Thursday, 28 September 2017

இ.த.ச 166 - பொது ஊழியர்களின் அத்துமீறுதல் குறித்துஇ.த.ச 166 -


அரசு பணியில் இருப்பவர்கள் அரசு நடத்தை விதிகளை கவனமாக கடைபிடித்து வர வேண்டும்.

அவ்வாறு அரசு பணியில் இருக்கும் பொது ஊழியர் பிறருக்கு தீங்கு உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் அல்லது தீங்கு நேரிடும் என்று தெரிந்தும் அரசு விதித்த வரைமுறைகளை மீறிச் செயல்படுவது குற்றமாகும்

அவ்வாறு

கடமையில் தவறினால் இ.த.ச. 166 - ன் கீழ் ஒரண்டு வரை அல்லது அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

166. Public servant disobeying law, with intent to cause injury to any person.—

Whoever, being a public servant, knowingly diso­beys any direction of the law as to the way in which he is to conduct himself as such public servant, intending to cause, or knowing it to be likely that he will, by such disobedience, cause injury to any person, shall be punished with simple imprisonment for a term which may extend to one year, or with fine, or with both.


Illustration
---------------
A, being an officer directed by law to take property in execu­tion, in order to satisfy a decree pronounced in Z’s favour by a Court of Justice, knowingly disobeys that direction of law, with the knowledge that he is likely thereby to cause injury to Z. A has committed the offence defined in this section.நன்றி பொது மக்களின் நலன் கருதியும் சட்ட கருத்து சென்றடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் வெளியிடுகின்றேன்.

Sunday, 10 September 2017

இளைஞர்களின் கனவுகளை சிதைக்காதிர்கள் ...நீட் வேண்டாம் ...Juvenile Justice (Care and Protection of Children) Act, 2015 படி சரியா.

மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதியவன் என்ற முறையில் ..மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதியவன் என்ற முறையில் ..ருடம் நுழைவுத் தேர்வு எழுத சென்றேன் அப்போது இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் தாவரயியல் கேட்கப்பட்ட பாதிக்கு மேற்ப்படட வினாக்கள் அனைத்தும் நாங்கள் படிக்காத வினாக்கள் எங்கள் பாட புத்தகத்திலும் இல்லை மேலும் நுழைவுத் தேர்வுக்கு என விற்கப்பட்டு என்னால் வாங்கப்பட்ட புத்தகத்திலும் இல்லை அவைகள் பெரும்பாலும் CBSE & ICSE பாட புத்தகத்திலிருந்து வந்தது என வெளியே வந்த பின்பு அந்த உயர்தர வசதி படைத்த மாணவர்களிடமிருந்து தெரிந்துக் கொண்டேன்.
ஏன் +2 மாணவர்களிடம் உங்கள் கொடுரம் அதிகாரம் ... 

தயவு செய்து இளைஞர்களின் கனவுகளை சிதைக்காதிர்கள் ...

சாது மிரண்டால் காடு கொள்ளாலாது ... காடே இந்த நிலை என்றால் ...

6ம் வகுப்பிலிருந்து பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் ... அது படிப்படியாக 7,8,9,10,11,12 என ஒவ்வொரு வருடமும் புதிய பாடத்திட்டம் அடுத்தடுத்து அறிமுகப்படுத்த வேண்டும்.

பின்பு தான் NEET முறைப்படி அமல்படுத்த வேண்டும் ... ஒரு குழந்தை எழுந்து நடக்க வேண்டும் என்றால் குறைந்தது 2 வருடம் ஆகும் அதைப் போல தான் நீட்டை உடனடியாக அமல்படுத்த கூடாது.
மேலும் நீட்டினால் வெளிப்படைத்தன்மை உண்டா என பார்க்க வேண்டும், வாக்களிக்கும் எந்திரத
பொதுவாக குழந்தைப் பிறந்து நடக்க வேண்டும் என்றால் 2 வருடம் ஆகும் பிறந்த குழந்தையை உடனடியாக நடக்க வைக்க வேண்டும் என்பது தவறானதாகும்.

மேலும் 18 வயது குறைந்தவர்களை நாம் இன்னும் Juveniles என்றே பார்க்கின்றோம், அவர்களின் சட்ட மீறுதல் மன்னிக்கப்படுகின்றது, இது உலகம் தோறும் உள்ள வழக்கம் அவர்களின் மீது நாம் சட்டத்தை புகுத்துவது தவறான சட்ட நடவடிக்கை.

இதை மத்திய மாநில அரசுகள் புரிந்துக் கொள்ள வேண்டும் ... 

என நீட்டை மத்திய மாநில அரசுகள் அமல்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

மேலும் நீட்டைப்பற்றிய புரிதலையும் உண்மையையும் உரக்க சொல்லவேண்டும். வாக்களிக்கும் எந்திரத்தின் உண்மை தன்மையை இன்றுவரை கானல் நீராக உள்ளது இதில் எப்படி நீட் மூலம் மாணவர்களின் எதிர்காலம் நிர்ணயிக்கலாம்.

பொது மக்களின் நலன் கருதி நல்ல எண்ணத்தின் அடிப்படையில்.,....

Wednesday, 6 September 2017

உரிமையியல் நடைமுறைச் சட்டம் - வழக்குரை, சம்மன் தொடர்பாகSec - 26,27 & 28 Of Civil Procedure Code 1908-


Sec - 26) வழக்கு தொடர்பாக -

எல்லா உரிமையியல் வழக்குகளும் வழக்குரையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதன் மூலமாகவோ அல்லது எவ்வாறு வழக்கு தொடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதோ அதன் மூலம் நீதிமன்றத்தில் தொடுக்க வேண்டும்.

Every suit shall be instituted by the presentation of a plaint or in such other manner as may be prescribed. 

Sec - 27) பிரதிவாதிக்கு - சம்மன் அனுப்புதல் தொடர்பாக

வழக்கானது நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பின்பு, சம்மன் என்ற வழக்கின் சங்கதி குறித்த ஆவணத்தை பிரதிவாதிகளுக்கு அனுப்பபடவேண்டும் , சம்மன் எவ்வாறு அனுப்பபட வேண்டும் என்பது கூறப்பட்டுள்ளதோ அவ்வாறு அனுப்ப பட வேண்டும் அதே நாளில் அல்லது வழக்கு தொடர்ந்தக 30 நாளுக்குள் பிரதிவாதிக்கு சம்மன் அனுப்பட வேண்டும்,

27. Summons to defendants .- Where a suit has been duly instituted, a summons may be issued to the defendant to appear and answer the claim and may be served in manner prescribed on such day not beyond thirty days from date of the institution of the suit..Sec - 28) பிரதிவாதி வேறு மாநிலத்தில் வசித்தால் எவ்வாறு சம்மன் அனுப்புவது.


ஒரு சம்மன் பிரதிவாதிக்கு அனுப்ப படும் போது அவர் வேறு மாநிலத்தில் வசித்து வந்தால் அந்த மாநிலத்தின் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுப்ப வேண்டும்.
மேலும் சம்மன் அனுப்ப படும் மாநிலத்தின் மொழியும் சம்மன் பெறப்படும் மாநிலத்தின் மொழியும் வெவ்வேறாக இருப்பின் அதனை அந்த மாநிலத்தின் மொழியில் மொழிமாற்றம் செய்ய வேண்டும்.

அந்த மாநில நீதிமன்றத்தின் ஆட்சி மொழி இந்தியாக இருப்பின் இந்தி அல்லது
இந்தி அல்லது ஆங்கிலமா இருப்பின் இந்தி அல்லது ஆங்கிலமாகவோ அந்த சம்மனையும் வழக்குரையைும் மொழிமாற்றம் செய்து அனுப்ப வேண்டும்

28. Service of summons where defendant resides in another state .- (1) A summons may be sent for service in another State to such court and in such manner as may be prescribed by rules in force in that State.

(2) The Court to which such summons is sent shall, upon receipt thereof, proceed as if it had been issued by such court and shall then return the summons to the court of issue together with the record (if any) of its proceedings with regard thereto.

(3) Where the language of the summons sent for service in another State is different from the language of the record referred to in sub-section (2), a translation of the record,

(a) in Hindi, where the language of the court issuing the summons is Hindi, or (b) in Hindi or English where the language of such record is other than Hindi or English,
shall also be sent together with the record sent under that sub-section. ஒப்புறுதி - இந்த விளக்கம் பொது மக்களின் நலன் கருதி நல்ல எண்ணத்தின் அடிப்படையில் , சட்டத்தை எளிய தமிழில் விளக்கும் விதமாக அனுப்புகிறேன். மேலும் இதை மட்டும் எடுத்துக்கொள்ள கூடாது, வழக்குரியதல்ல.

Saturday, 2 September 2017

நீட் குறித்த ஒரு முக்கிய புரிதல்


    நண்பர் ஒருவர் கூறுகையில் குறைந்தபட்சம் ஓராண்டு விலக்கு அளித்துருந்தால் கூட இந்த மரணம் நிகழ்ந்து இருக்காதே. என கருத்து தெரிவித்தார்கள்.

ஒராண்டு இல்லை 10 ஆண்டுகள் வரை விலக்கு அளித்தாலும் நம்முடைய மாணவர்களால் நீட்டை எதிர் கொள்ள முடியாது ஏனேன்றால் நமது நாட்டில்

மாநில கல்விமுறை - State Syllabus , CBSE Syllabus, ICSE Syllabus என உள்ளது இந்த CBSE மற்றும் ICSE Syllabus களில் மாநில கல்வி முறையை விட இரண்டு வருடம் முன்னிலை வகிக்கின்றார்கள்.

அதாவது நம்முடைய மாநில கல்விமுறையில் 10ம் வகுப்பு படிப்பவர்களுக்கு மற்ற கல்விமுறையில் படிப்பவர்கள் 11 மற்றும் 12ம் வகுப்பு கல்விமுறை பயிற்றுவிக்கப் படுகின்றது.

நம்முடைய மாநில கல்விமுறையில் 12ம் வகுப்பு படிப்பது சற்றே பின்தங்கியது, அந்த நிலையில் CBSE மற்றும் ICSE Syllabus களில் கல்வி பயிலுபவர்கள் கல்லூரிக்கு இணையாக முதலாம் ஆண்டு பாடத்திட்டற்கு ஈடாக இருக்கும்.

ஆகையால் அவர்களுக்கு கேட்கப்படும் கேள்வி எளிதாக இருக்கும் இதனால் அவர்களால் எளிதாக NEET, COMET, NIIT, CET போன்ற தேர்வுகளை எளிதாக அனுகவும் வெற்றிப் பெறவும் முடிகின்றது.

காலம் காலமாக தமிழில் படிக்கும் நம்மால் இதை எப்படி எதிர் கொள்ளமுடியும்,
 

அதற்கான ஒரே தீர்வு இந்தியா முழுவதும் ஒரே விதமான பாடதிட்டத்தை கொண்டு வரவேண்டும், அப்போது தான் இந்த நிலையை களைய முடியும் அதுவும், 6 அல்லது 8ம் வகுப்பு முதல் அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டு அவர்கள் 12ம் வகுப்பு வந்தப்பின்பு தான் இந்த NEET தேர்வை அறிமுகப்படுத்த வேண்டுமே ஒழியே உடனே அடுத்த வருடம் அல்லது இரண்டு வருடம் கழித்து என அறிமுகப்படுத்த முடியாது.

மேலும் Choose the Best Answer போன்ற தேர்ந்த எடுக்கும் விடையை அளித்தால் அதனை சிலர் கள்ள சந்தையில் விற்று காசும் பார்க்கும் நிலை உள்ளது ஆகையால் தேர்வு முறையில் அவர்களின் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் Entrance Test மார்க் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் .

ஏன் என்றால் பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் தகிடுதத்தம் செய்தும், கம்யூட்டரை கவனித்தும் மார்க் எடுத்துவிடுகின்றார்கள் ஆனால் உண்மையில் கஷ்டப்பட்டு படிக்கும் ஏழைமாணவர்களுக்கு மருத்துவம், என்.ஆய்டி போன்ற படிப்புகள் எட்டா கனியாக உள்ளது.

இதனை தயவு செய்து மத்திய மாநில் அரசுகள் கவனத்தில் எடுத்து, உடனடியாக நீட்டை அமல் படுத்தாமல் மாநில பாடதிட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தி பின்பு இத்தகைய தேர்வை நடத்தட்டும்.

எல்லா இடத்தையும் யார் பிடிக்கின்றார்கள் என பார்ப்போம், கடல் திமிங்கிலத்தை குளத்து மீனுடன் போட்டி போட முடியுமா .....?

போட்டி தேர்வுகள் பொதுவாக பொட்டி தேர்வாகவே இருக்கின்றது ... பணம் தான்..

As per reports, a total of 11, 38,890 students registered for this examination including 1522 NRIs, 480 OCIs, 70 PIOs and 613 Foreigners. This exam was conducted in 10 languages at 1921 exam centres in 103 cities. thanks to http://indiatoday.intoday.in/education/story/neet-paper-leak-2017/1/948271.html

     பொது மக்களின் நலன் கருதி நல்ல எண்ணத்தின் அடிப்படையில் வெளியிடுகின்றேன். அதிகம் பகிரவும்.

Wednesday, 9 August 2017

இ.த.ச 354D - பெண்களை தவறான முறையில் பின்தொடர்தல்(Stalking)(1) - எந்த மனிதராவது அவர்

1 - ஒரு பெண்னை பின் தொடர்வதும் அல்லது தொடர்புக் கொள்வதும் அல்லது அவரை தொடர்புக் கொள்ள முயற்சிப்பதும் அல்லது தம்முடைய விருப்பத்தை தினிக்கும்படி அவரை பின்தொடர்வதும் அவருக்கு விருப்பம் இல்லாமல் இருந்தும் அவருக்கு வேண்டியதை செய்வதும்.

2 - ஒரு பெண்ணின் சம்மதமின்றி அவருடைய இன்டர்நெட் வசதி அல்லது மின்னஞ்சல், அல்லது அவருடைய தனிப்பட்ட மின் சாதன தொடர்புகளை கண்கானிப்பதும் பெண்களை தவறான முறையில் பின்தொடர்தல்(Stalking) என்ற குற்றமாகும்.மேல் சேர்க்கைக்காக ஒரு ஆணை பின் தொடர ஒரு அரசால் ஆனையிப்பட்டு அதனால் அந்தப் பெண்னை பின்தொடர்வது இந்தப் பிரிவின் கீழ் குற்றமாகாது.

(i) -- ஒரு மனிதர் சட்டப்படி நியமிக்கபட்ட அரசால் அல்லது அரசாங்கத்தால் அவ்வாறு ஒரு பெண்ணை பின் தொடர வேண்டும் ஒரு குற்றத்தை கண்டுப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதற்கு இனங்க அவரை பின் தொடர்வதும் அவரது மின் சாதன இனைப்புகளை பயன்படுத்துவதும் , மின் தொடர்புகருவிகளை பயன் படுத்துவதும் மின்னஞ்சலை பரிசோதிப்பதும் குற்றமாகாது அல்லது இந்தப் பிரிவு கட்டுப்படுத்தாது அல்லது.(ii) -- இந்தப் பிரிவானது ஒரு நிலுவையில் உள்ள சட்ட பிரிவின் கீழ் இவ்வாறு பின் தொடர்வது தவறில்லை என எந்த ஒரு சட்டத்தினாலும் அல்லது எந்த ஒரு நபரினாலும் சட்டப்படி ஆணையிடும் போது இந்தப் பிரிவு கீழ் அந்த பின் தொடர்வது அடங்காது. அல்லது

(iii) -- ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அத்தகைய பெண்னை தொடர்புக் கொள்வதும் அல்லது தொடர்புக் கொள்ள முயற்சிப்பதும் நியாயமானதும் சட்டப்படியானது எனக் கருதப்படும் போது குற்றமாகாது.


(2) முதன்முறையாக செய்யப்படும் இந்தக் குற்றத்துக்கு  மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்க கூடிய சிறைத்தண்டனையுடன் அபராதமும்,  தொடர்ந்து இதே குற்றத்தை இரண்டாவது அல்லது மூன்றாவது முறை செய்யும் பட்சத்தில் அவருக்கு மூன்று ஆண்டுகள் குறையாமல் அதிகப்பட்சம் ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்க கூ டிய சிறைத்தண்டனையுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.IPC 354D: Stalking1

(1) Any man who—
     
 1. follows a woman and contacts, or attempts to contact such woman to foster personal interaction repeatedly despite a clear indication of disinterest by such woman; or
 2.    

 3. monitors the use by a woman of the internet, email or any other form of electronic communication,commits the offence of stalking;
 Provided that such conduct shall not amount to stalking if the man who pursued it proves that—
     
 1. it was pursued for the purpose of preventing or detecting crime and the man accused of stalking had been entrusted with the responsibility of prevention and detection of crime by the State; or
 2.    
 3. it was pursued under any law or to comply with any condition or requirement imposed by any person under any law; or
 4.    
 5. in the particular circumstances such conduct was reasonable and justified.
 (2) Whoever commits the offence of stalking shall be punished on first conviction with imprisonment of either description for a term which may extend to three years, and shall also be liable to fine; and be punished on a second or subsequent conviction, with imprisonment of either description for a term which may extend to five years, and shall also be liable to fine.

1 Criminal Law (Amendment) Act, 2013


 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

Monday, 31 July 2017

இ.த.ச 510 - போதையில் பொது இடங்களில் தவறாக நடந்தால்இ.த.ச 510    யாராவது , குடி போதையில் பொது இடத்தில் நடமாடுவதும் அல்லது போதையில் அத்தகைய நபர் செல்லக்கூடாது என்று இருக்கும் ஒரு இடத்திற்குள் அத்துமீறி செல்வதும் மேலும் அத்தகைய போதையில் பிறருக்கு சங்கடமான நிலையை உண்டாக்குவதும் குற்றமாகும்.

     இத்தகைய குற்றத்தைப் புரிந்த அந்த நபருக்கு இருபத்தி நான்கு மணி நேரம் வெறுங்காவல் அல்லது பத்து ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும்.


Section 510- Misconduct in public by a drunken person    Whoever, in a state of intoxication, appears in any public place, or in any place, or in any place which it is a trespass in him to enter, and there conducts himself in such a manner as to cause annoyance to any person, 

      shall be punished with simple imprisonment for a term which may extend to twenty-four hours, or with fine which may extend to ten rupees, or with both.


http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1977


பொறுப்புறுதி - இந்த பகுதியில் உள்ள சட்ட விளக்கங்களை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும், இது பொது மக்களின் நலன் கருதி நல்ல எண்ணத்தின் அடிப்படையில் வெளியிடப்படுன்றது. அனைவருக்கும் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம். இதில் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    

Thursday, 6 July 2017

இ.த.ச 498 - பிறருடைய மனைவியை கவர்த்தலும் மறைத்து வைத்தலும்           யாராவது, பிறருடைய மனைவி அல்லது பிறருடைய மனைவி என்று அறிந்த ஒரு பெண்ணை அல்லது பிறருடைய மனைவி என்று உணர்வுவதற்கேற்ற வாய்ப்பிருந்தும் , 
         
            அந்தப் பெண்னை அவளுடைய கணவனிடமிருந்து அல்லது கணவன் சார்பில் பாதுக்காக்கும் ஒரு பொருப்புடையவரிடமிருந்து, 
     வேறு ஒருவருடன் முறைக்கேடான புணர்ச்சி செய்யும் பொருட்டு அழைத்து செல்வதும் அல்லது இச்சைக் காட்டி இழுத்து செல்வதும் குற்றமாகும்.

     அந்தப் பெண்னை அத்தகைய காரணத்துடன் மறைத்து வைப்பதும் , தடுத்து வைப்பதும் குற்றமாகும்.

      இந்தக் குற்றத்துக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக் காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
Section 498- Enticing or taking away or detaining with criminal intent a married woma
n


        Whoever takes or entices away any woman who is and whom he knows or has reason to believe to be the wife of any other man, form that man, or from any person having the care of her on behalf of that man, with intent that she may have illicit intercourse with any person, or conceals or detains with that intent any such woman,

        shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both. 
 
நன்றி - 
 
படம்1-http://mahabharatham.arasan.info/2014/09/Mahabharatha-Vanaparva-Section276.html
படம்2-http://4.bp.blogspot.com/-2znoyoxA4-c/URONmO26xkI/AAAAAAAAAcs/4m_oOrsPzlA/s1600/jtpbmh.jpg குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    பொது மக்களின் நலன் கருதி நல்ல எண்ணத்தின் அடிப்படையில் வெளியிடுகின்றேன்.