc., of will, authority to adopt, or valuable security
 
    Whoever fraudulently or dishonestly, or with intent to cause damage or injury to the public or to any person, cancels, destroys or defaces, or attempts to cancel, destroy or deface, or secretes or attempts to secrete any document which is or purports to be a will, or an authority to adopt a son, or any valuable security, or commits mischief in respect of such document, 

    shall be punished with *[imprisonment for life], or with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.

* Subs. by Act 26 of 1955, sec. 117 and sch., for "transportation for life" (w.e.f. 1-1-1956)

http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1937

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

தினம் ஒரு சட்டம் - பொய் ஆவணங்களுக்கு தேவையான பொருட்களை வைத்திருந்தால் - 2

இ.த.ச 476 - பொய் ஆவணங்களுக்கு தேவையான பொருட்களை வைத்திருந்தால் இ.த.ச பிரிவு 467 கீழ் அன்றி

   யாராவது பொய்யாக உருவாக்கப்பட்ட ஒரு ஆவணத்திற்கு அல்லது கணினி சம்பந்தப்பட்ட ஆவணத்திற்கு அதிகாரப் பூர்வமாக உண்மையானது என தேவையான அச்சுகளையோ அல்லது வார்ப்புகளையோ அல்லது குறியீடுகளையோ போலியாக பதிப்பதும் அந்த ஆவணம் இ.த.ச பிரிவு 467 ஆவது பிரிவில் விளக்கப்பட்டுள்ள முறையில் அன்று வேறு ஒரு ஆவணத்தை பொய்யாக உருவாக்கி அதனை உண்மையான ஆவணமாக பயன்படுத்த வேண்டும் என்று உருவாக்குவதும் குற்றமாகும்,  

   அதற்கு தேவையான சாதனங்களையும், பொருட்களையும், குறியீடுகளை தம்வசம் வைத்திருப்பதும் அத்தகைய கருத்துடனும் எண்ணத்துடனும் வைத்திருப்பது குற்றமாகும்.

  இந்தக் குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் தண்டனை அத்துடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

Section 476- Counterfeiting device or mark used for authenticating documents or electronic record other than those described in Section 467, or possessing counterfeit marked material

   Whoever counterfeits upon, or in the substance of, any material, any device or mark used for the purpose of authenticating any *[document or electronic record], other than the documents described in Section 467 of this Code, intending that such device or mark shall be used for the purpose of giving the appearance of authenticity to any document or electronic record* then forged or thereafter to be forged on such material, or who with such intent, has in his possession any material upon or in the substance of which any such device or mark has been counterfeited, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.

1. Subs. by Act 21 of 2000, sec. 91 and Sch. I, for "any document" (w.e.f. 17-10-2000). 

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

Saturday 20 February 2016

தினம் ஒரு சட்டம் - பொய் ஆவணங்களுக்கு தேவையான பொருட்களை வைத்திருந்தால் - 1

இ.த.ச 475

   யாராவது பொய்யாக உருவாக்கப்பட்ட ஒரு ஆவணத்திற்கு அல்லது கணினி சம்பந்தப்பட்ட ஆவணத்திற்கு தேவையான அச்சுகளையோ அல்லது வார்ப்புகளையோ அல்லது குறியீடுகளையோ போலியாக பதிப்பதும் அந்த ஆவணம் இ.த.ச பிரிவு 467 ஆவது பிரிவில் விளக்கப்பட்டுள்ள ஒர் ஆவணத்தை பொய்யாக உருவாக்கி அதனை உண்மையான ஆவணமாக பயன்படுத்த வேண்டும் என்று உருவாக்குவது குற்றமாகும்,  

   அதற்கு தேவையான சாதனங்களையும், பொருட்களையும், குறியீடுகளை தம்வசம் வைத்திருப்பதும் அத்தகைய கருத்துடனும் எண்ணத்துடனும் வைத்திருப்பது குற்றமாகும்.

  இந்தக் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல தண்டனை அத்துடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

Section 475- Counterfeiting device or mark used for authenticating documents described in Section 467, or possessing counterfeit marked material

     Whoever counterfeits upon, or in the substance or, any material, any device or mark used for the purpose of authenticating any document described in Section 467 of this Code, intending that such device or mark shall be used for the purpose of giving the appearance of authenticity to any document then forged or thereafter to be forged on such material, or who, with such intent, has in his possession any material upon or in the substance of which any such device or mark has been counterfeited, 

    shall be punished with *[imprisonment for life], or with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.

* Subs. by Act 26 of 1955, sec. 117 and sch., for "transportation for life" (w.e.f. 1-1-1956). 

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

தினம் ஒரு சட்டம் - பொய்யான ஆவணங்களை உண்மையான ஆவணமாக பயன்படுத்த வைத்திருந்தால்

இ.த.ச 474

      யாராவது, பொய்யாக உருவாக்கப்பட்ட ஒரு ஆவணத்தை அல்லது ஒரு பொய்யான கணினி சம்பந்தப்பட்ட ஆவணத்தை,  அத்தகைய ஆவணம் பொய்யாக உருவாக்கப்பட்டது என்று தெரிந்தும் பிறரை வஞ்சிக்க வேண்டும் அல்லது ஏமாற்ற வேண்டும் என்று கருத்துடனும் அல்லது எண்ணத்துடனும் வைத்திருப்பது குற்றமாகும்.

    அத்தகைய ஆவணம் இ.த.ச பிரிவு 466 வது பிரிவின் கீழ் கூறப்பட்டுள்ள ஆவணமாக இருப்பின், அதனை தம் பொருப்பில் வைத்திருப்பவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

அல்லது

    அத்தகைய ஆவணம் இ.த.ச பிரிவு 467 வது பிரிவின் கீழ் கூறப்பட்டுள்ள ஆவணமாக இருப்பின், அதனை தம் பொருப்பில் வைத்திருப்பவருக்கு ஆயுள் தண்டனை வரை சிறைக்காவலுடன்  அபராதமும்  அல்லது ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

Section 474- Having possession of document described in Section 466 or 467, knowing it to be forged and intending to use it as genuine

     *[Whoever has in his possession any document or electronic record, knowing the same to be forge, and intending that the same shall fraudulently or dishonestly be used as genuine, shall, if the document or electronic record, is one of the description mentioned in section 466 of this Code], be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine; and if the document is one of the description mentioned in section 467, shall be punished with **[imprisonment for life], or with imprisonment of either description, for a term which may extend to seven years, and shall also be liable to fine.

* Subs. by Act 21 of 2000, sec. 91 and Sch. I, for certain words (w.e.f. 17-10-2000).

** Susb. by Act 26 of 1955, sec. 117 and Sch., for "transportation for life" (w.e.f. 1-1-1956). 

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.
 
Wednesday 17 February 2016

தினம் ஒரு சட்டம் - போலி முத்திரைகளை உருவாக்குவதும் வைத்திருப்பதும் குற்றமாகும் - 2

இ.த.ச 473

         யாராவது , போலியாக ஒரு முத்திரை, தகடு அல்லது அது சம்பந்தப்பட்ட எந்த கருவியை உருவாக்கினாலும், அது அவருக்கு நன்றாக தெரியும் ஒரு ஏமாற்றுவதற்கும் அல்லது வஞ்சிப்பதற்கும் பயன்படுத்தடுகிறது அல்லது பயன்படுத்தக்கூடும் என்ற கருத்துடனும் அல்லது எண்ணத்துடனும் தயாரிக்கப்படுகின்றது அல்லது அச்சிடப்படுகின்றது இது குற்றமாகும். 

         இந்தக் குற்றம் இ.த.ச பிரிவு 467 ன் கீழ் தண்டிக்கப்படும். அவ்வாறு இந்தக் குற்றம் இ.த.ச பிரிவு 467 ன் கீழ் கூறப்பட்டதைப் போல் இல்லாமல் வேறு பிரிவின் கீழ் தண்டிக்கப்பட கூடிய காரணங்களுக்காக அதை உருவாக்குவதும் அல்லது போலியாக உருவாக்கப்பட்ட பொருள் என தெரிந்தும் தம் வசம் வைத்திருப்பதும் குற்றமாகும்.
 
        இதற்கு  ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

Section 473- Making or possessing counterfeit seal, etc., with intent to commit forgery punishable otherwise

      Whoever makes or counterfeit any seal, plate or other instrument for making an impression, intending that the same shall be used for the purpose of committing any forgery which would be punishable under any section of this Chapter other than Section 467, or, with such intent, has in his possession any such seal, plate or other instrument, knowing the same to be counterfeit, 

      shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine. 

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

தினம் ஒரு சட்டம் - போலி முத்திரைகளை உருவாக்குவதும் வைத்திருப்பதும் குற்றமாகும்

இ.த.ச 472

         யாராவது , போலியாக ஒரு முத்திரை அல்லது தகடு அல்லது அது சம்பந்தப்பட்ட எந்த கருவியை உருவாக்கினாலும், அது அவருக்கு நன்றாக தெரியும் ஒரு ஏமாற்றுவதற்கும் அல்லது வஞ்சிப்பதற்கும் பயன்படுத்த கூடும் அல்லது பயன்படுத்தபடும் என்ற கருத்துடனும் அல்லது எண்ணத்துடனும் தயாரிக்கப்படுகின்றது அல்லது அச்சிடப்படுகின்றது இது குற்றமாகும். இந்தக் குற்றம் இ.த.ச பிரிவு 467 ன் கீழ் தண்டிக்கப்படும்.

அதாவது

இந்தக் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துதண்டனையாக விதிக்கப்படும்.

மேலும்  அவ்வாறு போலியாக உருவாக்கப்பட்ட பொருள் என தெரிந்தும் அந்த பொருளை அல்லது முத்திரை அல்லது தகடை பிறரை  ஏமாற்றுவதற்கும் அல்லது வஞ்சிப்பதற்கும் தம் வசம் வைத்திருப்பதும் குற்றமாகும் 

      இதற்கு ஆயுள் சிறைத்தண்டனை அல்லது ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் தண்டனையுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

Section 472- Making or possessing counterfeit seal, etc., with intent to commit forgery punishable under section 467

    Whoever makes or counterfeits any seal, plate or other instrument for making an impression, intending that the same shall be used for the purpose of committing any forgery which would be punishable under Section 467 of this Code, 

   or, with such intent, has in his possession any such seal, plate or other instrument, knowing the same to be counterfeit, shall be punished with *[imprisonment for life], or with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.

* Subs. by Act 26 of 1955, sec. 117 and sch., for "transportation for life" (w.e.f. 1-1-1956). 

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

Tuesday 16 February 2016

தினம் ஒரு சட்டம் - பொய்யான ஆவணத்தை மோசடியாக பயன்படுத்தினால்

இ.த.ச 471

யாராவது, ஒரு பொய்யான ஆவணத்தை அல்லது கணினி சம்பந்தப்பட்ட ஆவணத்தை அது பொய்யானது எனத் தெரிந்தும் நேர்மையின்றி அல்லது மோசடி செய்யவேண்டும் என்ற எண்ணத்துடனும் கருத்துடனும் அதனை ஒரு உண்மையான ஆவணமாக பயன்படுத்துபவருக்கு, அந்த ஆவணத்தை பொய்யாக உருவாக்கியவருக்கு வழங்கப்படும் தண்டனையே விதிக்கப்படும்.

அதாவது ஒரு ஆவணத்தை பொய்யாக உருவாக்கினால் பின் வரும் சாரத்தை படிக்கவும்...

இ.த.ச 468

     யாராவது ஒருவர் , அடுத்தவரை ஏமாற்றி வஞ்சிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் கருத்துடனும் போலியாக ஒரு ஆவணத்தை உருவாக்கி அவரை வஞ்சிக்கப்பட வேண்டும் என்ற கருத்துடன் ஆவணம் உருவாக்குபவருக்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் தண்டனையுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

Section 471- Using as genuine a forged document or electronic record

   Whoever fraudulently or dishonestly uses as genuine any *[document or electronic record] which he knows or has reason to believe to be a forged **[document or electronic record], shall be punished in the same manner as if he had forged such **[document or electronic record].

* Subs. by Act 21 of 2000, sec. 91 and Sch. I, for "document" (w.e.f. 17-10-2000).

** Subs. by Act 21 of 2000, sec. 91 and Sch. I, for "document forged" (w.e.f. 17-10-12000) 