Saturday 23 January 2016

தினம் ஒரு சட்டம் - தாக்குதலும், வன்முறைத் தாக்குதலும் அதற்கான தண்டனைகளும்


இ.த.ச 352 : தாக்குதலும், வன்முறைத் தாக்குதலும் அதற்கான தண்டனை

யாராவது பிறரைத் தாக்க முனைந்தாலும், வன் முறைத் தாக்குதலில் ஈடுப்பட்டாலும் குற்றமாகும். (ஒருவர் திடிரென கோபமுட்டபட்ட நிலையில் அதனைப் புரிவது இந்தப் பிரிவின் கீழ் வராது)

இந்தக் குற்றத்திற்கு மூன்று மாதங்கள் வரை சிறைக் காவல் அல்லது ஐந்து நூறு ரூபாய் வரையில் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும்.

இ.த.ச 353: பொது ஊழியரை அவர் கடமையை செய்ய விடாமல் தாக்குதல்

ஒரு பொது ஊழியர், சட்டப்படி தமக்குள்ள கடமையைச் செய்ய வரும் போது, அப்படிச் கடமையாற்ற விடாமல் அவரைத் தடுக்க வேண்டும் அல்லது தாமதிக்கவேண்டும் என்ற கருத்துடன் அல்லது அப்படிக் கடமையாற்றுவதன் விளைவாக அல்லது அப்படி கடமையாற்ற முயலும் போதோ அவரிடத்தில் வன் முறைத் தாக்குதல் அல்லது தாக்க முனைதலைப் பயன்படுத்துவது குற்றமாகும்.


இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக் காவல் அல்லது ஐந்து நூறு ரூபாய் வரையில் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும்.

இ.த.ச 354 : பெண்னை தாக்குதல்


    ஒரு பெண்ணுடைய அடக்க உணர்ச்சிக்குக் குந்தகம் விளைவிக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தெளிவுடன், அவளை வன்முறையில் தாக்குவதும், தாக்க முனைவதும் குற்றமாகும். 

     இந்தக் குற்றத்திற்கு ஒரண்டுக்குக்கு குறையாமால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைக் காவலுடன் கூடிய  அபராதம் இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.


இ.த.ச 506 குற்றங்கருதி மிரட்டுதலுக்கான தண்டனை

  குற்றங்கருதி மிரட்டுதல் என்ற குற்றத்தை யார் புரிந்தாலும் அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.




    அத்தகைய மிரட்டல் மூலம் ஒரு கொலை செய்யப்படும் என்றோ அல்லது பெரிய கொடுங்காயம் விளைவிக்கப்படும் என்றோ அல்லது தீயிட்டு சொத்துகள் அழிக்கப்படும் என்றோ அல்லது மரணத்தண்டனை பெறத்தக்க அல்லது ஆயுள் தண்டனையை பெறத்தக்க ஒரு குற்றத்தைப் புரியப்படும் என மிரட்டினால், 

    மிரட்டிய அந்த நபர் குற்றங்கருதி மிரட்டுதல் என்ற குற்றத்தைப் புரிந்தவர் ஆகிறார். அவருக்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1973

 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.     

தினம் ஒரு சட்டம் - தாக்குதலும், வன்முறைத் தாக்குதலும் மற்றும் தாக்க முனைதலும்



இ.த.ச 349 : தாக்குதல்(Force)

         ஒரு நபர் மற்றோரு நபரை தாக்குதல் செய்ந்ததாக கூறப்படுகிறது எப்போது எனில், 

    ஒருவருடைய உடலை அசைப்பதும், அசையாமல் தடுப்பதும்  அல்லது அசைவில் ஒரு மாற்றத்தை உண்டாக்குவதும் அல்லது  ஒரு பொருளை அசைத்து, அல்லது அந்தப் பொருளை அசையாமல் தடுத்து அல்லது அதனுடைய அசைவில் மாற்றத்தை உண்டாக்குவது ஆகியவற்றின் மூலம் அந்தப் பொருள் மற்றோருவருடைய அசைவில் மற்றத்தை உண்டாக்கலாம் அல்லது அவரின் உடலின் ஒருப் பகுதி அல்லது அவர் அணிந்திருக்கும் ஆடை அல்லது வைத்திருக்கும் பொருள் அல்லது அவருடைய உணர்வைத் தொடக்கூடிய ஒரு பொருளைத் தொடுவதும் எடுப்பதும் என எதனைப் புரிந்தாலும்  அந்த நபர் தாக்குதல் செய்கிறார் என்று கூறலாம்.


அந்த நபர் அத்தகைய அசைவு, அசைவில் மாற்றம் அல்லது அசைவைத் தடுக்கும் செயல் கீழ் காணப்படும் மூன்று வகைகளில் இருக்கும்.

1. தன்னுடைய உடற்பலத்தைப் பயன்படுத்தி 
மேற் கூறப்பட்ட செயலை  நடத்தலாம்.

2. ஒரு பொருளை அசைப்பதன் மூலம் மேற் கூறப்பட்ட செயலை உண்டாக்கலாம்.

3.ஒரு மிருகத்தை ஏவி விட்டு அத்தகைய மாற்றத்தை உண்டாக்கலாம் அல்லது மாற்றத்தை அல்லது அசைவை நிறுத்தலாம்.



 
இ.த.ச 350 : வன்முறைத் தாக்குதல்(Criminal Force)

   யாராவது ஒருவருடைய சம்மதமின்றி அவருடைய அசைவுகளை கட்டுப்படுத்துவது தாக்குதல் என்கிறோம், அவ்வாறு அவரைத் தாக்கும் போது ஒரு குற்றத்தைப் புரிய வேண்டும் என்ற கருத்துடன், அத்தகைய தாக்குதல் காயம், அச்சம் அல்லது தொல்லை தர வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தெளிவுடனும் அத்தகைய தாக்குதல் நடைப்பெற்றிருந்தால் அதனை வன்முறைத் தாக்குதல் என்று கூறலாம்.

இ.த.ச 351 :தாக்க முனைதல்(Assault)

ஒருவர் தம் எதிரிலுள்ள மற்றோருவரை வன் முறையில் தாக்கப் போவதாக அச்சுறுத்தும் கருத்துடன், ஒரு தோற்றத்தை அல்லது ஒர் ஆயத்தமோ செய்தால், அதனை வன்முறையில் தாக்க முனைதல் என்று கூறுகிறோம்.

விளக்கம்

வெறும் வாய் வார்த்தை மட்டும் இந்தக் குற்றத்திற்கு உட்படுத்தாது. ஆனால் அவனுடைய சைகை அல்லது ஆயத்தமும் அந்தப் பேச்சு தரும் பொருள் அதனை வன்முறையில் தாக்க முனைதலாக கருதும்.


இ.த.ச 503 : குற்றங்கருதி மிரட்டுதல்(Criminal intimidation)

         யாராவது, ஒருவருடைய அல்லது அவருக்கு வேண்டிய ஒருவருடைய உடலுக்கும், மதிப்புக்கும் மற்றும் சொத்துக்கும் தீங்கு இழைக்கப்படும் என ஒருவரை மிரட்டுவதும் அல்லது ஒருவர் சட்டப்படி செய்ய வேண்டிய செயலை செய்யாமல் இருக்கும் படி மிரட்டுவதும் அல்லது சட்டப்படி செய்யக்கூடாத ஒரு செயலை செய்யும்படி மிரட்டுவதும் குற்றங்கருதி மிரட்டுதல் என்கிறோம்.


விளக்கம்

   நமக்கு வேண்டிய நபர் எனப்படுபவர் இறந்து விட்டாலும் அவருடைய நற் பெயருக்கு கலங்கம் விளைவிக்கப்படும் என மிரட்டுவதும் இந்தப் பிரிவில் அடங்கும்.



 

நாளை இதற்கான தண்டனைகளைக் காண்போம்....

 http://indiankanoon.org/doc/478590/

குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் அல்லது மொழியாக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம். இதை ஆங்கிலத்திலும் வாசிக்கவும்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.   

Friday 22 January 2016

தினம் ஒரு சட்டம் - மணப்பெண்ணைக் கொடுமைப்படுத்தினால்



    இது மிகவும் பிரபலமான ஒரு சட்டமாகும். இதை இன்றை தினங்களில் அதிகமாக பயன்படுத்தும் சட்டமாகும் சிலர் இந்த  சட்டம் இருப்பது தெரியாமலே மாட்டி கொண்டு விடுகின்றார்கள்.

  • இ.த.ச 498அ

       யாராவது, ஒரு பெண்ணின் கணவனாகவோ அல்லது அந்த கணவனின் உறவினோர்களோ அல்லது அவர்களில் யாராவது ஒருவரோ கொடுமைப் படுத்தினால் குற்றமாகும். 


   அவர்களுக்கு மூன்று வருடங்கள் வரையில்  சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

விளக்கம் -

(அ)  - கொடுமை என்ற சொல் அந்தப் பெண்ணை மனரீதியாக அல்லது உடல் ரீதியாக ஒரு தாக்கத்தை உண்டாக்கு தற்கொலைக்கு முயற்சிப்பதையும் அல்லது ஒரு பெருங்காயத்தை அல்லது மரணத்திற்கு ஏதுவான ஒரு சித்தரதை உண்டாவதும் அதனால் அந்தப் பெண்ணின் உடலுக்கும் , உயிருக்கும் , கர்ப்பத்திற்கும் கேடு விளைவிப்பதாகும், அல்லது



  (ஆ) -   மணப் பெண்ணிற்கு தேவையற்ற சங்கடங்களை உண்டாக்கி அதன் மூலம் அந்தப் பெண்ணிடமிருந்தாவது அல்லது அந்தப் பெண்ணின் உறவினர்களிடமிருந்தாவது சட்ட விரோதமான ஒரு சொத்தையோ அல்லது சன்மானத்தையோ(valuable security) எதிர்ப்பார்த்தோ அல்லது அந்தப் பெண்ணிடமிருந்தாவது அல்லது அந்தப் பெண்ணின் உறவினர்களிடமிருந்தாவது  அது தொடர்பான ஒன்று கிடைக்காதலால் அந்தப் பெண்ணிற்கு தேவையற்ற சங்கடங்களை உண்டாக்குதலை குறிக்கும் .

குறிப்பு - இது யார் மனதையும் புன்படுத்த எழுத வில்லை வீனாக சட்ட சிக்கலில் மாட்டிக் கொண்டு அவதிப்படவேண்டாம் என்ற நல்ல எண்ணத்தில்

Section 498-A- Husband or relative of husband of a woman subjecting her to cruelty
 
  Whoever, being the husband or the relative of the husband of a woman, subjects such woman to cruelty shall be punished with imprisonment for a term which may extend to three years and shall also be liable to fine.

Explanation-For the purpose of this section, "cruelty" means-

(a) Any willful conduct which is of such a nature as is likely to drive the woman to commit suicide or to cause grave injury or danger to life, limb or health whether mental or physical) of the woman; or

(b) Harassment of the woman where such harassment is with a view to coercing her or any person related to her to meet any unlawful demand for any property or valuable security or is on account of failure by her or any person related to her meet such demand.

Source-
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1965


குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் அல்லது மொழியாக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம். இதை ஆங்கிலத்திலும் வாசிக்கவும்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல. 

Thursday 21 January 2016

தினம் ஒரு சட்டம் - பிறன்மனை கவருதல் குற்றமாகும்


இ.த.ச 498 -


    யாராவது ஒருவர், பிறருடைய மனைவி எனத் தெரிந்தும் அல்லது நம்புவதற்கு ஏதுவான காரணங்கள் இருந்தும், அந்த மனிதரிடமிருந்தோ அல்லது அந்த பெண்ணின் மேல் உரிமை அல்லது கடமையின் காரணமாக காக்கும் பொருப்பிலிருக்கும் ஒருவரிடமிருந்து, அந்தப் பெண்ணை வேறு ஒருவருடன் தவறான புணர்ச்சிக்கோ அல்லது முறைக்கேடான புணர்ச்சிக்கோ கவர்ந்து செல்வதும் அல்லது இச்சைக் காட்டி அழைத்து செல்வதும் குற்றமாகும்.


 அல்லது அந்தப் பெண்ணை அத்தகைய எண்ணத்துடன் தடுத்து வைப்பதும் அல்லது மறைத்து வைப்பதும் குற்றமாகும்.


  இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


Section 498. Enticing or taking away or detaining with criminal intent a married woman



   Whoever takes or entices away any woman who is and whom he knows or has reason to believe to be the wife of any other man, form that man, or from any person having the care of her on behalf of that man, with intent that she may have illicit intercourse with any person, or conceals or detains with that intent any such woman, 


    shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both. 


தகவல் மற்றும் படங்கள்
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1959
http://www.indianpenalcode.in/ipc-496/
http://www.knowledgebible.com/forum/showthread.php/2200-Indian-Penal-Code-1860/page53
http://www.knowledgebible.com/forum/showthread.php/2200-Indian-Penal-Code-1860/page53


குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் அல்லது மொழியாக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம். இதை ஆங்கிலத்திலும் வாசிக்கவும்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல. 

தினம் ஒரு சட்டம் - விபச்சாரம் குற்றம்



இ.த.ச 497

      யாராவது ஒருவர், பிறருடைய மனைவி எனத் தெரிந்தும் அல்லது நம்புவதற்கு ஏதுவான காரணங்கள் இருந்தும், அவருடைய சம்மதத்தைப் பெற்றும் அல்லது பெறாமலும் அவருடைய மனைவியுடன் சேருவது அல்லது உடல்உறவுக் கொள்வதும் குற்றமாகும் இதனை  கற்பழிப்பு என கொள்ளலாகாது ஆனால் இதனை விபச்சாரம் என கருதப்படும். இது சட்டப்படி குற்றமாகும் (is guilty of the offence of adultery).

  இதற்கு ஐந்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

   இதில் குற்றத்திற்கு உடந்தையாக (IPC Sec 108 - Abettor) இருந்ததாக கூறி அந்தப் பெண்ணை தண்டிக்க கூடாது. 



Section 497. Adultery




       Whoever has ***ual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such ***ual intercourse not amounting to the offence of rap, is guilty of the offence of adultery,  

     and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor (IPC Sec 108 - Abettor).


தகவல் மற்றும் படங்கள்
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1959
http://www.indianpenalcode.in/ipc-493/
http://www.knowledgebible.com/forum/showthread.php/2200-Indian-Penal-Code-1860/page53

குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் அல்லது மொழியாக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல. 

தினம் ஒரு சட்டம் - ஏமாற்று திருமணத்திற்கான ஏற்பாடு செய்தல்


இ.த.ச 496 -ஏமாற்று திருமணத்திற்கான ஏற்பாடு செய்தல்


  
     யாராவது நேர்மையின்றி அல்லது ஏமாற்ற வேண்டும் என்ற கருத்துடன் சட்டத்திற்கு புறம்பாக ஒரு திருமணத்தை நடத்த ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதும், நடத்துவதும் அல்லது நடத்திவைப்பதும் குற்றமாகும்.  
  
     அவருக்கு தெரியும் தான் செய்யும் இந்த காரியம் திருமணத்தை சட்டப்படி நிரகாரிக்கும் என்று.

       அவருக்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


IPC Section 496. Marriage ceremony fraudulently gone through without lawful marriage
      Whoever, dishonestly or with a fraudulent intention, goes through the ceremony of being married, knowing that he is not thereby lawfully married, 


     shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.


தகவல் மற்றும் படங்கள்
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1959
http://www.indianpenalcode.in/ipc-496/

குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் அல்லது மொழியாக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம். இதை ஆங்கிலத்திலும் வாசிக்கவும்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல. 

Wednesday 20 January 2016

தினம் ஒரு சட்டம் - திருமணக் குற்றங்கள் - 3





இ.த.ச 495 -தன்னுடைய பழைய திருமணத்தை மறைத்து திருமணம் செய்ந்துக் கொண்டால்


   யாராவது, இ.த.ச பிரிவு 494ல் கூறியதைப் போல இரண்டாம் திருமணம் செய்ந்துக் கொள்ள நினைக்கும் நபர்,  தனக்கு இதற்கு முன் நடைப் பெற்ற பழைய திருமணத்தை மறைத்து மற்றோருவரை மணந்தால் குற்றமாகும். 


   இந்தக் குற்றத்திற்கு பத்து வருடங்கள் வரையிலும் சிறைத்தண்டனையும் அத்துடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


495. Same offence with concealment of former marriage from person with whom subsequent marriage is contracted:


- Whoever commits the offence defined in the last preceding section having concealed from the person with whom the subsequent marriage is contracted, the fact of the former marriage, 


    shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.




தகவல் மற்றும் படங்கள்
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1959
http://www.indianpenalcode.in/ipc-493/

குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் அல்லது மொழியாக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.  

தினம் ஒரு சட்டம் - திருமணக் குற்றங்கள் - 2


இ.த.ச 494 : கணவன் அல்லது மனைவி உயிரோடு இருக்கும் போது செய்யப்படும் திருமணங்கள் குற்றமாகும்.



    யாராவது, தன்னுடைய மனைவி உயிரோடு இருக்கும் போது அல்லது தன்னுடைய கணவன் உயிரோடு இருக்கும் போது மறுமணம் செய்ந்துக் கொண்டால் அது குற்றமாகும். அந்த திருமணம் செல்லதக்கதாகும் (Void Marriage) . அந்த நபருக்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

விளக்கம் -

1. நீதிமன்றத்தால் அவர்களுக்கு நடைப்பெற்ற திருமணம் செல்லாதக்கது (Void Marriage) அல்லது திருமணம் செல்லாது (Voidable Marriage) என அறிவிக்கப்பட்டு, அவர்கள் மேல் முறையீடு செய்யும் காலம் முடிந்தப்பின் - செய்யும் திருமணம் யாதும் இப்பிரிவில் அடங்காது.


2. கணவன் அல்லது மனைவி தொடர்ந்தால் போல் ஏழு வருடங்கள் வரை எந்த தகவலும் இல்லை அல்லது அவர் உயிருடன் இருக்கின்றார் என நம்பத்தகுமான காரணங்கள் இல்லை - அவரின் கடைசியாக குடியிருந்த இடத்தில் இருப்பவர்களிடம் விசாரித்தாலும் அவரைப் பற்றி தகவல்கள் ஏதும் இல்லை என நம்பத்தகும் பட்சத்தில் நடைப் பெறும் திருமணம் யாதும் இப்பிரிவில் அடங்காது.  ஆனால் மறுமணம் செய்ந்துக் கொள்ளும் நபர் தன்னுடைய முந்திய திருமணத்தைப் பற்றிய விபரத்தை தாம் திருமணம் செய்யவிருக்கும் நபரிடம் தெரியப்படுத்தல் வேண்டும்.




494. Marrying again during lifetime of husband or wife: --
 

     Whoever, having a husband or wife living, marries in any case in which such marriage is void by reason of its taking place during the life of such husband or wife, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.


Exception—This section does not extend to any person whose marriage with such husband or wife has been declare
void by a Court of competent jurisdiction,


Nor to any person who contracts a marriage during the life of a former husband or wife, if such husband or wife, at the time of the
subsequent marriage, shall have been continually absent from such person for the space of seven years, and shall not have been heard of by such person as being alive within that time provided the person contracting such subsequent marriage shall, before such marriage takes place, inform the person with whom such marriage is contracted of the real state of facts so far as the same are within his or her knowledge.


தகவல் மற்றும் படங்கள்:-
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1960
http://www.indianpenalcode.in/ipc-494/
http://indianpenalcode1860.blogspot.in/2011/02/sections-493-to-498a.html


குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் அல்லது மொழியாக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.  

தினம் ஒரு சட்டம் - திருமணக் குற்றங்கள் - 1


இ.த.ச 493 - சட்டப்படி திருமணம் ஆகாதப் பெண்ணை தன் மனைவி என நம்ப வைத்தல்


     யாராவது ஒருவர் தனக்கும் ஒரு பெண்ணிற்கும் சட்டப்படி திருமணம் ஆகாமல் இருக்க,  அந்தப் பெண்ணை தன்னுடைய மனைவி இருவருக்கும் மணமாகிவிட்டது என நம்ப வைத்து ஏமாற்றி மோசம் செய்வது குற்றமாகும். அவ்வாறு ஏமாற்றி அந்தப் பெண்ணிடம் உறவு கொள்ளுவதும் அல்லது தன் உடல் இச்சைகளை தீர்த்துக் கொள்வதும் குற்றமாகும். அந்த நபருக்கு பத்து வருடங்கள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


493. Cohabitation caused by a man deceitfully inducing a belief of lawful marriage


      - Every man who by deceit causes any woman who is not lawfully married to him to believe that she is lawfully married to him and to cohabit or have sexual intercourse with him in that belief, shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.

தகவல் மற்றும் படங்கள்
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1959
http://www.indianpenalcode.in/ipc-493/

குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் அல்லது மொழியாக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.  


Monday 18 January 2016

தினம் ஒரு சட்டம் - மரணத்தை விளைவிக்க முயற்சித்த குற்றத்திற்கான தண்டனைகள்



இ.த.ச 308

    யாராவது ஒருவர் தம் செயலால் மற்றவருக்கு மரணத்தை உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடனும் எண்ணத்துடனும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒரு செயல் புரியப்படுகின்றது. அந்த செயலால் அவருக்கு மரணம் விளைந்தால் அது மரணத்தை விளைவிக்கும் குற்றமாகும் (IPC 304),

 குற்றவாளிக்கு  ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் தண்டனையாக விதிக்கப்படுவதுடன். அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

     அவ்வாறு அவருக்கு மரணம் சம்பவிக்கவில்லை என்றால் குற்றவாளிக்கு மரணத்தை விளைவிக்கும் முயற்சி செய்ந்தற்காக  தண்டனை வழங்கப்படும் ஆதாவது IPC/இதச 308 வது பிரிவின் படி மூன்று ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.  

அந்த செயலின் விளைவாக யாருக்காவது காயம் ஏற்பட்டால் , குற்றவாளிக்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.


உதாரணம் - ரமேஷ் மற்றும் சுரேஷூக்கும் ஒரு பிரச்சனை, ரமேஷ் கடும் சினம் ஊட்டப்பட்ட நிலையில் உணர்ச்சிவசப்பட்டு சுரேசை சுடுகிறான் ஆனால் குண்டு சுரேசை சுடாமல் அந்த வழியாக சென்ற சதீஷை துளைக்கிறது. இங்கு சதீஷ் இறந்தால் ரமேஷ் மீது கொலைக்குற்றம்(Murder) சாராத மரணத்தை விளைவித்த குற்றம்(culpable homicide) சாரும். ஆனால் சதீஷ் இறக்கவில்லை சிறு காயத்துடன் தப்பித்தால் ரமேஷ் மீது மரணத்தை விளைவிக்க முயற்ச்சித்த குற்றம்( Attempt to culpable homicide) சாரும். 




Section 308- Attempt to commit culpable homicide
 
  Whoever does any Act with such intention or knowledge and under such circumstances that, if he by that Act caused death, he would be guilty of culpable homicide not amount to murder, shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, or with fine, or with both, 

     and if hurt is caused to any person by such Act, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, or with fine, or with both.

Illustration

A, on grave and sudden provocation, fires a pistol at Z, under such circumstances that if he thereby caused death he would be guilty of culpable homicide not amounting to murder. A has committed the offence defined in this section.
 
நன்றி
 

  http://www.indianpenalcode.in/wp-content/uploads/2013/12/ipc-308-300x300.png

குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல. 

Thursday 14 January 2016

அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் - 2016



         நண்பர்கள், உறவினர்கள், வலம் வருபவர்கள், தமிழ் மணம் மற்றும் அனைத்து வலையுகத்திற்கும் மற்றும் வலையுக அன்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு மற்றும்  பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்






இன்றைக்கு நாம் கணினியில் வேலைப் பார்த்தாலும் 
ஒரு காலத்தில் களைப்பையுடம் கையுமா திரிந்தோமடா..

பாஸ்ட் புட் கிடைத்தாலும் ஒரு பருக்கையும் கிடைக்காமல்
ஒரு காலத்தில் களி கூழ் உண்டோமடா....

இன்றைக்கு காசுக் கரும்பு ஜூஸ்  கிடைத்தாலும்
ஒரு காலத்தில் கரும்பின் சுவையறிய பல மாதம் காத்திருந்தோமடா

இன்று சரவணா பவன் பொங்கள் கிடைத்தாலும்... 
உலக்கையில் இடித்த புது அரிசியின் பொங்கலின் சுவையே தனியடா..

இன்றைக்கு பேஸ்புக்கில் வாழ்த்து சொல்லும் நாம்...
ஒரு காலத்தில் வாழ்த்து அட்டையில் சொன்னோமடா..

 பண்பாடுகளை நாம் மறந்தாலும் பண்பாடு நம்மை மறக்காதப்ப...
என்றும் அன்புடன் என் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்...





 


Wednesday 13 January 2016

தினம் ஒரு சட்டம் - தற்கொலைக்கான முயற்சியும் அதன் தண்டனையும்


இ.த.ச 309



     யாராவது தற்கொலை செய்து கொள்வதற்கு முயறச்சித்தாலும் அது தொடர்பான ஏதாவது ஒரு செயலைப் புரிந்து முயற்ச்சித்தாலும் அது தற்கொலை முயற்சியாக கருதப்படும். இது சட்டப்படி குற்றமாகும்.


இந்தக் குற்றத்திற்கு ஒரு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.



Section 309- Attempt to commit suicide
 


  Whoever attempts to commit suicide and does any act towards the commission of such offence, 

   shall be punished with simple imprisonment for term which may extend to one year 1[ or with fine, or with both].

* Subs. by Act 8 of 1882, sec.7, for "and shall also be liable to fine". 


http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1761


குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.  

Tuesday 12 January 2016

தினம் ஒரு சட்டம் - கொலைக்கான முயற்சியும் அதன் தண்டனையும்


இ.த.ச 307

    யாராவது தன் செயலால் ஒருவருக்கு மரணம் உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடனும் அல்லது தன்னுடைய அத்தகைய செயலால் மரணம் சம்பவிக்கும் என தெரிந்து ஒரு கொலைக் குற்றத்திற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.



    அத்தகைய முயற்சியையும் சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு அது கொலைக் குற்றத்திற்கான முயற்சி என கருதப்படுகிறது.

 இது குற்றமாகும் இந்தக்குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக வழங்கப்படும்.



அத்தகைய கொலைமுயற்சியின் காரணமாக யாருக்காவது காயமோ அல்லது பெருங்காயமே உண்டானால், அந்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அல்லது
பத்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக வழங்கப்படும்.

 இந்த முயற்சியை ஆயுள் தண்டனைப் பெற்ற கைதி செய்ய முயற்சித்தாலோ அல்லது அத்தகை முயற்சின் காரணமாக காயம் உண்டானாலோ அவருக்கு மரணத்தண்டனை வரை விதிக்கப்படும்
 


Section 307- Attempt to murder
 
   Whoever does any act with such intention or knowledge, and under such circumstances that, if he by that act caused death, he would be guilty or murder, shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine, and is hurt is caused to any person by such act, the offender shall be liable either to 1[imprisonment for life], or to such punishment as is hereinbefore mentioned.

Attempts by life convicts.-2 When any person offending under this section is under sentence of 1[imprisonment for life] he may, if hurt is caused, be punished with death].

Illustrations.

(a) A shoots at Z with intention to kill him, under such circumstances that, if death ensued. A would be guilty of murder. A is liable to punishment under this section.

(b) A, with the intention of causing the death of a child of tender years, exposes it is a desert place. A has committed the offence defined by this section, though the death of the child does not ensure.

(c) A, intending to murder Z, buys a gun and loads it. A has not yet committed the offence. A fires the gun at Z. He has committed the offence defined in this section, and if by such firing he wounds Z, he is liable to the punishment provided by the latter part of 3[the first paragraph of ] this section.

(d) A, intending to murder Z by poison, purchases poison and mixes the same with food which remains in A's keeping; A has not yet committed the offence defined in this section. A places the food on Z' s table or delivers it to Z's servant to place it on Z's table. A has committed the offence defined in this section.

1. Subs. by Act 26 of 1955, sec. 117 and Sch., for "transportation for life" (w.e.f. 1-1-1956).

2. Ins. by Act 27 of 1870, sec. 11.

3. Ins. By Act 12 of 1891, sec. 2 and Sch. II.

http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1759

குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.  

தினம் ஒரு சட்டம் - யாரவது தற்கொலைக்கு உடந்தையாக இருந்தால்



இ.த.ச 306


        யாராவது ஒருவர் அடுத்தவர்கள் தற்கொலைக்கு செய்ந்துக்கொள்ள உடந்தையாகவோ, அல்லது காரணமாக இருந்தால், அவ்வாறு உடந்தையாகவும் காரணமாக இருந்தவருக்கு  

    பத்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் தண்டனையுடன் அபராதமும் சேர்த்து தண்டணையாக விதிக்கப்படும்.



Section 306- Abetment of suicide

    If any person commits suicide, whoever abets the commission of such suicide, shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.

குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.  

Monday 11 January 2016

தினம் ஒரு சட்டம் - குழந்தை அல்லது மன வளர்ச்சி இல்லாதவர்களை தற்கொலைக்குத் தூண்டினால்

இ.த.ச 305



        யாராவது ஒருவர் பதினேட்டு வயதுக்கு குறைவாக உள்ளவர் அல்லது புத்தி சுவாதினம் இல்லாதவர் அல்லது முட்டாள் அல்லது புத்தி தெளிவில்லாமல் மயக்க நிலையில் உள்ளவர்.

     இவர்களில் எவராவது தற்கொலைக் செய்ந்துக் கொள்ள உதவியாகவோ அல்லது காரணமாகவோ இருந்தால் குற்றமாகும். 

    இந்தக் குற்றத்திற்கு அந்த நபருக்கு மரணத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் குறையாத சிறைத்தண்டனை வழங்கப்படுவதுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.



Section 305- Abetment of suicide of child or insane person

    If any person under eighteen years of age, any insane person, any delirious person, any idiot, or any person in a state of intoxication, commits suicide, whoever abets the commission of such suicide, 

    shall be punished with death or *[ imprisonment for life], or imprisonment for a term not exceeding ten years, and shall also be liable to fine.

* Subs. by Act 26 of 1955, sec.117 and sch., for "transportation for life" (w.e.f. 1-1-1956). 



குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.     

 

தினம் ஒரு சட்டம் - வரதட்சணைக் கொலைக்கான தண்டனைகள்

இ.த.ச 304-ஆ

       1 - யாராவது ஒருப் பெண்ணைத் திருமணம் செய்ந்து ஏழு ஆண்டுகளுக்குள் ஒரு சாதாரமான சூழ்நிலைகளில் தவிர, அந்த பெண்ணுக்கு நெருப்பு காயங்கள் அல்லது வேறு உடற்காயங்கள் மூலம் மரணம் உண்டாயிருக்கிறது. 


        மேலும் அத்தகைய மரண சம்பவத்திற்கு முன்பாக வரதட்சனைக் கேட்டு அதனால் மரணம் நிகழ்ந்தாலும் அதற்காக அந்தப் பெண்ணிக்கு ஒரு கொடுமை அல்லது தொல்லை தரப்பட்டு அதன் விளைவாக அத்தகைய மரணம் சம்பவித்தாலும்.

 
    இத்தகைய மரணத்தை மணக்கொடை மரணம் ( Dowry Death) என்று அழைக்கப்படுகிறது. மேலும் அத்தகைய மரணத்தை அந்தப் பெண்ணின் கணவன் அல்லது அந்த கணவனின் வேறு உறவினர்கள் அத்தகைய மரணத்தை ஏற்ப்படுத்தியதாக கருதப்பட வேண்டும்.

 
    2 - யாராவது மரணக்கொடை மரணத்தை விளைவித்தாலும் துனைப்புரிந்தாலும் அது குற்றமாகும். அவருக்கு ஏழு ஆண்டுகள் குறையாமலும் மற்றும் ஆயுள் வரை நீட்டிக்க கூடிய சிறைக்காவலை தண்டனையாக வழங்கலாம்.



Section 304-B- Dowery death
Where the death of a woman is caused by any burns or bodily injury or occurs otherwise than under normal circumstances within seven years of her marriage and it is shown that soon before her death she was subjected to cruelty or harassment by her husband or any relative of her husband for, or in connection with, any demand for dowry, such death shall be called "dowry death" and such husband or relative shall be deemed to have caused her death.

Explanation:-For the purpose of this sub-section, "dowry" shall have the same meaning as in section 2 of the Dowry Prohibition Act, 1961 ( 28 of 1961).
Whoever commits dowry death shall be punished with imprisonment for a term which shall not be less than seven years but which may extend to imprisonment for life.


http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1756 

குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.     


Tuesday 5 January 2016

தினம் ஒரு சட்டம் - கவனக்குறைவால் ஏற்படும் மரணத்திற்கான தண்டனைகள்

இ.த.ச 304-அ


       யாராவது, ஒரு மரணத்தை விளைவிக்கும் குற்றத்திற்குட்படாத எந்த ஒரு செயலையும் கவனக்குறைவாகவும் அல்லது அசட்டுத்தனத்தினாலும் செய்து அதனால் யாருக்காவது மரணம் சம்பவித்தால்,     


  
      அந்த செயலைப் புரிந்தவருக்கு இரண்டு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


Section 304-A- Causing death by negligence
 


    *Whoever causes the death of any person by doing any rash or negligent act not amounting to culpable homicide, 

    shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.]

* Ins. by Act 27 of 1870, sec.12.

http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1755

குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.    

Monday 4 January 2016

தினம் ஒரு சட்டம் - மரணம் மற்றும் கொலைக் குற்றத்திற்கான தண்டனைகள்-2


இ.த.ச 304


       யாராவது கொலைக் குற்றமாகாத மரணத்தை விளைவிக்கும் குற்றத்தைப் (culpable homicide) புரிந்தால், அவருக்கு அந்தக் குற்றத்தின் மூலம் அவர் நினைத்தவருக்கு ஒரு மரணத்தை உண்டாக்கும்  அல்லது அத்தகைய செயலால் மரணம் சம்பவிக்கும் என்ற கருத்து அல்லது தெளிவுடன் அந்த செயலைப் புரிந்திருந்தால்.
  
  அவருக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் தண்டனையாக விதிக்கப்படுவதுடன். அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

மேலும்

   யாராவது கொலைக் குற்றமாகாத மரணத்தை விளைவிக்கும் குற்றத்தைப் (culpable homicide) புரிந்தால், அவருக்கு அந்தக் குற்றத்தின் மூலம் அவர் நினைத்தவருக்கு ஒரு மரணத்தை உண்டாக்கும்  உடல்காயத்தை உண்டாக்குவதால் அல்லது அத்தகைய செயலால் மரணம் சம்பவிக்கும் என்ற கருத்து இல்லாமல் அல்லது தெளிவும் இல்லாமல் அந்த செயலைப் புரிந்திருந்தால்.
  
  அவருக்கு  பத்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் தண்டனையாக அல்லது பத்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
அல்லது அபராதம் மட்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

Section 304- Punishment for culpable homicide not amounting to murder
 


  Whoever commits culpable homicide not amounting to murder shall be punished with *[imprisonment for life ],or imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine, if the act by which the death is caused is done with the intention of causing death, or of causing such bodily injury as is likely to cause death,

Or with imprisonment of either description for a term which may extend to ten years, or with fine, or with both, if the act is done with the knowledge that it is likely to cause death ,but without any intention to cause death, or to cause such bodily injury as is likely to cause death.

* Subs. by Act 26 of 1955, sec.117 and sch., for "transportation for life" (W.e.f.1-1-1956). 




குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.