Tuesday 29 December 2015

தினம் ஒரு சட்டம் - மரணம் மற்றும் கொலைக் குற்றத்திற்கான தண்டனைகள்-1

இ.த.ச 302

         யாராவது கொலைக் குற்றம் புரிந்தால் அவருக்கு மரணத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனையுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.   


         மரணத்தண்டனையை அதிகப்பட்ச தண்டனையாக கருதப்படுகிறது.  உலக நாடுகளில் பெரும்பாலும் இத்தகைய    மரணத் தண்டனை தடைசெய்யப்பட்டுள்ளன. 

Section 302- Punishment for murder
Whoever commits murder shall be punished with death, or *[imprisonment for life] and shall also be liable to fine.

* Subs. by Act 26 of 1955, sec. 117and sch. for "transportation for life"(w .e. f.1.1.1956).


இ.த.ச 303


    யாராவது கொலைக் குற்றம் புரிந்து சிறையில் ஆயுள் தண்டனைக் காலத்தை அனுபவித்து வரும் ஆயுள் தண்டனை கைதி, கொலைக்குற்றம் புரிந்தால் அவருக்கு மரணத்தண்டனை தண்டனையாக விதிக்கப்படும்

Section 303- Punishment for murder by life-convict

    Whoever, being under sentence of *[imprisonment for life],commits murder, shall be punished with death.

* Subs. by Act 26 of 1955, sec.117 and sch., for "transportation for life" (W.e.f.1-1-1956).





குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.    

தினம் ஒரு சட்டம் - மரணத்தை எதிர்பாராமல் மற்றோருவர் மீது செயல்படுத்தினால்.


இ.த.ச 301


      ஒரு நபர், தம் செயலால் ஒரு மரணத்தை உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் கருத்துடனும் தெரிந்து ஒரு செயல் செய்யப்படுகிறது. 

     அந்த செயலில் விளைவாக அவர் நினைத்த ஒரு நபருக்கு மரணம் சம்பவிக்காமல்  அவரின் செயலால் வேறு நபருக்கு மரணம் சம்பவிக்கின்றது.

         ஆனால் கொலை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவருக்கும் கொலையுண்டான நபருக்கும் எந்த விதமான விரோதமும் இல்லை அவரை கொல்ல வேண்டும் என்ற எண்ணமும் இல்லை தம் செயலால் அவருக்கு மரணத்தை உண்டாக்க வேண்டும் அவருக்கு மரணம் சம்பவிக்கும் என்ற தெளிவும் இல்லை. 

         ஆகவே மரணத்தை விளைவித்தவருக்கு மரணத்தை விளைவித்த குற்றமே சாரும்.  கொலைக் குற்றம் சாராது.

     இனி வரும் பதிவுகளில் மரணத்தை விளைவித்த குற்றத்திற்கும் மற்றும் கொலைக் குற்றம் உள்ள வேறுப்பாட்டைக் காண்போம்.


Section 301- Culpable homicide by causing death of person other than person whose death was intended
 
     If a person, by doing anything which he intends or knows to be likely to cause death, commits culpable homicide by causing the death of any person, whose death he neither intends nor knows himself to be likely to cause, 

     the culpable homicide committed by the offender is of the description of which it would have been if he had caused the death of the person whose death he intended or knew himself to be likely to cause. 



குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.    

Sunday 27 December 2015

தினம் ஒரு சட்டம் - கொலைக் குற்றம் என்றால் என்ன ?


இ.த.ச 300




 
சில காரணங்களை தவிர்த்து - மரணத்தை விளைவிக்க கூடிய குற்றம் கொலைக் குற்றமாகும்.  கொலைக் குற்றமாக கருதக்கூடிய கொள்ளத்தக்க காரணீகள் யாதெனில்.

1-மரணத்தை விளைவிக்க வேண்டும் என்ற கருத்துடன் ஒரு செயலைப் புரிந்து அதன் விளைவாக மரணம் ஏற்பட்டிருந்தால்; அல்லது,

2-உடலில் உண்டாக்கப்பட்ட காயத்தால் ஒருவர் மரணம் அடைகிறார். காயத்தை உண்டாக்கியவருக்கு, அவர் உண்டாக்கும் காயத்தால் அந்த நபருக்கு மரணம் உண்டாகும் என்று தெரியும். தெரிந்தும் அந்தக் காயத்தைக் கருத்துடன் உண்டாக்குதல்; அல்லது,

3-ஒருவருடைய உடலை காயப்படுத்த வேண்டும் என்ற கருத்துடன் ஒரு காரியம் செய்யப்படுகிறது. அதனால் ஒருவர் மரணம் அடைகிறார். அப்படி அவர் உண்டாக்கும் காயம், இயற்கையின்  வழிமுறையின்படி மரணத்தை அடைய செய்வதற்கு போதுமானது என்று அறிந்திருந்தால்; அல்லது,

 4 - ஒருவர் தாம் செய்யும் காரியம் அபாயகரமானது. அதனால் அடுத்தவருக்கு மரணத்தை சம்பவிக்கும் அல்லது மரணத்தை உண்டாக்க கூடிய உடல் காயம் ஏற்படும் என்று அறிந்திருந்தால் போதும் அறிந்தும் அத்தகைய காரியத்தை புரிதல்.  

விதிவிளக்கு - மரணத்தை விளைவிக்கும் குற்றம் எப்போது கொலைக்குற்றமாகது எனில் ஒருவர் திடிரென தூண்டப்பட்ட உணர்ச்சிகளை அடக்க முடியாமல் நிதானத்தை இழந்துவிட்ட சூழ்நிலையில் , தன்னைக் கோபப்படுத்தியவனைத் தாக்கி மரணம் அடையச் செய்தாலும் அல்லது அந்த கோபத்தில் தவறுதலாக வேறு ஒருவருக்கு மரணத்தை உண்டாக்கினாலும் மரணத்தை விளைவிக்கும் குற்றம், கொலைக் குற்றமாகாது.



Except in the cases hereinafter excepted, culpable homicide is murder, 

1-if the act by which the death is caused is done with the intention of causing death, or-

2ndly

If it is done with the intention of causing such bodily injury as the offender knows to be likely to cause the death of the person to whom the harm is caused, or-

3rdly

If it is done with the intention of causing bodily injury to any person and the bodily injury intended to be inflicted is sufficient in the ordinary course of nature to cause death, or-

4thly

If the person committing the act knows that it is so imminently dangerous that it must, in all probability, cause death or such bodily injury as is likely to cause death, and commits such act without any excuse for incurring the risk of causing death or such injury as aforesaid.

Illustrations

(a) A shoots Z with the intention of killing him. Z dies in consequence. A commits murder.

(b) A, knowing that Z is labouring under such a disease that a blow is likely to cause his death, strikes him with the intention of causing bodily injury. Z dies in consequence of the blow. A is guilty of murder, although the blow might not have been sufficient in the ordinary course of nature to cause the death of a person in a sound state of health. But if A, not knowing that Z is labouring under any disease, gives him such a blow as would not in the ordinary course of nature kill a person in a sound state of heath, here A, although he may intend to cause bodily injury, is not guilty of murder, if he d8id not intend to cause death, or such bodily injury as in the ordinary course of nature would cause death.

(c) A intentionally gives Z a sword-cut or club-wound sufficient to cause the death of a man in the ordinary course of nature. Z dies in consequence. Here, A is guilty of murder, although he may not have intended to cause Z's death.

(d) A without any excuse fires a loaded connon into a crowd of persons and kills one of them. A is guilty of murder, although he may not have had a premeditated design to kill any particular individual.

Exception I-When culpable homicide is not murder-Culpable homicide is not murder if the offender, whilst deprived of the power of self-control by grave and sudden provocation, causes the death of the person who gave the provocation or causes the death of any other person by mistake or accident.

The above exception is subject to the following provisos :--


http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1750

குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.   

Saturday 26 December 2015

தினம் ஒரு சட்டம் - மரணத்தை விளைவிக்கும் குற்றம்


இ.த.ச 299 


         
       யாராவது ஒருவர் மற்றோருவருக்கு மரணத்தை உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடன் ஒரு செயலைப் புரிதல் அல்லது மரணத்தை உண்டாக்க கூடிய ஒரு உடல் காயத்தை உண்டுப் பண்ண வேண்டும் என்ற கருத்துடன் ஒரு காரியத்தை செய்ய வேண்டும் அல்லது மரணத்தை விளைவிக்க வேண்டும் அல்லது தன்னுடைய செய்கையால் ஒருவருக்கு மரணம் சம்பவிக்கும் என்று தெரிந்தும் அந்த செயலைப் புரிந்தால் அதனால் மற்றோருவருக்கு மரணம் சம்பவித்தால், அது மரணத்தை விளைவிக்கும் (culpable homicide குற்றமாக கருதப்படுகிறது.


உதாரணம்-1 - நபர்-1, ஒரு பள்ளத்தை தோண்டு அதன் மீது சருகுகளை போட்டு நபர்-2 க்கு மரணத்தை விளைவிக்க வேண்டும் என்ற கருத்துடன் மூடி மறைக்கின்றான். நபர்-2 அதன் மீது நடந்து மரணம் சம்பவிக்கின்றது இந்த மரணத்திற்கு நபர்-1 பொருப்பு ஏற்க வேண்டும். ஆகவே இது மரணத்தை விளைவிக்கும் குற்றமாகும். நபர்-1 மரணத்தை விளைவிக்கும் குற்றத்தை புரிந்தவராகிறார்.


Section 299- Culpable homicide
 

  Who ever causes death by doing an act with the intention of causing death, or with the intention of causing such bodily injury as is likely to cause death, or with the knowledge that he is likely by such act to cause death, commits the offence of culpable homicide.

Illustrations

(a) A lays sticks and turf over a pit, with the intention of there by causing death, or with the knowledge that death is likely to be thereby caused. Z believing the ground to be firm, treads on it, falls in and is killed. A has committed the offence of culpable homicide.

(b) A knows Z to be behind a bush. B does not know it A, intending to cause, or knowing it to be likely to cause Z's death, induces B fires and kills Z. Here B may be guilty of no offence; but A has committed the offence of culpable homicide.

(c) A, by shooting at a fowl with intent to kill and steal it, kills B who is behind a bush; A not knowing that he was there. Here, although A was doing an unlawful act, he was not guilty of culpable homicide, as he did not intend to kill B, or to cause death by doing an act that he knew was likely to cause death.

Explanation 1-A person who causes bodily injury to another who is labouring under a disorder, disease or bodily infirmity, and thereby accelerates the death of that other, shall be deemed to have caused his death.

Explanation 2-Where death is caused by bodily injury, the person who causes such bodily injury shall be deemed to have caused the death, although by resorting to proper remedies and skilful treatment the death might have been prevented.

Explanation 3-The causing of the death of child in the mother's womb is not homicide. But it may amount to culpable homicide to cause the death of a living child, if any part of that child has been brought forth, though the child may not have breathed or been completely born. 

http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1749

குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.   

Friday 25 December 2015

தினம் ஒரு சட்டம் - கலக கூட்டத்தினரை அமர்த்தினால்


இ.த.ச 158

    யாராவது இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ள இ.த.ச பிரிவு 141 வது பிரிவின் கீழ் கூறப்பட்டுள்ள செயல்களில் ஒன்றைப் புரிவதற்காக அல்லது அந்தக் குற்றத்திற்கு துணைப்புரிவதற்கு யாராவது உடந்தையாக இருத்தாலும் அல்லது (பணத்திற்காக) அமர்த்தப்பட்டாலும் அல்லது (பணத்திற்காக) அமர்த்தப்படுவதற்கு முயற்சி செய்ந்தாலும் குற்றமாகும்.

   இந்தக் குற்றத்திற்கு ஆறு மாதங்கள் வரைக் சிறைக்காவல் தண்டனையாக விதிக்கப்படலாம் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படலாம்.

அல்லது ஆயுத்தாங்கும் கூட்டத்தை அமர்த்தினால் :-

     யாராவது அவ்வாறு பணத்துக்காக அமர்த்தப்பட்ட கூட்டத்தைச் சேர்ந்த நபர்கள்,  மரணத்தை விளைவிக்ககூடிய ஆயுதம் அல்லது அபாயகரமான ஆயுதம் தாங்கி அந்த கூட்டம் செல்ல முன் வந்தால், அவ்வாறு பணத்துக்காக அமர்த்திய அந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


Section 158- Being hired to take part in an unlawful assembly or riot
 

     Whoever is engaged, or hired, or offers or attempts to be hired or engaged, to do or assist in doing any of the acts specified in Section 141, shall be punished with imprisonment of either description for a term which may extend to six months, or with fine, or with both,

or to go armed.- and whoever, being so engaged or hired as aforesaid, goes armed, or engages or offers to go armed, with any deadly weapon or with anything which used as a weapon of offence is likely to cause death, shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both. 

இ.த.ச 141

      யாராவது ஐந்து அல்லது அதற்கு மேற்ப்பட்டவர்கள் சட்ட விரோத மாக கூடி கீீழ் கானும் செயலை செய்ந்தால் அது சட்ட விரோதமாக கூட்டம் கூடுதல் ஆகும்.

1 - மத்திய அல்லது மாநில அரசை வன் முறைச் செயலாலும் அச்சத்தாலும் தம்தம் கடமையை செய்ய விடாமல் தடுப்பதும்.

2 - சட்டப்படி நிலை நாட்டப்பட்ட ஒரு சட்ட நடவடிக்கையை எதிர்ப்பதும்

3 - அத்துமீறி நுழைதல் அல்லது அத்துமீறி நுழைந்து சொத்துக்களை அழித்தல் அல்லது அது தொடர்பான வேறு குற்றங்களை செய்தல்

4 - அடுத்த மனிதர்களின் தனிப் பட்ட சுதந்திர உரிமைகளில் வன் முறைச் செயலாலும் அல்லது அச்சுறுத்தி அவர்களின் சுதந்திர நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு அவர்களைத் தடுப்பதும் அல்லது மறுப்பதும் அல்லது பறிப்பதும்.

5 - வன் முறை செயல்கள் மூலம் பிறர் செய்யக்கூடாத காரியத்தை செய்யும் படி பிறரைக் கட்டாயப்படுத்துவதும்.

விளக்கம் - சட்ட விரோதமாக கூட்டம் கூடுதல் எனப்படுவது முதலில் கூட்டம் கூடும் போது சட்ட விரோதமாக இல்லாமல் பிற்பாடு அது சட்ட விரோதமாக கூட்டம் கூடுதலாக ஆகும்.



குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.  

தினம் ஒரு சட்டம் - சட்டவிரோதமான கூட்டத்திற்கு புகலிடம்


இ.த.ச 157

   யாராவது ஒரு சட்டவிரோதமான ஒரு கூட்டத்திற்கு புகலிடம் கொடுப்பது தவறாகும். யாரவது ஒரு கூட்டம் அவர்கள் சட்டவிரோதமான கூட்டத்தை சேர்ந்தவர்கள் அல்லது அவர்கள் சட்டவிரோதமான கூட்டத்திற்காக அமர்த்தப்பட்டவர்கள் என்று நம்புவதற்கு ஏதுவான காரணங்கள் இருந்தும் அவர்களை தங்க அனுமதிப்பது குற்றமாகும். 


     
       அவர்கள் சட்ட விரோதமான கூட்டத்தினர் அல்லது அவர்கள் சட்டவிரோதமான கூட்டத்திற்காக அமர்த்தப்பட்டவர்கள் என அறிந்தப்பின்பும் அவர்களை வரவேற்பதும், தம்முடைய இடத்தில் அவர்களை ஒன்று கூட அனுமதிப்பதும், அவர்களுக்கு புகலிடம் தருவதும் குற்றமாகும். இந்தக் குற்றத்திற்கு ஆறு மாதங்கள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.



Section 157- Harbouring persons hired for an unlawful assembly
    



   Whoever harbours, receives or assembles, in any house or premises in his occupation or charge, or under his control any persons, knowing that such persons have been hired, engaged or employed, or are about to be hired, engaged or employed, to join or become members of an unlawful assembly, 

      shall be punished with imprisonment of either description for a term which may extend to six months, or with fine, or with both. 



றிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.       

தினம் ஒரு சட்டம் - சட்ட விரோதமான கலகம் உரிமையாளருக்காக நடைப்பெற்றால்


இ.த.ச 156


     யாராவது நிலத்தின் உரிமையாளர் அல்லது அந்த நிலத்தை வைத்திருப்பவரின் நலன் கருதி ஒரு கலகம் நடைப்பெற்றால், அவர் அல்லது அவரின் பிரதிநிதி அல்லது அவரின் மேலாளர், கலகம் நடைப் பெற இருக்கிறது என்று தெரிந்தப்பின்பும், 

         அதனை நடைப்பெறவிடாமல் தடுக்கவில்லை என்றால் அந்த நிலத்தின் உரிமையாளர் அல்லது அந்த நிலத்தை வைத்திருப்பவரின்  பிரதிநிதி அல்லது அவரின் மேலாளர் குற்றம் புரிந்தவர் ஆவார்கள். இத்தகைய குற்றத்திருக்கு அவருக்கு அபராதம் விதிக்கப்படும்.


Section 156- Liability of agent of owner of occupier for whose benefit riot is committed


    Whenever a riot is committed for the benefit or on behalf of any person who is the owner or occupier of any land respecting which such riot takes place, or who claims any interest in such land, or in the subject or nay dispute which gave rise to the riot, or who has accepted or derived any benefit there from,

the agent or manager or such person shall be punishable with fine, if such agent or manager, having reason to believe that such riot was likely to be committed, or that the unlawful assembly by which such riot was committed was likely to be held, shall not use all lawful means in his power to prevent such riot or assembly from taking place and for suppressing and dispersing the same.


http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1592


குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.      

Sunday 13 December 2015

தினம் ஒரு சட்டம் - RULES ON ADVOCATE’S DUTY TO OPPONENTS



RULES ON ADVOCATE’S DUTY TO OPPONENTS

1. Not to negotiate directly with opposing party
An advocate shall not in any way communicate or negotiate or call for settlement upon the subject matter of controversy with any party represented by an advocate except through the advocate representing the parties.

2. Carry out legitimate promises made
An advocate shall do his best to carry out all legitimate promises made to the opposite party even though not reduced to writing or enforceable under the rules of the Court.


Thanks & Source http://www.barcouncilofindia.org/about/professional-standards/rules-on-professional-standards/