Wednesday 12 August 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 225A - சிறையிலிருந்து பொது ஊழியர் தப்புவித்தல் அல்லது சிறைவைத்தல்




                 யாராவது ஒரு பொது ஊழியர் , குற்றம் செய்ந்தவரைச் சிறைப் பிடிக்கும் அல்லது காவலில் வைக்கும் அதிகாரம் பெற்றவர் தம் கடமையிலிருந்து தவறும் குற்றத்துக்காக பெறக்கூடிய தண்டனைப் பற்றி இ.த.ச பிரிவு 221 ,
இ.த.ச பிரிவு 222 மற்றும் இ.த.ச பிரிவு 223 ஆகிய பிரிவுகளில் கூறப்பட்டுள்ளது.

 அல்லது மற்ற சட்டங்களில் கூறப்பட்டுள்ளது போல தண்டிக்கப்பட வேண்டும் அப்படி சொல்லப்படாதபோது.


குற்றம் சாட்டப்பட்டவரை சிறைப்பிடிக்காமலும் அல்லது காவலில் வைக்கப்பட வேண்டியவரைக் காவலில் வைக்காமலும் அல்லது சட்டப்படி காவலில் வைக்கப்பட்டுள்ளவரைத் தப்பி ஒடும்படி, அல்லது தப்பி ஒட முயற்சி செய்யும் படி விட்டு விடும் பொது ஊழியருக்கு,

1- அந்த பொது ஊழியர் கருத்துடன் அந்தக் குற்றத்தைச் செய்திருந்தால் மூன்று ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும்.

2-அல்லது அந்த பொது ஊழியர்அஜாக்கிரதையால் அத்தகைய குற்றம் நேர்ந்து விட்டால் இரண்டு ஆண்டுகள் வரை வெறுங்காவல் அல்லது
அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும்.








2 comments:

  1. தகவலுக்கு நன்றி நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நண்பரே.........

      Delete