Wednesday 20 January 2016

தினம் ஒரு சட்டம் - திருமணக் குற்றங்கள் - 2


இ.த.ச 494 : கணவன் அல்லது மனைவி உயிரோடு இருக்கும் போது செய்யப்படும் திருமணங்கள் குற்றமாகும்.



    யாராவது, தன்னுடைய மனைவி உயிரோடு இருக்கும் போது அல்லது தன்னுடைய கணவன் உயிரோடு இருக்கும் போது மறுமணம் செய்ந்துக் கொண்டால் அது குற்றமாகும். அந்த திருமணம் செல்லதக்கதாகும் (Void Marriage) . அந்த நபருக்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

விளக்கம் -

1. நீதிமன்றத்தால் அவர்களுக்கு நடைப்பெற்ற திருமணம் செல்லாதக்கது (Void Marriage) அல்லது திருமணம் செல்லாது (Voidable Marriage) என அறிவிக்கப்பட்டு, அவர்கள் மேல் முறையீடு செய்யும் காலம் முடிந்தப்பின் - செய்யும் திருமணம் யாதும் இப்பிரிவில் அடங்காது.


2. கணவன் அல்லது மனைவி தொடர்ந்தால் போல் ஏழு வருடங்கள் வரை எந்த தகவலும் இல்லை அல்லது அவர் உயிருடன் இருக்கின்றார் என நம்பத்தகுமான காரணங்கள் இல்லை - அவரின் கடைசியாக குடியிருந்த இடத்தில் இருப்பவர்களிடம் விசாரித்தாலும் அவரைப் பற்றி தகவல்கள் ஏதும் இல்லை என நம்பத்தகும் பட்சத்தில் நடைப் பெறும் திருமணம் யாதும் இப்பிரிவில் அடங்காது.  ஆனால் மறுமணம் செய்ந்துக் கொள்ளும் நபர் தன்னுடைய முந்திய திருமணத்தைப் பற்றிய விபரத்தை தாம் திருமணம் செய்யவிருக்கும் நபரிடம் தெரியப்படுத்தல் வேண்டும்.




494. Marrying again during lifetime of husband or wife: --
 

     Whoever, having a husband or wife living, marries in any case in which such marriage is void by reason of its taking place during the life of such husband or wife, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.


Exception—This section does not extend to any person whose marriage with such husband or wife has been declare
void by a Court of competent jurisdiction,


Nor to any person who contracts a marriage during the life of a former husband or wife, if such husband or wife, at the time of the
subsequent marriage, shall have been continually absent from such person for the space of seven years, and shall not have been heard of by such person as being alive within that time provided the person contracting such subsequent marriage shall, before such marriage takes place, inform the person with whom such marriage is contracted of the real state of facts so far as the same are within his or her knowledge.


தகவல் மற்றும் படங்கள்:-
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1960
http://www.indianpenalcode.in/ipc-494/
http://indianpenalcode1860.blogspot.in/2011/02/sections-493-to-498a.html


குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் அல்லது மொழியாக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.  

No comments:

Post a Comment