Sunday 7 February 2016

பயங்கரமான ஆயுதங்களால் தன்னிச்சையாக தாக்கினால்


இ.த.ச 324

       யாராவது, இ.த.ச பிரிவு 334 லில் கூறியுள்ளதைப் போல அல்லாமல்,  தன்னிச்சையாக காயப்படுத்துதல் என்ற ஒரு செயலை செய்ந்து அதனால் ஒரு காயம்  உண்டாகின்றது. 

      அந்தக் காயமானது ஒரு மரணத்தை அல்லது கொடுங்காயத்தை உண்டாக்க பயன்படுத்தப்படும் ஆயுதத்தால் சுடுவதாலோ அல்லது அத்தகைய ஆயுதத்தால்  குத்துவதாலோ அல்லது அத்தகைய ஆயுதத்தால் வெட்டுவதாலோ உண்டாகின்றது.

     அல்லது நெருப்பினாலோ அல்லது நெருப்பால் காய்ச்சப்பட்ட ஒரு பொருளாளோ அல்லது அத்தகைய அபாயத்தை விளைவிக்ககூடிய விஷம், துருப்பிடித்த கருவி, வெடிப்பொருள் மனிதருடைய உடலில் அல்லது ரத்தத்தில் கலப்பதன் மூலம் அத்தகைய காயத்தை உண்டாக்க இயலும். மேலும் ஒரு மிருகத்தை ஏவியும் இதனை செய்வதும் சாத்தியமாக கூடும்.  

     எனவே இவற்றில் ஏதாவது ஒன்றைச் செய்து தன்னிச்சையாக காயத்தை உண்டாக்குவது குற்றமாகும்.


    
    இந்தக் குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


Section 324- Voluntarily causing hurt by dangerous weapons or means
 
              Whoever, except in the case provided for by section 334, voluntarily causes hurt by means of any instrument for shooting, stabbing or cutting, or any instrument which, used as weapon of offence, is likely to cause death, or by means of fire or any heated substance, or by means of any poison or any corrosive substance, or by means of any explosive substance or by means of any substance which it is deleterious to the human body to inhale, to swallow, or to receive into the blood, or by means of any animal, 

         shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, or with fine, or with both


 http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1776

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

No comments:

Post a Comment