Thursday 4 February 2016

தினம் ஒரு சட்டம் - குழந்தை இறந்து பிறக்க வேண்டும் அல்லது


இ.த.ச 315

     யாராவது ஒரு குழந்தை இறந்து பிறக்க வேண்டும் அல்லது பிறந்தவுடன் இறக்க வேண்டும் என செய்யப்படும் எந்த செயலும் குற்றமாகும். மேலும் அந்த குழந்தை உயிருடன் பிறக்க கூடாது என செய்யப்படும் எத்தகைய செயலும் அல்லது அந்த குழந்தைப் பிறந்தவுடன் அந்த குழந்தை இறக்க வேண்டும் என செய்யப்படும் எத்தகைய செயலும் தண்டனைக்குரிய குற்றமாகும். 

     அவ்வாறு செய்யப்படும் ஒரு செயல் அந்தக் குழந்தையின் தாயாரை காப்பற்றவேண்டும் என்று நல்ல எண்ணத்தில் செய்யப்படும் செயல் இந்தப் பிரிவின் கீழ் வராது. 

     இத்தகைய குற்றத்தை புரிந்த நபருக்கு பத்து ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனையுடன் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.





Section 315- Act done with intent to prevent child being born alive or to cause it to die after birth
 

    Whoever before the birth of any child does any act with the intention of thereby preventing that child from being born alive or causing it to die after its birth, and does by such prevent that child from being born alive, or causes it to die after its birth, shall, if such act be not caused in good faith for the purpose of saving the life of the mother, be punished with imprisonment of either description for a term which may extend to ten years, or with fine, or with both.


http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1767

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.      

1 comment:

  1. இது பல மருத்துவர்களுக்கு பாதகமாக முடியுமே!
    த ம 1

    ReplyDelete