Monday 17 August 2015

தினம் ஓரு உரிமை - சுரண்டலிருந்து சுதந்திரம்


இந்திய அரசியலமைப்பு சாசனம் ஷரத் 23 முதல்

பாகம் III - சுரண்டலிருந்து சுதந்திரமாக இருக்கும் உரிமை - தொடர்ச்சி







Article 23. மனிதர்களை அடிமையாக வைத்திருப்பது

(1)  மனிதர்களை விலைக்கு விற்பதும் ‍அல்லது விலைக்கு வாங்குவதும்  ‍அல்லது வற்புறுத்தி வேலை வாங்குவதும், பிச்சை எடுக்க செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. அப்படி அத்துமீறிச் செயல்படுவோர்க்கு அத்தகைய குற்றத்துக்காகச் சட்டப்படி தண்டனை வழங்கப்படும்.

(2) பொதுகாரியங்களுக்காக் பொது மக்களின் விருப்பமன்றி கட்டாயப்படுத்தி வேலை வாங்கக்கூடாது என்று இந்த ஷரத்தில் உள்ளவைகளை அரசாங்கத்தைத் தடுக்க முடியும், எப்போதுதெனில் அத்தகைய பொதுகாரியங்களுக்கான வேலையைச் சாதி, சமயம், இனம், வகுப்பு என்ற பாகுபாடு காட்டாமல் வாங்கப்பட வேண்டும்.









Article  24 - குழந்தைகளை பணியில் அமர்த்துவது

     பதினான்கு வயதுக்குக் குறைந்த குழந்தைகளை எந்தத் தொழிற்சாலையிலும் அல்லது சுரங்கத்திலும் அல்லது வேறு எந்த விதமான அபயாகரமான வேலைகளிலும் சிறுவர்கள் எவரையும் அமர்த்தக்கூடாது.




Article 23(1) in The Constitution Of India 1949
(1) Traffic in human beings and begar and other similar forms of forced labour are prohibited and any contravention of this provision shall be an offence punishable in accordance with law 
(2) Nothing in this article shall prevent the State from imposing compulsory service for public purpose, and in imposing such service the State shall not make any discrimination on grounds only of religion, race, caste or class or any of them  



 24. Prohibition of employment of children in factories, etc 
No child below the age of fourteen years shall be employed to work in any factory or mine or engaged in any other hazardous         employment



குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

2 comments:

  1. தகவல் நன்று நண்பரே

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete