Monday 3 August 2015

படித்ததில் பிடித்தது - வீராணம் ஏரி சென்னையின் வளர்ப்புத்தாய்



         தற்போது தற்செயலாக மாலை முரசு முரளி முகப்பத்தகத்தில் இட்ட இடுக்கையை காண நேர்ந்தது. அது கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகில் உள்ள வீராணம் ஏரிப்பற்றிய பதிவு அது என்னை மிகவும் கவர்ந்தது.


     அதை தங்கள் பார்வைக்கு வைக்கும் முன் சில நிகழ்வுகளை பதிகின்றேன்.

          பல வருடங்களுக்கு முன்பு பால்ய வயதில்  நானும் என் நண்பனும் சேத்தியாதோப்புலிருந்து காட்டுமன்னார்கோவில் வரை நடந்தே சென்றோம். ஒருப்புறமே கடல் போன்ற தோற்றம் மறுப்புறம் பள்ளம் அதில் விவசாய நிலங்கள் எதிர் எதிரே இரண்டு வாகனங்கள் வந்தால் அவைகள் நின்று நிதானமாக கடக்க வேண்டும். போகும் வழியேல்லாம் ஒவ்வோரு படித்துறையிலும் குளித்துக்கொண்டும் சாலையில் வரும் கரும்பு லாரிகளில் இருந்து கரும்பை உடைத்து தின்றுக்கொண்டும் சென்றோம். 


      தாகம் எடுத்தால் அந்த  ஏரியின் தண்ணீரைக் குடித்துக்கொன்டும் கடந்தோம்.  அந்த ஏரியில் எப்படி இவ்வளவு தண்ணீர் வந்தது ஒரு வேளை தண்ணீர் கரையைத் தாண்டினால் என்னாகும் என்ற கண்னோட்டத்தில் கடந்தோம், ஏரியின் முடிவில் அதாவது காட்டுமன்னார்கோவில் முன்னால் லால்பேட்டை என்ற ஊர் அங்கு தர்க்காகளும் கோவில்களும் உண்டும் அங்கு சாப்பிட்டுவிட்டு சென்றதையும் என்னால் இன்றும் அதை மறக்க முடியாது.



     பிறகு பொன்னியின் செல்வன் நாவல் படிக்கும் போது வந்திய தேவன், குதிரையில் அந்த ஏரியைக் கடந்து செல்வார் என்று படிக்கும் போது அதன் நினைவுகள் என்னைத் தாலாட்டியது. பிறகு கீழ் கானும் பதிவை படிக்கும் போது என்னை பழைய நினைவுகள் தாலாட்டியது அது தான் இந்தப் பதிவு.





சேத்தியாதோப்பு ‍ காட்டுமன்னார்கோவில் வழி...

    " ராஷ்ட்ரகூடர்கள் எந்தநேரமும் தங்களை தாக்கலாம் என்பதை அறிந்த பராந்தக சோழன் தன்னுடைய படைகளை தன் மூத்த மகன் ராஜாதித்தன் தலைமையில் வடக்கு எல்லை நோக்கி அனுப்பிவைக்கிறார், சோழ தேசத்திலிருந்து புறப்பட்ட அந்த படை சில இடங்களில் தங்க நேர்கிறது. 

   அப்படி எங்கெல்லாம் அந்த படை தங்கி இருந்ததோ அங்கெல்லாம் சில அற்புதங்களை செய்து நகர்ந்துகொண்டே இருந்தது, முதலில் அந்த படை சோழ நாட்டிற்கும் திருமுனைப்பாடி நாட்டிற்கும் நடுவே தங்கிய போது கொள்ளிடத்தில் வெள்ளம் வரும் வேளையில் அந்த நீர் வீணாக சென்று கடலில் கலக்கின்றதே என்று வருந்திய ராஜாதித்தன் தன் படைகளை வைத்து பெரிய ஏரி ஒன்றை வெட்டினார், 



அது அனைவருக்கும் தெரிந்த வீரநாராயணன் ஏரி, "

1100 வருட கால அற்புதம். மறுகரை தெரியா, ந‌ல்மனிதன் ஆக்கிய கடல். 

தலைமுறை தலைமுறையாய் தண்ணீர் அருளும் அட்சய பாத்திரம்.

ராஜாதித்தன் , தன் தக‌ப்பனார் பராந்தகன் பெயரில் வெட்டிய ஏரி...

அடுத்த தலைமுறைகள் குறித்து தெளிவாய் சிந்தித்த, நம் முப்பாட்டன் கொடுத்த கொடை.

700 ஆண்டுகள் கழித்து, உருவாகப்போகும் சென்னையெனும் நகரின் தாகம் தீர்க்க‌, அன்றே திட்டமிட்ட மகான்.

அறிவியல் அறிந்த, நாகரீக மனிதர் நாம், எத்தனை ஏரி, குளங்கள் உருவாக்கி விட்டோம்.?. பிளாட் போட்டும், பிளாஸ்டிக் கொட்டியும், சாக்கடைப் பாய்ச்சியும் அழித்ததுதான் மிச்சம்.

இன்று கோரைப்புற்கள் வளர்ந்தும், காட்டு செடி பட‌ர்ந்தும், செடிகொடிகள் படர்ந்து தீவு போன்று உருவாகி, நீர்க் கொள்ளளவு குறைந்து காணப்படுகிறது. விவசாயத்துக்கான நீரை , குடி நீராய்ப் பெறும் நாம், பதிலுக்கு என்ன செய்யப் போகிறோம்.....?

நெல்லாடிய நிலமெங்கே, சொல்லாடிய அவை எங்கே என ஆயிரத்தில் ஒருவனாய் கேட்கும் முன்பே அனைவரும் விழித்தால் நன்று....

மேலும் படியுங்கள் 

நன்றி  http://kattumannarkoil.blogspot.in/2010/05/blog-post.html

நன்றி  https://ta.wikipedia.org/wiki/வீராணம்_ஏரி

நன்றி  https://www.facebook.com/photo.php?fbid=1614061692182758&set=a.1377165639205699.1073741828.100007368274379&type=1&fref=nf&pnref=story

நன்றி அனைவருக்கும் ............

    நாம் நம் வரலாற்றை மீள் பதிவு செய்வது 
    நம்மை நாம் நினைவில் கொள்ள...

2 comments:

  1. வணக்கம்,
    தங்கள் சில பதிவுகளை தவறவிட்டேன். இனி தொடர்கிறேன். நானும் அங்குள்ள ஊரினல் இன்று அல்ல,
    நல்ல பகிர்வு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி...

      Delete