Monday 31 July 2017

இ.த.ச 510 - போதையில் பொது இடங்களில் தவறாக நடந்தால்



இ.த.ச 510



    யாராவது , குடி போதையில் பொது இடத்தில் நடமாடுவதும் அல்லது போதையில் அத்தகைய நபர் செல்லக்கூடாது என்று இருக்கும் ஒரு இடத்திற்குள் அத்துமீறி செல்வதும் மேலும் அத்தகைய போதையில் பிறருக்கு சங்கடமான நிலையை உண்டாக்குவதும் குற்றமாகும்.

     இத்தகைய குற்றத்தைப் புரிந்த அந்த நபருக்கு இருபத்தி நான்கு மணி நேரம் வெறுங்காவல் அல்லது பத்து ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும்.


Section 510- Misconduct in public by a drunken person



    Whoever, in a state of intoxication, appears in any public place, or in any place, or in any place which it is a trespass in him to enter, and there conducts himself in such a manner as to cause annoyance to any person, 

      shall be punished with simple imprisonment for a term which may extend to twenty-four hours, or with fine which may extend to ten rupees, or with both.


http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1977


பொறுப்புறுதி - இந்த பகுதியில் உள்ள சட்ட விளக்கங்களை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும், இது பொது மக்களின் நலன் கருதி நல்ல எண்ணத்தின் அடிப்படையில் வெளியிடப்படுன்றது. அனைவருக்கும் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம். இதில் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    

Thursday 6 July 2017

இ.த.ச 498 - பிறருடைய மனைவியை கவர்த்தலும் மறைத்து வைத்தலும்



           யாராவது, பிறருடைய மனைவி அல்லது பிறருடைய மனைவி என்று அறிந்த ஒரு பெண்ணை அல்லது பிறருடைய மனைவி என்று உணர்வுவதற்கேற்ற வாய்ப்பிருந்தும் , 
         
            அந்தப் பெண்னை அவளுடைய கணவனிடமிருந்து அல்லது கணவன் சார்பில் பாதுக்காக்கும் ஒரு பொருப்புடையவரிடமிருந்து, 
     வேறு ஒருவருடன் முறைக்கேடான புணர்ச்சி செய்யும் பொருட்டு அழைத்து செல்வதும் அல்லது இச்சைக் காட்டி இழுத்து செல்வதும் குற்றமாகும்.

     அந்தப் பெண்னை அத்தகைய காரணத்துடன் மறைத்து வைப்பதும் , தடுத்து வைப்பதும் குற்றமாகும்.

      இந்தக் குற்றத்துக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக் காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.




Section 498- Enticing or taking away or detaining with criminal intent a married woma
n


        Whoever takes or entices away any woman who is and whom he knows or has reason to believe to be the wife of any other man, form that man, or from any person having the care of her on behalf of that man, with intent that she may have illicit intercourse with any person, or conceals or detains with that intent any such woman,

        shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both. 
 
நன்றி - 
 
படம்1-http://mahabharatham.arasan.info/2014/09/Mahabharatha-Vanaparva-Section276.html
படம்2-https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikEmBV1TmyZb5ah-WwsRq3Ej6Z5IvvJgC6bkn-3lPjXzeWin7qOogcfQ13b5LO4p99JlhgqSwj1u_utWsmr-SIQrF8NDaCwUQZMAPEFLkzFIDxtMLrZaN98iU_xok3969qu9ZnrOCKLxF3/s1600/jtpbmh.jpg



 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    பொது மக்களின் நலன் கருதி நல்ல எண்ணத்தின் அடிப்படையில் வெளியிடுகின்றேன்.