Wednesday 19 August 2015

தினம் ஓரு உரிமை - வழிப்பாட்டு சுதந்திரம் - 1



இந்திய அரசியலமைப்பு சாசனம் ஷரத் 25 முதல்

பாகம் III - வழிப்பாட்டு சுதந்திரம் - தொடர்ச்சி




ஷரத் 25 

 (1)
             பொது ஒழங்கு, ஒழுக்கம் மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றுக்கும் உட்பட்டு, நாம் அனைவரும் நம் மனசாட்சிப்படி செயல்படுவதற்கு சுதந்திரம் உடையவர்களாகவுள்ளோம்.
 
         நாம் அனைவரும் நாம் சார்ந்திருக்கும் ஒரு மதத்தை தழுவ, மேற்கொள்ள மற்றும் பரப்புவதற்கு உரிமை உடையவர்களாவோம்.

(2)  இந்தக் ஷரத்தில் உள்ளவை எதுவும்



   (அ) – மதவழிப்பாட்டுடன் தொடர்புடைய பொருளாதார நிலை, நீதி, அரசியல் மற்றும் இதர மதச்சார்புடைய செயல் பாட்டுக்கும்,

  (ஆ) - சமுதாய நல்வாழ்வுக்கும் சீர்திருத்தத்துக்கும் அல்லது இந்துக்களுடைய கோவில்கள் மற்றும் மதச் சார்புற்ற இடங்களை இந்து மதத்தைச் சார்ந்த எல்லா வகுப்பினர்களும் பாகுபாடின்றி திறந்து வைக்கப்படுவதற்குத் தேவைப்படும் சட்டத்தை அமல்படுத்துவதற்கும் அல்லது அத்தகைய புதிய சட்டத்தை உருவாக்குவதற்கும் இந்த அரசைத் தடுக்க முடியாது.


விளக்கம்-1 – குர்பான் என்னும் குறுவாள் களை வைத்திருப்பதும் அல்லது அணிந்திருப்பதும் சீக்கிய மதத்தின் ஒர் அங்கமாகக் கருதப்படும்

விளக்கம் 2- 2 வது கூறின்  (ஆ) – வது கிளைக்கூறின் படி உள்ள இந்து என்ற சொல், சீக்கிய, ஜைன, புத்த மதங்களைச் சார்ந்தவர்களையும் குறிப்பதோடு, இந்துக் கோவில், மதச் சார்புற்ற இடங்கள் என்பதும் அத்தகைய சீக்கிய, ஜைன, புத்த சமயக் கோவில்களையும் மற்ற மதச் சார்புற்ற இடங்களையும் குறிப்பதாகும்.



25. Freedom of conscience and free profession, practice and propagation of religion 


(1) Subject to public order, morality and health and to the other provisions of this Part, all persons are equally entitled to freedom of conscience and the right freely to profess, practise and propagate religion 

(2) Nothing in this article shall affect the operation of any existing law or prevent the State from making any law
(a) regulating or restricting any economic, financial, political or other secular activity which may be associated with religious practice; 

(b) providing for social welfare and reform or the throwing open of Hindu religious institutions of a public character to all classes and sections of Hindus 
 Explanation-I 
The wearing and carrying of kirpans shall be deemed to be included in the profession of the Sikh religion 
Explanation-II
In sub clause (b) of clause reference to Hindus shall be construed as including a reference to persons professing the Sikh, Jaina or Buddhist religion, and the reference to Hindu religious institutions shall be construed accordingly



ஷரத்  26

           பொது ஒழுங்கு, ஒழுக்கம் மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றுக்கு கட்டுப்பாட்டு, ஒரு மதத்தைச் சார்ந்தவர்களும் அல்லது அம்மதப் கிளைப் பிரிவைச் சார்ந்தவர்களும் –

(அ) - தம் சார்ந்த மதத்துக்காகவும், அறங்களுக்காகவும்  , அமைப்புக்களை உருவாக்குவதற்கும், அமைப்பதற்காகவும், பாரமரிப்பதற்காகவும் -

(ஆ) - தம்முடைய மதம் சம்பந்தப்பட்ட விவகாரங்களைத் தாம் நிர்வகிப்பதற்கும்

(இ) - தம்முடைய மதம் சம்பந்தப்பட்ட சொத்துக்களைப் பெறுவதற்கும், உரிமையுடன் வைத்திருப்பதற்கும் மற்றும்

(ஈ) - அத்தகைய சொத்துக்களைச் சட்டப்படி நிர்வகிப்பதற்கும்

ஒரு மதத்தைச் அல்லது பிரிவைச் சார்நதவர்கள் உரிமை உடையவர்களாவர்.



26. Freedom to manage religious affairs Subject to public order, morality and health, every religious denomination or any section thereof shall have the right 


(a) to establish and maintain institutions for religious and charitable purposes; 

(b) to manage its own affairs in matters of religion;

(c) to own and acquire movable and immovable property; and

(d) to administer such property in accordance with law




குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

1 comment:

  1. நல்ல தகவல்கள் நண்பரே வாழ்த்துகள்

    ReplyDelete