Friday 26 May 2017

விழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரத்தில் புதிய அரசு சட்ட கல்லூரிகள் : முதல்வர்






சென்னை : 2017-18ஆம் கல்வியாண்டு முதல் விழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் புதிய அரசு சட்ட கல்லூரிகள் துவங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , " தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் தற்போது 7 அரசு சட்டக் கல்லூரிகளும், ஒரு தனியார் சுயநிதி சட்டக் கல்லூரியும் இயங்கி வருகின்றன. அதுமட்டுமின்றி, திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்ட தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியை ஜெயலலிதா திறந்து வைக்கப்பட்டது.

விழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் அதன் அருகாமையிலுள்ள பிற மாவட்டங்களைச் சேர்ந்த சட்டம் பயில விரும்பும் மாணவர்களுக்கு சட்டம் பயில அரசு சட்டக் கல்லூரி ஏதுவும் இல்லையென்பதால், இம்மாவட்டங்களைச் சேர்ந்த தகுதிவாய்ந்த மாணவர்கள் சட்டம் பயில்வதற்கு ஏதுவாக விழுப்புரம், தருமபுரி மற்றும் இராமநாதபுரத்தில் புதிதாக ஒரு அரசு சட்டக் கல்லூரி 2017-18ஆம் கல்வியாண்டு முதல் துவங்கப்படும்.

விழுப்புரம், தருமபுரி மற்றும் இராமநாதபுரம் ஆகிய நகரங்களில் துவக்கப்படும் இப்புதிய அரசு சட்டக் கல்லூரிகளில் 2017-18ஆம் கல்வியாண்டு முதல் 3 ஆண்டு சட்டப் படிப்பிற்கு முதலாம் ஆண்டில் 80 மாணவர்களுடனும், 5 ஆண்டு சட்டப் படிப்பிற்கு முதலாம் ஆண்டில் 80 மாணவர்களுடனும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.


இப்புதிய அரசு சட்டக் கல்லூரிகள் நிறுவுவதற்கான ஆரம்பக் கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ஒரு தனி அலுவலர் ஒவ்வொரு கல்லூரிக்கும் நியமிக்கப்படுவார்கள். மேற்குறிப்பிட்ட மூன்று புதிய அரசு சட்டக் கல்லூரிக்கு தேவையான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியிடங்கள், நூலகப் புத்தகங்கள், அறைகலன்கள் மற்றும் இதர தேவைகளுக்கு தலா ஒரு சட்டக் கல்லூரிக்கு 2 கோடியே 27 இலட்சம் ரூபாய் வீதம், 3 அரசு சட்டக் கல்லூரிக்கு, மொத்தம் 6 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவினம் ஏற்படும்." என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Thanks - http://tamil.samayam.com/…/three-n…/articleshow/58851648.cms

படம் - தினகரன் நாளிதழ்

Ignorantia juris non excusat




Ignorantia juris non excusat - "ignorance of law excuses no one"

அதாவது எனக்கு சட்டம் தெரியவில்லை என்பதை ஒரு காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறது முதுமொழி...

சட்டம் படிப்போம் சமுக இருளை போக்குவோம்...

சட்டம் படிப்போம் சமுக அவலம் போக்குவோம், பல ஆயிரம் செலவு செய்து டாக்டர் , இஞ்சினியர் படிப்பதை விட சட்டம் படித்தால் நமது வருங்காலம் மட்டுமே சிறப்பாக இருக்கும்... 





சட்டம் படிப்பது நமது வருமானத்திற்காக அல்ல மக்களின் எதிர்கால வாழ்க்கைக்காக ...
மக்கள் சட்டம் தெரியாமல் அவதிபடுவது கொஞ்சம் நஞ்சம் இல்லை, புகார் கொடுத்தால் அவன் மீதே குற்றம் சாட்டப்படும், எதிர்த்து கேட்டால் எதிரியைபோல பார்ப்பார்கள்... கூனி குனிந்தது போதும்

சட்டம் படிப்போம் ... அறியாமையை போக்குவோம்...

நீதிக்காகவும் நியாத்திற்காக போராடவும் ... சட்டம் தெரியவேண்டும் .... ஆகையால் ஏனோ ஒரு பட்டம் படிக்க வேண்டும் என்பதை விட சட்டம் படித்துவிட்டு தெளிவாக இருக்காலாம்..

பயத்திற்கான மூல காரணம் அறியாமையும் தவறுமே
சட்டம் படிப்போம் சமுக இருளை போக்குவோம்...

சட்டம் படிப்போம் சமுக இருளை போக்குவோம்...



Wednesday 17 May 2017

இலவச கல்வி சட்டம் தொடர்பான



இணையத்திலிருந்து பெறப்பட்டது, மக்களின் நலனுக்காக நல்ல எண்ணத்தின் அடிப்படையில் வெளியிடுகின்றேன்.


 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.