Wednesday 26 August 2015

தினம் ஓரு உரிமை - பொது நல வழக்கு


      PIL - Public Interest Litigation / SAL - Social Action Litigation  - பொது நல வழக்கு என்பதாகும் இது ஒரு புது வகையான நீதிப் பேராணையாகும் எந்த மனிதரும் அல்லது எந்த பொது நல அமைப்பும் இந்த ஆணையை வேண்டி நீதிமன்றத்தில் முறையிடலாம். பாதிக்கப்பட்ட மூன்றாவது நபருக்காக உதாரணமாக சொல்ல வேண்டுமானால் சூற்றுசூழல் சட்டம் (Environmental Law)  உருவானது இதனைஅடிப்படையாக கொண்டு தான். 


   தற்போது இந்த சட்டம் வேகமாக வளர்ந்து மனித உரிமை சட்டம், நுகர்வோர்  சட்டம், சிறைசாலை சட்டம், தொழிலாளர் நல சட்டம், குறைந்த ஊதிய உயர்வு சட்டம், சேம நல நீதி சட்டம், குழந்தை தொழிலாளர் சட்டம் மற்றும் முதியோர்கள் பெற்றோர் பாதுக்காப்பு சட்டம் என பல பரிணாமங்களை அடைந்துள்ளது.


மேலும் சில விவரங்கள்

       இவ்வழக்கின் முக்கிய சிறப்பம்சம். பாதிக்கப்பட்டவர், உயர் நீதிமன்றத்தில், 200 ரூபாய் செலுத்தி, பொது நல வழக்குக்கான மனுவை, தாக்கல் செய்யலாம்.பாதிக்கப்பட்ட நபர் அல்லது குழு, ஒரு அஞ்சல் அட்டை மூலம், பாதிக்கப்பட்ட விவரங்களை, உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்தாலே, அது பொது நல வழக்காக ஏற்கப்படும். பத்திரிகை செய்திகளை அடிப்படையாக வைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு காண, உயர் நீதிமன்றமே தன்னிச்சையாகவும் வழக்கு தொடரும். வழக்கு தொடுக்கும் முன், மனுவின் நகல்களை பாதிப்பு ஏற்படுத்தியவருக்கு முறையாக அனுப்பி, அந்த ஆதாரத்தை, நீதிமன்ற மனுவுடன் இணைத்து, தாக்கல் செய்ய வேண்டும்.உயர் நீதிமன்றம், பாதிப்பு ஏற்படுத்தியவரை வரவழைத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்டே, உரிய தீர்ப்பு வழங்கும். திருமண மண்டபம், கேளிக்கை விடுதி, பொது இடங்களில், அளவுக்கு மீறி அதிக ஒலி எழுப்பி பாதிப்பு ஏற்படுத்தும் போது, பொதுநல வழக்கு தொடுக்கலாம்.
தொழிற்சாலை கழிவுகளால், விஷவாயு வெளியேறுவது மற்றும் விவசாயம் பாதிக்கப்படுவது; குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது; "திருமண திட்டம்' என்ற பெயரில், பெண்களுக்கு குறைந்த ஊதியம் வழங்குவது; கட்டுமான பணிகளுக்காக, சட்டத்திற்கு எதிராக பசுமை மரங்களை அழிப்பது; பொதுமக்கள் பாதிக்கும்படி, அதிக வரிகளை அரசு தன்னிச்சையாக அமல்படுத்தினாலும், பொதுநல வழக்கு தொடுக்கலாம்.மேலும், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் விளம்பர பலகைகளை அகற்ற; சிறைச் சாலைகளில் எவ்வித காரணமும், ஆதாரமும் இன்றி, காலவரையின்றி வாடும் சிறை கைதிகளை விடுவிக்க; உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளின் லஞ்ச நடவடிக்கைகள் தொடர்பாகவும், பொதுநல வழக்கு தொடுக்கலாம்.


நன்றி  THIRU2050.BLOGSPOT.COM


ஆனால் இதில் தற்போது நிறைய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. சிலர் இந்த வழக்கை தங்களைப் பிரபலப்படுத்த பயன்படுத்துகின்றார்கள் என்பதால்.

அதனால் இதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது அவை பின் வருவன

1. வழக்கு தொடுப்பவர் வருமான வரி செலுத்துபவராக இருக்க வேண்டும்.

2. வழக்கு தொடுப்பவர் அவ்வாறு வருமான வரி செலுத்தும் பான் அட்டை இல்லை என்றால் தன்னுடைய வருமானத்துக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

3. வழக்குத் தொடுப்பவர் பிறருடைய வேண்டுதலால் அவ்வாறு செய்வாறாயின் அவருடைய வருமானத்துக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கேன பல எதிர்ப்புக்கள் எழந்துள்ளன என்பது வேறு கதை.


இந்த  பொது நல வழக்கை சில சமயங்களில் உபயோகிக்க முடியாது தலையீட்டுரிமை (locus standi) இருக்கும் போது பொது நல வழக்கு சில சமயங்களில் தோற்றுவிடுகின்றது.

 சில பொதுநல வழக்கு விபரங்கள்-

1. M.C.Mehta v/s UNION OF INDIA (AIR 1987 SC 802)
2. The Common wealth Games Case Against Kalmadia

 



In Indian law, public interest litigation means litigation for the protection of the public interest. It is litigation introduced in a court of law, not by the aggrieved party but by the court itself or by any other private party.





Public-Interest Litigation is litigation for the protection of the public interest. In Indian law, Article 32 of the Indian constitution contains a tool which directly joins the public with judiciary. A PIL may be introduced in a court of law by the court itself (suo motu), rather than the aggrieved party or another third party. For the exercise of the court's jurisdiction, it is not necessary for the victim of the violation of his or her rights to personally approach the court. In a PIL, the right to file suit is given to a member of the public by the courts through judicial activism. The member of the public may be a non-governmental organization (NGO), an institution or an individual. 

   The Supreme Court of India, rejecting the criticism of judicial activism, has stated that the judiciary has stepped in to give direction because due to executive inaction, the laws enacted by Parliament and the state legislatures for the poor since independence have not been properly implemented.Subodh Markandeya well known Senior Advocate of Supreme court of India and Judicial activist believes that public interest litigation is the principal legal remedy For a common man and it is main weapon of judicial activist .

Thanks Wiki

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.    மேலும் வழக்குக்குரியதல்ல.  

1 comment:

  1. தகவலுக்கு நன்றி நண்பா...

    ReplyDelete