Friday 14 August 2015

தினம் ஓரு உரிமை - இந்திய குடிமகனின் சுதந்திரம்

என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்


இந்திய அரசியலமைப்பு சாசனம் ஷரத் 19 முதல்

பாகம் III - சம உரிமை - தொடர்ச்சி



Article 19. 


(1) - இந்திய குடிமக்கள் யாவரும்-

(1)(a)(அ) - சுதந்திரமாக சிந்திப்பதற்கும் மற்றும் பேசுவதற்கும் எடுத்துச் சொல்வதற்கும்

(1)(b)(ஆ) - ஆயுதங்களின்றி அமைதியாக கூட்டம் கூடுவதற்கும்,

(1)(c)(இ) - சங்கங்களையும் குழுக்களை ஏற்படுத்துவதற்கும்,

(1)(d)(ஈ) - இந்திய எல்லைக்குள் எந்த இடத்திற்கும் தடையுமின்றி நடமாடுவதற்கும்

(1)(e)(உ) - இந்திய எல்லைக்குள் எந்த இடத்திற்கும் சென்று தங்குவதற்கும்

(1)(f)(ஊ) - இந்திய எல்லைக்குள் எந்த இடத்திலும் சொத்துக்களை வாங்கவும் , விற்பனை செய்யவும், வைத்திருக்கவும் - [நீக்கப்பட்டது]

(1)(g)(எ) - எந்தத் தொழிலையும் செய்வதற்கும், நடத்துவதற்கும், சமுக விரோதமில்லாத எந்தப் பணியில் ஈடுபடுவதற்கும்,
சமுக விரோதமில்லாத எந்த வாணிகத்தைச் செய்வதற்கும்

ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது.




19.(2) -

              இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் பண்பாட்டையும் கருத்தில் கொண்டும் மேலும் அயல் நாடுகளுடன் உள்ள நல்லுறவைக்கருத்தில் கொண்டும் பொது ஒழுங்கு, பண்பாடு, ஒழுக்கம், நீதிமன்றத்தை அவமதித்தல் , அவதூறு செய்தல் அல்லது குற்றங்களை தூண்டுதல் ஆகிய செயலை அல்லது செயல்களைத் தடுப்பதற்காக ஒரு சட்டத்தை இயற்றுவதையும் அல்லது நியாயமான கட்டுப்பாடுகளை விதிப்பதையும் 19-(1)(அ) கூறுரைத் தடை செய்வதாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

உதாரணம் - இந்திய இறையான்மைக்கு எதிராக பேசக்கூடாது, இந்தியாவிற்கு எதிராக கலகம் புரிய நாம் இந்த 19-(1)(அ) கூரை பயன்படுத்தக்கூடாது.


19.(3) -

              இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் பண்பாட்டையும் கருத்தில் கொண்டும் மேலும் பொது ஒழுங்கை நிலை நாட்டுவதற்கும் அல்லது பொது ஒழுங்கை நிலை நாட்டுவதற்காக முன் கூறப்பட்ட பிரிவில் சொல்லப்பட்ட உரிமைகளுக்கு ஒரு நியமான கட்டுப்பாட்டை விதிக்கக்கூடிய ஒரு சட்டம் உருவாக்கப்படுவதை அல்லது அமல்படுத்துவதை 19-(1) (ஆ) - கிளைக்கூறில் உள்ளவை பாதிக்காது.

உதாரணம்-தீவிரவாதத்துக் எதிரான சட்டங்கள்
 

19.(4) -

               பொதுமக்களிடம் பொது ஒழுங்கை நிலை நாட்டுவதற்காக  மேலும் இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் பண்பாட்டையும் ஒப்புயர்வற்ற தன்மையையும் கருத்தில் கொண்டும் முன் கூறப்பட்ட 19-(1) (இ) பிரிவில் சொல்லப்பட்ட உரிமைகளுக்கு ஒரு நியமான காட்டுப்பாட்டை விதிக்கக்கூடிய ஒரு சட்டம் உருவாக்கப்படுவதை அல்லது அமல்படுத்துவதை - 19-(1) (இ) கிளைக்கூறில் உள்ளவை பாதிக்காது.

உதாரணம் - அத்தகையக் குழுக்கள் இந்திய ஒற்றுமைக்கு எதிராக இருக்ககூடாது அல்லது தீவிரவாத குழுவாக இருக்க கூடாது.
  
19.(5) -
                பொதுமக்களின் நலன் கருதி அல்லது பழங்குடி மக்களின் நலனைப் பாதுகாப்பதற்காக நியாயமான கட்டுப்பாடுகளை வகுக்கும் சட்டத்தை உருவாக்குவதை 19-(1) (ஈ) மற்றும்  19-(1) (உ) - கூறியுள்ளவைகளை பாதிப்பதாகக் கருதக்கூடாது.

உதாரணம் - இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு நாம் செல்வதையும் கலாச்சாரத்தை தெரிந்துக் கொள்வதைக் கூறிக்கும்


 19.(6)
                பொதுமக்களின் நலன் கருதி 19-(1) (எ) கிளைக் கூறின்படி வழங்கப்பட்டுள்ள சுதந்தரத்துக்கு நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடிய சட்டத்தை இயற்றாமல் தடுப்பதற்கும் அல்லது இயற்றப்பட்டுள்ள சட்டத்தின் விளைவுகளை அமல்படுத்தாது தடுப்பதற்கும் இந்தக் 19-(1) (எ)  கூறில் உள்ளவை எதுவும் பாதிக்காது.

மேலும் குறிப்பாக

(i)  ஒரு குறிப்பிட்ட வேலை அல்லது வாணிபம் அல்லது தொழில் நடத்தத் தேவையான தொழில் தகுதி அல்லது வேலைக்குரிய தகுதிகளை வளர்த்துக்கொள்ள அல்லது

(ii)- ஒரு தொழில் அல்லது வாணிபம் அல்லது தொழிற்சாலை அல்லது பணியினை முழுவதும் அல்லது அவற்றின் ஒரு பகுதியைக் குடிமக்கள் பங்கேற்பதைத் தவிர்த்து, அதனை அரசு அல்லது அரசுக்கு சொந்தமான ஒரு வாரியம் அல்லது அரசுக்கு கீழுள்ள ஒரு வாரியம் நடத்துவது

என்பதை நிர்னயிக்க தேவைப்படும் ஒரு சட்டம் இயற்றப்படுவதையும் அல்லது அமலிலுள்ள ஒரு சட்டத்தை வலியுறுத்துவதையும், இந்தக் கிளைக் கூறிலுள்ளவை தடைச் செய்யாது.
  
உதாரணம் - மருத்துவம் பார்க்க வேண்டும் என்றால் MBBS அல்லது அது தொடர்பான படிப்பு படித்திருக்க வேண்டும் என்ற நடைமுறை. 
 


Right to Freedom

Article 19.  Protection of certain rights regarding freedom of speech, etc.

1. All citizens shall have the right-

    1-(a) to freedom of speech and expression;

    1-(b) to assemble peaceably and without arms;

    1-(c) to form associations or unions;

    1-(d) to move freely throughout the territory of India;

    1-(e) to reside and settle in any part of the territory of India;

    1 [and] 2

    1-(f) * * * * *[omitted]

    1-(g) to practise any profession, or to carry on any occupation,     trade or business. 3


[(2) Nothing in sub-clause (a) of clause (1) shall affect the operation of any existing law, or prevent the State from making any law, inso far as such law imposes reasonablerestrictions on the exercise of the right conferred by the said sub-clause in the interests of 4 [the sovereignty and integrity of India,] the security of the State, friendly relations withforeign States, public order, decency or morality, or in relation to contempt of court, defamation or incitement to an offence.] 


(3) Nothing in sub-clause (b) of the said clause shall affect the operation of any existing law in so far as it imposes, or prevent the State from making any law imposing, in the interests of  4 [the sovereignty and integrity of India or] public order, reasonable restrictions on the exercise of the right conferred by the said sub-clause. 


(4) Nothing in sub-clause (c) of the said clause shall affect the operation of any existing law in so far as it imposes, or prevent the State from making any law imposing, in the interests of  4 [the sovereignty and integrity of India or] public order or morality, reasonablerestrictions on the exercise of the right conferred by the said sub-clause. 


(5) Nothing in 5[sub-clauses (d) and (e)] of the said clause shall affect the operation of any existing law in so far as it imposes, or prevent the State from making any law imposing, reasonable restrictions on the exercise of any of the rights conferred by the said sub-clauses either in the interests of the general public or for the protection of the interests of any Scheduled Tribe. 


(6) Nothing in sub-clause (g) of the said clause shall affect the operation of any existing law in so far as it imposes, or prevent the  State from making any law imposing, in the interests of the general public, reasonable restrictions on the exercise of the right conferred
by the said sub-clause, and, in particular, 6[nothing in the said sub-clause shall affect the operation of any existing law in so far as it relates to, or prevent the State from making any law relating to,— 

(i) the professional or technical qualifications necessary for practising any profession or carrying on any occupation, trade or business, or


(ii) the carrying on by the State, or by a corporation owned or controlled by the State, of any trade, business, industry or service, whether to the exclusion, complete or partial, of citizens or otherwise.]

 


குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

2 comments:

  1. வணக்கம் நண்பரே... பொருத்தமான நல்லதொரு பதிவு நிறைய விடயங்கள்
    எனது பதிவுக்கு வருகை தந்து கருத்துரையோடு தமிழ் மண வாக்கும் அளித்தமைக்கு நன்றி
    தங்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே...

      தங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்

      Delete