Tuesday 9 February 2016

தினம் ஒரு சட்டம் - கோபமூட்டப்பட்ட நிலையில் தன்னிச்சையாக தாக்கினால்


இ.த.ச 334

      யாராவது ஒருவர்,  எதிர்பாரத நிலையில் திடிரென்று கடுஞ்சினம் ஊட்டப்பட்டு, கடுஞ்சினத்தை ஊட்டியவர் அல்லாத தன்னிச்சையாக வேறு ஒருவரைத் தாக்கி ஒரு காயத்தை உண்டாக்கின்றார் அது எதிர் நபரின் கோபமூட்டப்பட்ட செயலாலும் அல்லது  எதிர்பாராத நிலையிலும் அவருக்கு கோபம் உண்டாக்கிய ஒருவரைத் தாக்க வேண்டும் என எத்தனிக்கிறார் ஆனால் அவர் அவரைத் தாக்காமல் வேறோருவரைத் தாக்குகிறார் இங்கு அவர் முன்றாவது நபரைத் தாக்கவேண்டும் என்ற எண்ணமும் அல்லது கருத்தும் அல்லது அவருக்கு துன்பம் உண்டாகும் என்ற தெளிவும் இல்லை.

     ஆனாலும் அவருக்கு தன்னிச்சையாக ஒரு காயத்தை உண்டாக்குகிறார் இது குற்றமாகும், 

    இந்தக் குற்றத்திற்கு ஒரு மாதம் வரையில் சிறைத் தண்டனை அல்லது ஐநூறு ருபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். 


Section 334- Voluntarily causing hurt on provocation

    Whoever voluntarily causes hurt on grave and sudden provocation, if the neither intends nor knows himself to be likely to cause hurt to any person other than the person who gave the provocation, 

    shall be punished with imprisonment of either description for a term which may extend to one month, or with fine which may extend to five hundred rupees, or with both.

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

No comments:

Post a Comment