Saturday 15 October 2016

வசூலான தொகை 65,250 கோடி பணத்தை என்ன பண்ணலாம்...?



தாமே வந்து கருப்பு பணத்தை கணக்கில் காட்டவேண்டும் என்ற திட்டத்தின் கீழ் வந்த தொகை 65,250 கோடி (65,250 * 1,00,00,000)
 




மத்திய மாநில அரசுகளுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம், தாமே வந்து கருப்பு பணத்தை கணக்கில் காட்டவேண்டும் என்ற திட்டத்தின் கீழ் வந்த தொகை 65,250 கோடி இந்தப் பணத்தைக் கொண்டு ,ஏழை எளிய மக்களுக்கு அடிப்படை வசதியையும், தாலுக்கா தோறும் பல வசதிகள் கொண்ட மருத்துவமணையும், 



மற்றும் அனைத்து தாலுக்க மற்றும் பேருராட்சி தோறும் மத்திய அரசின் கீழ் நடைப் பெறும் கேந்திரிய வித்யா பவன் பள்ளி போல பல பள்ளிகளையும் உருவாக்கவும், 




டோல் சாலைகளின் நிறுவனங்களின் மீதமுள்ள தொகையை ஒரே கணக்காக செட்டில் செய்துவிடவும்..அந்த டோல் சாலைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும், மேலும் பல புதிய சாலைகளையும் அமைக்கவும், பழைய சாலைகளை செப்பனிடவும்..

பல முக்கிய பண்டிகையின் போது பொது மக்கள் பயணிக்க சிறப்பு பேருந்துக்களை வாங்கவும்...

பல புதிய ரயில் மார்க்கத்தை உருவாக்கவும், பல புதிய ரயில்களை அறிமுகப்படுத்தவும்,
அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக புத்தகம், நோட்டு , உபகரணம் மற்றும் சிருடை வழங்கவும்,
மீதமுள்ள பணத்தில் குளம், குட்டை, கம்மாய், ஆறு ஆகியவற்றை தூறுவாரவும், புதிய தடுப்பணைகளை கட்டவும் இந்த பணத்தை மத்திய அரசு செலவு செய்ய வேண்டுமாய் தங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.


மேலும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடனாக தந்து விவசாயத்தை ஊக்குவிக்கவும், விவசாய சம்பந்தப்பட்ட உபகரணங்களை தயாரிப்பதற்கும் பயன்படுத்தலாம்.

ராணுவத்திலிருந்து ஒய்வுப் பெற்ற ராணுவ வீரர்களைக் கொண்ட ஒரு ஊர்காவல் படையை அமைத்து எல்லையில் பணிசெய்வது போன்று அவர்களை வைத்து ரோந்து பணியில் இரவிலும் பகலிலும் ஈடுப்படுத்த வேண்டும், இதனால் கூலிப்படை கொலை கொள்ளைப் போன்ற துணிகரமான குற்றங்கள் குறையும்.


மேலும் பணம் இருக்குமானால் ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்களை மாநிலத்திற்கு மேலும் இரண்டு என துவங்கவும்.
 

மேலும் பல மருத்துவ கல்லூரிகளையும், துறைச் சார்ந்த பல அலுவலகங்களை சொந்தமாக உருவாக்கவும், 

தங்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.

பொது மக்கள் நலன் கருதி நல்ல எண்ணத்தின் அடிப்படையில் கேட்டுக் கொள்கிறேன்.. மேலும் தங்களுக்கு இதுப் போன்ற பல திட்டங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்.

No comments:

Post a Comment