Tuesday 9 February 2016

தினம் ஒரு சட்டம் - பொது ஊழியரை தம் கடமையை செய்ய விடாமல் தாக்குதல் அல்லது காயப்படுத்தல்


இ.த.ச 332

      யாராவது ஒருவர் ஒரு பொது ஊழியரை தன்னிச்சையாக காயப்படுத்தி அவர்  கடமையை அல்லது அவர் சட்டப்பூர்வமாக ஆற்ற வேண்டிய கடமையை செய்ந்துக் கொண்டிருக்கும் போது தாக்கி காயப்படுத்துவதும், அல்லது அவர் கடமையை தடுக்கவும் அல்லது அவர் சட்டப்படி செய்ய வேண்டிய கடமையை செய்யவிடாமல் தடுப்பதற்காகவும் , அல்லது அத்தகைய கருத்துடனும் எண்ணத்துடன் தன்னிச்சையாக தாக்கி காயப்படுத்துவது குற்றமாகும்.

     இந்தக் குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.


Section 332- Voluntarily causing hurt to deter public servant from his duty

      Whoever voluntarily causes hurt to any person being a public servant in the discharge of his duty as such public servant, or with intent to prevent or deter that person or any other public servant from discharging his duty as such public servant, or in consequence of anything done or attempted to be done by that person in the lawful discharge of his duty as such public servant, 
 
    shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, or with fine, or with both.


இ.த.ச 333

      யாராவது ஒருவர் ஒரு பொது ஊழியரை தன்னிச்சையாக காயப்படுத்தி அவர்  கடமையை அல்லது அவர் சட்டப்பூர்வமாக ஆற்ற வேண்டிய கடமையை செய்ந்துக் கொண்டிருக்கும் போது தாக்கி கொடுங்காயப்படுத்துவதும், அல்லது அவர் கடமையை தடுக்கவும் அல்லது அவர் சட்டப்படி செய்ய வேண்டிய கடமையை செய்யவிடாமல் தடுப்பதற்காகவும் , அல்லது அத்தகைய கருத்துடனும் எண்ணத்துடன் தன்னிச்சையாக தாக்கி கொடுங்காயப்படுத்துவது குற்றமாகும்.

     இந்தக் குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.
Section 333- Voluntarily causing grievous hurt to deter public servant from his duty
 
    Whoever voluntarily causes grievous hurt to any person being a public servant in the discharge of his duty as such public servant, or with intent to prevent or deter that person or any other public servant from discharging his duty as such public servant, or in consequence of anything done or attempted to be done by that person in the lawful discharge of his duty as such public servant, 

    shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.

 http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1785

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

1 comment:

  1. We like your move to give awareness to public about IPC. It will be helpful if you make video with some incident.

    ReplyDelete