Tuesday 9 February 2016

தினம் ஒரு சட்டம் - காயப்படுத்தி ஒப்புதல் வாக்குமூலம் பெறுதல் அல்லது விசாரித்தல் குற்றமாகும்


இ.த.ச 330

         யாராவது, தன்னிச்சையாக ஒருவரைக் தன்னிச்சையாக காயப்படுத்தி அல்லது அவருக்கு நேசம் காட்டும் ஒருவரைக் தன்னிச்சையாக காயப்படுத்தி ஒரு ஒப்புதல் வாக்குமூலம் அல்லது ஒரு தகவலைப் பெறுவது குற்றமாகும்.  அந்த தகவல் ஒரு குற்றத்தை துப்பு துலக்கவோ அல்லது ஒரு ஒழுங்கினத்தை கண்டுப்பிடிப்பதாகவோ அல்லது ஒரு சொத்து அல்லது விலைமதிப்புள்ள காப்பிட்டை பெறுவதற்காகவோ அல்லது அத்தகைய சொத்து அல்லது காப்பிட்டை மீட்பதற்கான தகவலைப் பெறுவதாகவோ இருக்கலாம். 

     இதுப் போன்ற காரணங்களுக்காக தன்னிச்சையாக காயம் உண்டாக்குவது குற்றமாகும்.

     இந்தக் குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்பட வேண்டும்.


உதாரணங்கள் -

1 - ஒரு காவல் அதிகாரி ஒருவரை அடித்து சித்திரவதை செய்து ஒரு நபரை குற்றத்தை ஒத்துக் கொள்ளும் படி செய்கிறார். அந்த காவல் அதிகாரி இந்தப் பிரிவின் கீழ் குற்றவாளியாகிறார்.

2 - ஒரு காவல் அதிகாரி ஒருவரை அடித்து சித்திரவதை செய்து ஒரு நபரை திருடப்பட்ட பொருள் எங்கே வைக்கப்படிருக்கின்றது என கண்டுப்பிடிக்க கொடுமைப்படுத்துகிறார். அந்த காவல் அதிகாரி இந்தப் பிரிவின் கீழ் குற்றம் புரிந்தவராகிறார்.

3 - ஒரு நிலவரி வசுல் செய்யும் அதிகாரி வசுல் செய்வதற்காக ஒரு விவசாயை கொடுமைப்படுத்துகிறார், அந்த  நிலவரி வசுல் செய்யும் அதிகாரி இந்தப் பிரிவின் கீழ் குற்றம் புரிந்தவராகிறார்.


Section 330- Voluntarily causing hurt to extort confession, or to compel restoration of property


  
     Whoever voluntarily causes hurt for the purpose of extorting from the sufferer or from any person interested in the sufferer, any confession or any information which may lead to the detection of an offence or misconduct, or for the purpose of constraining the sufferer or any person interested in the sufferer to restore or to cause the restoration of any property or valuable security or to satisfy any claim or valuable security, 

   shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, shall also be liable to fine.

Illustrations

(a) A, a police-officer, tortures Z in order to induce Z to confess that he committed a crime. A guilty of an offence under this section.

(b) A, a police officer, tortures B to induce him to point out where certain stolen property is deposited. A is guilty of an offence under this section.

(c) A, a revenue officer, tortures Z in order to compel him to pay certain arrears of revenue due from Z. A is guilty of an offence under this section.

(d) A, a zamindar, tortures a raiyat in order to compel him to pay his rent. A is guilty of an offence under this section.
  குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

No comments:

Post a Comment