Monday 15 February 2016

தினம் ஒரு சட்டம் - போலியாக மதிப்புள்ள காப்பீடு அல்லது உயிலை போலியாக உருவாக்கினால்


இ.த.ச 467


யாராவது போலியாக ஒரு ஆவணத்தை உருவாக்கி அத்தகைய ஆவணம் ஒரு காப்பிட்டு அல்லது உயில் அல்லது தத்து எடுக்கும் அதிகாரம் அல்லது ஒரு சொத்தை விற்பதற்கு கொடுக்கும் பவர் ஏஜன்ட் அல்லது காப்பிட்டின் மூலம் பெறப்படும் அசல் அல்லது வட்டி அல்லது டிவைடன்ட் அல்லது ஏதாவது வழி வகையில் பணத்தை பெறுவதற்கும் அல்லது சொத்தை பெறுவதற்கும், காப்பிட்டை பெறுவதற்கும், அல்லது ஒரு ஆவணத்தின் மூலம் போலியாக சான்று அளித்து பணத்தை பெறுவதற்கும் அல்லது ஒருவர் ஒரு மதிப்புள்ள பொருளை அல்லது சொத்தை பெற்றுக் கொண்டதாக போலியாக சான்றளித்து ஒரு ஆவணத்தை உருவாக்குவதும் குற்றமாகும்.


இந்தக் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துதண்டனையாக விதிக்கப்படும்.


Section 467- Forgery of valuable security, will, etc.

Whoever forges a document which purports to be a valuable security or a will, or an authority to adopt a son, or which purports to give authority to any person to make or transfer any valuable security, or to receive the principal, interest or dividends thereon, or to receive or deliver any money, moveable property, or valuable security, or any document purporting to be an acquittance or receipt acknowledging the payment of money, or an acquittance or receipt for the delivery of any moveable property or valuable security, shall be punished with *[imprisonment for life], or with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.

* Subs. by Act 26 of 1955, s. 117 and Sch., for "transportation for life" (w.e.f. 1-1-1956).
 http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1927
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

No comments:

Post a Comment