Monday 10 August 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 222 & 223 - சிறையிலிருந்து தப்புவித்தல்

  


இ.த.ச 222    

      யாராவது ஒருவர், ஒரு நீதிமன்றத்தின் உத்திரவுப்படி ஒரு நபருக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது அல்லது அவரை மேல் விசாரனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்.

     குற்றம் சாட்டப்பட்டவர்களை அல்லது சட்டப்படி குற்றம் சாட்டப்பட வேண்டியவர்களைச் சிறைப்பிடிப்பதற்கும் அல்லது காவலில் வைப்பதற்கும், ஒரு அரசாங்க பொது ஊழியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

     அப்படி அதிகாரம் வழங்கப்பட்டுள்ள
ஒரு அரசாங்க பொது ஊழியர் அந்த நபரைத் தப்பிக்க விட்டு விடுகிறார் அல்லது தப்பி ஒட முயற்சி செய்வதற்கு துணையாக இருக்கிறார்.


     இப்போது அந்த பொது ஊழியர் தண்டனைக்குரியவராகிறார்.

     அத்தகைய தப்புவிக்கும் குற்றவாளி மரணத்தண்டனைக் குற்றவாளியானால்  அந்தப் பொது ஊழியருக்கு ஆயுள் தண்டனை அல்லது பதினான்கு ஆண்டுகள் வரை சிறைக்காலுடன் கூடிய அபராதம் தப்புவித்தவர்களுக்கு வழங்கப்படும்.  

      அத்தகைய
தப்புவிக்கும் குற்றவாளி ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரைத் சிறைக்காவலுடன் கூடிய தண்டனையாக இருந்தால் 
அந்தப் பொது ஊழியருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் அல்லது ஏழுஆண்டுகள் வரை சிறைக்காவல் மட்டும் தண்டனையாக வழங்கப்படும்.

    அத்தகைய தப்புவிக்கும் குற்றவாளி பத்துஆண்டுகளுக்கு உட்பட்ட குற்றத்தைப் புரிந்திருந்தால் 
அந்தப் பொது ஊழியருக்கு மூன்று ஆண்டுகள் வரை தண்டனையாக விதிக்கப்படும் அல்லது மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும் .    



 இ.த.ச 223  

        குற்றம் சாட்டப்பட்டுள்ள அல்லது தண்டிக்கப்பட்டுள்ள அல்லது விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒருவரை காவல் காக்கும் பொருப்பில் உள்ள ஒரு அரசாங்க பொது ஊழியர், தம்முடைய அசட்டையால் அந்தக் குற்றவாளியை காவலில் இருந்து தப்பி ஓடும்படி விட்டுவிட்டால், 

       அந்த அரசாங்க பொது ஊழியருக்கு இரண்டு ஆண்டுகள் வரை வெறுங்காவல் அல்லது அபராதம் அல்லது சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.

  


Section 222 in The Indian Penal Code
 
222. Intentional omission to apprehend on the part of public servant bound to apprehend person under sentence or lawfully committed.
 
Whoever, being a public servant, legally bound as such public servant to apprehend or to keep in confinement any person under sentence of a Court of Justice for any offence 1[or lawfully committed to custody], intentionally omits to apprehend such person, or intentionally suffers such person to escape, or intentionally aids such person in escaping or attempting to escape from such confinement, shall be punished as follows, that is to say:-

With 2[imprisonment of life] or with imprisonment of either description for a term which may extend to fourteen years, with or without fine, if the person in confinement, or who ought to have been apprehended, is under sentence of death; or

With imprisonment of either description for a term which may extend to seven years, with or without fine, if the person in confinement or who ought to have been apprehended, is subject, by a sentence of a Court of Justice, or by virtue of a commutation of such sentence, to 2[imprisonment for life] 3[***] 4[***] 5[***] 6[***] or imprisonment for a term of ten years or upwards; or

With imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both, if the person in confinement, or who ought to have been apprehended is subject, by a sentence of a Court of Justice, to imprisonment for a term not exceeding to ten years 1[or if the person was lawfully committed to custody].

1. Ins. by Act 27 of 1870, sec. 8.

2. Subs. Act 26 of 1955, Sec. 117 and Sch., for "transportation for life" (w.e.f. 1.1.1956).

3. The words "or penal servitude for life" omitted by Act 17 of 1949, sec.2 (w.e.f. 6-4-1949).

4. The words "or to" omitted by Act 36 of 1957, sec.3 and sch.II.

5. The word "transportation" omitted by Act 26 of 1955, sec.117 and sch.(w.e.f. 1-1-1956).

6. The words "or penal servitude" omitted by Act 17 of 1949, sec.2 (w.e.f.6-4-1949).  



IPC Section 223- Escape from confinement or custody negligently suffered by public servant

Whoever, being a public servant legally bound as such public servant to keep in confinement any person charged with or convicted of any offence 1[or lawfully committed to custody], negligently suffers such person to escape from confinement, shall be punished with simple imprisonment for a term which may extend to two years, or with fine, or with both.

1. Subs. by Act 26 of 1955, sec. 117 and Sch, for "transportation for life" (w.e.f. 1-1-1956).


Source http://indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1665


 Picture http://www.indianpenalcode.in/wp-content/uploads/2013/12/ipc-223-300x300.png

No comments:

Post a Comment