Friday, 14 August 2015

தினம் ஓரு உரிமை - இந்திய குடிமகன் உரிமை


பாகம் III - சம உரிமை



இந்திய அரசியலமைப்பு சாசனம் 14 முதல் 18 வரை இப்போது காண்போம்

Article 14. Equality before law

   இந்தியாவில் உள்ள குடிமக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சம உரிமையும், சட்டத்தின் மூலம் சமமான பாதுக்காப்பையும் தர, அரசு மறுக்க கூடாது.

Article 15.  Prohibition of discrimination on grounds of religion, race, caste, sex or place of birth

1- சமயம், சாதி, இனம், பால், பிறப்பிடம், மொழி அல்லது வேறு எந்தக் காரணத்துக்காகவும், எந்த குடிமகனிடமும், அரசு பாகுப்பாடு காட்டக் கூடாது

2- சமயம், சாதி, இனம், பால், பிறப்பிடம், மொழி அல்லது அவற்றில் எதேனும் ஒரு காரணத்துக்காக எந்த குடிமகனையும்,


-அங்காடி, உணவுச்சாலை, தங்கும் இடம், பொழுதுப்போக்கு நிகழ்ச்சி நடக்கும் இடங்கள் ஆகியவற்றுக்குள் செல்லக்கூடாது,
- முழுவதும் அல்லது பகுதி பொது நிதியில் உருவாக்கப்பட்ட குடிநீர் கிணறுகள், குளங்கள், குளிக்கும் இடங்கள், வழித்தடங்கள் மற்றும் பொதுமக்களுக்கான இடங்கள் ஆகியவற்றை பயன் படுத்தக்கூடாது,

என்ற குறைப்பாட்டைக் காட்டி, தடுக்கவும் அல்லது நிபந்தனைகள் விதிக்ககூடாது.

3. சமுதாயத்திலும் கல்வியிலும் பின் தங்கிய வகுப்பினராக உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் அல்லது தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் ஆகியோரின் முன்னேற்றத்திற்கான சிறப்பான ஏற்பாடுகளை அரசு மேற்கொள்தை தடைச்செய்வதாக இந்த ஷரத்தையும் அல்லது ஷரத் 29 - 2 வது கூறில் உள்ள வற்றையும் எடுத்துக் கொள்ளக்கூடாது.


Article 16.
Equality of opportunity in matters of public employment

     (1) அரசின் கீழ் உள்ள எத்தகைய அலுவல்களில் நியமிக்கப்படுவதற்கும், பணியாற்றுவதற்கும் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்புத் தரப்பட வேண்டும்.

     (2) இந்திய குடிமக்கள் எவரையும், சமயம், சாதி,இனம், பால், பிறப்பிடம், மொழி, குடியிருப்பு அல்லது அவற்றில் ஒன்றைக் காரணம் காட்டி , அரசுப்பணியில் நியமிக்கப் படுவதற்கு , பணியாற்றுவதற்கு தகுதியற்றவர் என்று கூறவும் பாகுபாடு காட்டவும் கூடாது.

      (3) ஒர் அரசு அல்லது மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் அல்லது உள்ளாட்சி ஆகியவற்றில் உள்ள ஒரு நியமனம் அல்லது பணி்க்கு அமர்த்தப்படுவதற்கு முன்னர் ~ அவர் ஒரு குறிப்பிட்ட பணிக்கு அல்லது நியமனத்துக்கு ஒரு பகுதி அல்லது வட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதை அந்தப் பிரதேசம் அல்லது வட்டம் அல்லது உள்ளாட்சி  விரும்பும் போது அதனை  இந்தப்பிரிவுன் கீழ் நாடாளுமன்றம் கட்டுப்படுத்தாது.

     (4) அரசுப் பணியிடங்களில் பின்தங்கிய வகுப்பினர்க்கு அரசு இடஒதுக்கீடு சலுகை அளிக்கும் போது இந்த ஷரத்தின் மூலம் அதனைத் தடை செய்ய மூடியாது.

    (4‌‌A) மாநில அரசு அளிக்கும் பதவி உயர்வு அது பின்தங்கிய வகுப்பைப் பொருத்தோ அல்லது பணிமூப்பை பொறுத்தோ அளிப்பது எதனையும் இந்தப்பிரிவு கட்டுப்படுத்தாது.


   (4B)  இந்த ஷரத்தின் முலம் பின்தங்கிய வகுப்பைப் சாரந்தவருக்கு ஒதுக்கப்படும் இடஒதுக்கீட்டை ஷரத்4 மற்றும் ஷரத்4A படி, பின்தங்கிய வகுப்பைப் சாரந்தவருக்கு ஒதுக்கப்படும் இடஒதுக்கீட்டை முழுவதும் நடப்பாண்டில் ஒதுக்கீடு செய்ய முடியாத போது அதனை அடுத்த வரும் வருடம் அல்லது வருடங்களில் அத்தகைய வகுப்பினர்க்கு ஒதுக்கும் அரசின் கொள்கைக்கு அது மொத்த இடஒதுக்கீட்டில் ஐம்பது சதவிதத்துக்கு மேல் இல்லாத போது இந்த ஷரத்தின் மூலம் கட்டுப்படுத்தலாகாது. 

   (5) சமயச் சார்புள்ள ஒரு பணியில் அல்லது அத்தகைய சார்புடைய அமைப்பில் அல்லது அதன் நிர்வாகக் குழுவில் அமர்த்தப்படுகின்றவர் அத்தகைய சமயத்தைச் சார்ந்தவராக அல்லது அத்தகைய சமயச் சார்புடையவராக இருக்க வேண்டும் என்று விதிக்கக் கூடிய சட்டம், இந்த ஷரியத்தால் பாதிக்கப்படாது

Article 17. Abolition of Untouchability.

       தீண்டாமை என்னும் கொடுமை தடைசெய்யப்பட்டுள்ளது, மேலும் அதனை எந்த வகையிலும செயல்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தீண்டாமையின் விளைவாக எழும் எத்தகைய குறைபாடும் சட்டப்படி தண்டிக்க கூடிய குற்றமாகும்.


 
Article 18. Abolition of titles.

   (1) - படைப்பிரிவு அல்லது கல்வித் தகுதி ஆகியவற்றின் அடிப்படையின்றி , எத்தகைய பட்டத்தையும் அரசு வழங்கக்கூடாது.

    (2)  இந்திய குடிமகன்கள் யாரும் எந்த அயல் நாட்டின் பட்டத்தையும் அந்த நாட்டின் நலத்தை மட்டும் விரும்பி ஏற்க்கக்கூடாது.

    (3)  அவ்வாறு அவர் இந்திய குடிமகனாக இல்லாவிடினும் இந்திய அரசின் நம்பிக்கைக்குரிய பணியை அல்லது இந்திய அரசின் கீழ் பயன்பெறக் கூடிய ஒரு நபர். இந்திய குடியரசுத் தலைவரின் அனுமதியின்றி, ஒரு அயல் நாட்டிலிருந்து எந்த பட்டத்தையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது.

    (4) இந்திய அரசின் கீழ் ஒரு நம்பிக்கைக்குரிய அலுவலகத்தையும் அல்லது ஊதியத்தையும் பெறும் நபர் யாரும், இந்திய குடியரசு தலைவரின் அனுமதியின்றி, எந்த அயல் நாட்டிலிருந்தும் எத்தகைய பரிசையும் அல்லது சன்மானத்தையும் அல்லது பதவியையும் அல்லது எத்தகைய சலுகையையும் பெறக்கூடாது.




FUNDAMENTAL RIGHTS

General

Art 12.           Definition Of State or Govt.

Art 13.           Laws inconsistent with or in derogation of the fundamental rights.

Right to Equality

Art 14.          Equality before law.

Art 15.          Prohibition of discrimination on grounds of religion, race, caste, sex or place of birth.

Art 16.          Equality of opportunity in matters of public employment.

Art 17.          Abolition of Untouchability.
   Art 18.          Abolition of titles.


குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக கொள்ளக்கூடாது.


Source http://lawmin.nic.in/olwing/coi/coi-english/Const.Pock%202Pg.Rom8Fsss%286%29.pdf

Download http://www.hindisahityadarpan.in/2013/09/download-constitution-of-India-hindi-english-free.html

Hindi & English Version  http://lawmin.nic.in/coi/partIII.pdf

3 comments:

  1. அருமை புகைப்படங்கள் உள்பட வாழ்த்துகள் நண்பரே...
    நலம்தானே....

    ReplyDelete
    Replies
    1. நலம் தான் ... நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள் நண்பரே...
      இந்த வாழ்த்தும் உள்ளம் எல்லாருக்கும் கிடைக்காது...

      Delete